உள்ளடக்கத்துக்குச் செல்

சிலிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 3°51′N 101°29′E / 3.850°N 101.483°E / 3.850; 101.483
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 64: வரிசை 64:
1890 - 1900- ஆம் ஆண்டுகளில் சிலிம்; சிலிம் ரீவர்; துரோலாக்; பேராங் போன்ற இடங்களில் பல ரப்பர்த் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிலிம் ரீவர் தோட்டம்; சிலிம் தோட்டம்; லீமா பெலாஸ் தோட்டம்; உலு சிலிம் தோட்டம்; சுங்கை பீல் தோட்டம் என பல ரப்பர்த் தோட்டங்கள்.
1890 - 1900- ஆம் ஆண்டுகளில் சிலிம்; சிலிம் ரீவர்; துரோலாக்; பேராங் போன்ற இடங்களில் பல ரப்பர்த் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிலிம் ரீவர் தோட்டம்; சிலிம் தோட்டம்; லீமா பெலாஸ் தோட்டம்; உலு சிலிம் தோட்டம்; சுங்கை பீல் தோட்டம் என பல ரப்பர்த் தோட்டங்கள்.


காடுகளை வெட்டுதல்; ரப்பர் மரங்களை நடவு செய்தல்; ரப்பர் பால் சேகரித்தல் போன்ற வேலைகளுக்காகத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களின் அயராத உழைப்பினால் மலாயாவின் காலனித்துவப் பிரித்தானிய ஆட்சியும் செழிப்புற்றது.
காடுகளை வெட்டுதல்; ரப்பர் மரங்களை நடவு செய்தல்; ரப்பர் பால் சேகரித்தல் போன்ற வேலைகளுக்காகத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களின் அயராத உழைப்பினால் மலாயாவின் காலனித்துவப் பிரித்தானிய ஆட்சியும் செழிப்புற்றது.<ref name="Gangulee">{{cite book|last=Gangulee|first=N.|title=Indians in the Empire Overseas: A Survey|publisher=The New India Publishing House|location=London|year=1947|page=p 175 26Ibid., p 199}}</ref>


===சிலிம் ரீவர் ஒரு குட்டி மெட்ராஸ்===
===சிலிம் ரீவர் ஒரு குட்டி மெட்ராஸ்===

15:42, 1 மே 2021 இல் நிலவும் திருத்தம்

சிலிம்
Slim
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1800
பரப்பளவு
 • மொத்தம்410 km2 (160 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்21,900
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
இணையதளம்https://ptg.perak.gov.my/portal/web/muallim

சிலிம் (Slim) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு துணை மாவட்டம். முன்பு பத்தாங் பாடாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2016-ஆம் ஆண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட முவாலிம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இணைக்கப் பட்டது.

சிலிம் என்பதற்குச் செலிம் (Selim); சிலிம் கிராமம் (Slim Village); கம்போங் சிலிம் (Kampong Slim); சிலின் (Slin) எனும் வேறு பெயர்களும் உள்ளன.

சிலிம் கிராமம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 95 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 108 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. சிலிம் கிராமத்திற்கு மிக அருகாமையில் உள்ள பெரிய நகரம் தஞ்சோங் மாலிம் ஆகும்.

வரலாறு

மலாயாவில் காலனித்துவப் பிரித்தானிய ஆட்சியின் போது பிரித்தானிய முதலாளிமார்கள் ரப்பர் தோட்டங்களைத் தோற்றுவித்தார்கள். அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டார்கள்[1] .

1890 - 1900- ஆம் ஆண்டுகளில் சிலிம்; சிலிம் ரீவர்; துரோலாக்; பேராங் போன்ற இடங்களில் பல ரப்பர்த் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிலிம் ரீவர் தோட்டம்; சிலிம் தோட்டம்; லீமா பெலாஸ் தோட்டம்; உலு சிலிம் தோட்டம்; சுங்கை பீல் தோட்டம் என பல ரப்பர்த் தோட்டங்கள்.

காடுகளை வெட்டுதல்; ரப்பர் மரங்களை நடவு செய்தல்; ரப்பர் பால் சேகரித்தல் போன்ற வேலைகளுக்காகத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களின் அயராத உழைப்பினால் மலாயாவின் காலனித்துவப் பிரித்தானிய ஆட்சியும் செழிப்புற்றது.[2]

சிலிம் ரீவர் ஒரு குட்டி மெட்ராஸ்

1900-ஆம் ஆண்டுகளில் சிலிம் ரீவர், பேராங், பீடோர் போன்ற நகரங்கள் வளர்ச்சிப் பெற்றதற்கு அந்த நகரங்களின் சுற்று வட்டாரத்தில் இருந்த ரப்பர்த் தோட்டங்களும் ஒரு காரணமாக அமைகின்றன. 1940-ஆம் ஆண்டுகளில் தஞ்சோங் மாலிம் நகரத்தைக் காட்டிலும் சிலிம் ரீவர் நகரில் தான் தமிழர்களின் நடமாட்டங்கள் அதிகமாக இருந்தன. குட்டி மெட்ராஸ் என்றும் சொல்லப் பட்டது.

அந்தக் காலக் கட்டத்தில், சிலிம் ரீவர் நகரில் தமிழர்கள் மூலைக்கு மூலை ஒட்டுக் கடைகள்; வெற்றிலைப் பாக்குக் கடைகள்; பலசரக்குக் கடைகள் வைத்து இருந்தார்கள். தவிர தமிழர்களின் மளிகைக் கடைகள்; துணிமணிக் கடைகள்; சிற்றுண்டிச் சாலைகளும் இருந்தன.

நாட்டின் மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் சிலிம் பகுதியில் இருந்த பல ரப்பர் தோட்டங்கள் காணாமல் போய் விட்டன. அங்கு வாழ்ந்த தமிழர்களும் அவர்களின் வாரிசுகளும் கால வெள்ளத்தில் கரைந்து போய் விட்டார்கள்.

மேற்கோள்கள்

  1. Arnold Lloyd's, Wright (1908). Twentieth century impressions of British Malaya. Great Britain: Greater Britain Publishing Company. p. 420.
  2. Gangulee, N. (1947). Indians in the Empire Overseas: A Survey. London: The New India Publishing House. p. p 175 26Ibid., p 199. {{cite book}}: |page= has extra text (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலிம்&oldid=3140315" இலிருந்து மீள்விக்கப்பட்டது