Category Archives: பைத்தான் படிக்கலாம் வாங்க

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – பைத்தான் 28

பைத்தான்: வா! நந்தா! வா! என்னை மறந்துட்டேல்ல! நந்தன்: அப்படியெல்லாம் இல்லை! கொஞ்ச நாளா வேலை அதிகம்! அதான், உன்ன பார்க்க வரல! மத்தபடி ஐ லவ் யூ தான்! பைத்தான்: நீ இல்லாத இந்த நாட்கள்ல நெறய மாறிப் போச்சு! நந்தன்: அப்படி என்ன மாறிச்சு! பைத்தான்: தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்துல மூணாவது மொழி உண்டுன்னு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சொல்லிட்டாரு! நந்தன்: என்னது?! மூணாவது மொழியா? பைத்தான்: ஆமாப்பா! மூணாவது மொழியா சி, சி++, ஜாவா… Read More »

கால்குலேட்டர் பண்ணலாம் வாங்க – பைத்தான் 27

முன்பு ஒரு காலத்தில் காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தச் சிங்கத்திற்குச் செயற்கூறு(Function) என்று பெயர். அந்தச் சிங்கத்தைப் பற்றி இதற்கு முன்பே நாம் படித்திருக்கிறோம். நினைவிருக்கிறதா? அந்தச் சிங்கத்தைக் கொண்டு தான் கால்குலேட்டர் உருவாக்கப் போகிறோம். சிங்கத்தைக் கொண்டு கால்குலேட்டரா – எப்படி என்கிறீர்களா? முன்பு அந்தச் சிங்கத்தைச்(செயற்கூற்றைப்) பயன்படுத்தத் தெரிந்து கொண்டிருந்தோம். இப்போது நாமே உருவாக்கப் போகிறோம். உருவாக்குவோமா? செயற்கூறு(Function) என்றால் என்ன: இந்தத் தலைப்பை எல்லாம் முன்னரே படித்து விட்டோம். பத்து… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 26 – தரவைத் திறப்போம் வாருங்கள்!

தமிழின் மிகப் பெரிய சிறப்பே அதன் வார்த்தை வளம் தான்! ஆங்கிலத்தில் இல்லாத சிறப்புக் கூடத் தமிழில் உண்டு. ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போமே! Laptop என்றொரு வார்த்தை – அதைத் தமிழில் மடிக்கணினி என மொழிபெயர்த்திருக்கிறார்கள். மடிக்கணினி என்பதில் இரண்டு அர்த்தங்கள் இருக்கின்றன, பாருங்கள் – மடியில் வைக்கும் கணினி, மடித்து வைக்கும் கணினி. நன்றாக இருக்கிறது அல்லவா? இதே போல, நிறைய வார்த்தைகளைச் சொல்லலாம். அப்படி ஒரு வார்த்தை தான் – தரவு! தரவு என்றால்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 25 – பைத்தான் 2, பைத்தான் 3

வாசகர் கடிதங்கள்: அன்புள்ள மு, உங்களுடைய பைத்தான் பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். அதில் இருந்து பைத்தான், ஓர் எளிய மொழியே என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டேன். ஆனாலும் இணையத்தில் தேடும் போது பைத்தான் என்று எழுதாமல் பைத்தான் 3 என்று எழுதுகிறார்கள். அதென்ன 3? உங்கள் பதிலுக்குக் காத்திருக்கிறேன். வைதேகி. அன்புள்ள வைதேகி, நிரல்மொழிகள் (programming languages), இயங்குதளங்கள்(OS) ஆகியவற்றிற்குப் பதிப்புகள் உள்ளன. புத்தகங்களில் முதல் பதிப்பு, இரண்டாம் பதிப்பு என்கிறார்களே! அது போல் தான்!… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 24 – திருடன் போலீஸ் கதை

திருடன் போலீஸ் கதை பார்ப்போமா? புகழ்பெற்ற இந்தியக் கணிதவியலாளர் சகுந்தலாதேவி. அவர் எழுதிய புகழ் பெற்ற புத்தகம், ‘Puzzles to Puzzle You‘. அந்தப் புத்தகத்தில் ஒரு திருடன் போலீஸ் புதிர்க்கதையை அவர் எழுதியிருப்பார். அந்தப் புதிரைப் போல ஒரு புதிரைச் சொல்கிறேன். அந்தப் புதிருக்கான விடையை யோசித்துச் சொல்லுங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்த கதை இது.  நகைகளைத் திருடிக் கொண்டு ஒருவர் ஓடிவிட்டதாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. அப்படி அவர் நகைகளுடன்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 23 – தெனாலிராமன் – கிடைத்ததில் சம பங்கு

தெனாலிராமன் கதைகள் படிக்காத குழந்தைகள் கிடையாது. அறிவுக்கூர்மைக்கும் சில நேரங்களில் சேட்டைக்கும் தெனாலிராமனைச் சொல்வார்கள். கிருஷ்ண தேவராயரின் அவையில் விகடகவியாக இருந்த தெனாலிராமன், மன்னர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பல நேரங்களில் நகைச்சுவையாகச் சொல்வதில் வல்லவர். மன்னருக்குச் சரியான அறிவுரை சொல்பவர்கள் இல்லை என்றால் அவர்கள் நிறைய தவறுகள் செய்யத் தொடங்கி விடுவார்கள் அல்லவா? இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் (448) என்கிறார் திருவள்ளுவர். எவ்வளவு தான் சிறந்த அரசராக… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 22 – காதலா? கணக்கா? கனவா?

முந்தைய பதிவில் மதனும் கார்த்திகாவும் கனவிலும் சந்திக்கத் தொடங்கியிருந்தார்கள் என்று பார்த்தோம் அல்லவா? ‘நேற்று இராத்திரி தூக்கத்தில் ஒரு கனவு’ என்றாள் கார்த்திகா. தன்னுடைய கனவு அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாத மதன், ‘கனவுக்கெல்லாமா காலையிலேயே கூப்பிடுவாய்?’ என்று கேட்டான். ‘கனவில் நாம் இருவரும் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இரயில் ஏறுகிறோம்’, அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன், என்றாள் கார்த்திகா. ‘நாம் இருவருமா?’ என்று விழி முழுதும் வியப்பை வைத்துக் கொண்டான் மதன். ‘ஆமாங்க மதன்! ஆனால் கன்னியாகுமரி போய்ச்… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 21 – காத்து வாக்குல ரெண்டு காதல்

மதன், கார்த்திகா இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் மென்பொறியாளர்கள். மதனுக்கு லினக்ஸ் அத்துப்படி! கார்த்திகாவுக்கு மதனைக் காட்டிலும் வேலை அனுபவம் குறைவு! விண்டோசே கதி என்று இருந்த கார்த்திகாவுக்கு லினக்சின் ஒவ்வொரு படியாக மதன் காட்ட, கார்த்திகா, லினக்சில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தாள். லினக்சைக் காதலித்த மதனுக்கு, லினக்சைக் காதலிக்கத் தொடங்கிய கார்த்திகாவையும் பிடித்துத் தான் இருந்தது. அதிலும் ஒரு நாள் அலுவலகத்தில் நடந்த பாட்டுப் போட்டியில் மதனுக்குப் போட்டியாகக் கார்த்திகா பாடிய ‘யமுனை ஆற்றிலே… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 20 – நீங்களும் துப்பறியலாம்!

அண்ணன் தம்பிகளான வியன், பாரி இருவரின் வயதை எப்படிக் கண்டுபிடிப்பது? கதையில் நமக்குக் கிடைத்திருக்கும் துப்புகள்[தடயங்கள்] என்னென்ன? 1. வியன் பள்ளிக்கூடம் போகும் சிறுவன். பாரி, இன்னும் பள்ளிக்குப் போகாத மழலை. 2. வியனுக்கும் பாரிக்கும் இடையில் வயது வேறுபாடு ஆறு வயது. 3. இரண்டு பேரின் வயதிற்குமான பொது வகுத்தி வியனின் வயது. இந்தக் குறிப்புகளின் படி, பாரி வியன் 1           7 2           8 3           9… Read More »

பைத்தான் படிக்கலாம் வாங்க – 19: வியன், பாரி வயதைக் கண்டுபிடித்த அன்வர்

யாழினி, குழலி, நிறைமதி மூவரும் தோசை சாப்பிட்ட கதையைப் பார்த்தோம் அல்லவா? அதில் யார் யார் எத்தனைத் தோசை தின்றார்கள் என்று பார்த்து விடுவோமா? கடைசியில் மீதம் இருந்த தோசை 8. இது நிறைமதி தின்றது போக மீதி வைத்த எண்ணிக்கை. நிறைமதி தின்றது மூன்றில் ஒரு பங்கு. அப்படியானால் இப்போது இருக்கும் எட்டுத் தோசை என்பது மூன்றில் இரண்டு பங்கு. மூன்றில் இரண்டு பங்கு என்பது எட்டு என்றால், மூன்றில் ஒரு பங்கு நான்கு. அப்படியானால்… Read More »