உள்ளடக்கத்துக்குச் செல்

பாதை தெரியுது பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதை தெரியுது பார்
இயக்கம்நிமாய் கோஷ்
தயாரிப்புகுமாரி பிலிம்ஸ்
கதைகதை ஆர். கே. கண்ணன்
இசைஎம். பி. சீனிவாசன்
நடிப்புகே. விஜயன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
எஸ். வி. சுப்பைய்யா
டி. கே. பாலச்சந்திரன்
முத்துராமன்
எல். விஜயலட்சுமி
சாந்தினி
சுந்தரிபாய்
எஸ். ஆர். ஜானகி
வெளியீடுநவம்பர் 18, 1960
நீளம்15128 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாதை தெரியுது பார் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிமாய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. விஜயன், எஸ். வி. சகஸ்ரநாமம், முத்துராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ரெயில்வேயில் பணியாற்றிய கே. விஜயன் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். திரைக்கதையை மார்க்சியவாதியான ஆர். கே. கண்ணன் எழுத, பாடல்களை கே. சி. எஸ். அருணாசலம், ஜெயகாந்தன் ஆகியோர் எழுதினார்கள். எம். பி. சீனிவாசன் பாடல்களுக்கு இசையமைத்தார். முதலாளித்துவப் போக்குகளை எதிர்த்து எடுக்கப்பட்ட இப்படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் இத்திரைப்படப் பாடல்கள் பெரு வெற்றியை அடைந்தன. படம் தோல்வியடைந்தாலும் தமிழில் வந்த சிறந்த படத்திற்கான குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றது.

பாடல்கள்

  • தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே.. (பாடல்: ஜெயகாந்தன், பாடியவர்கள: பி. பி. சிறிநிவாஸ், எஸ். ஜானகி)
  • சின்னசின்ன மூக்குத்தியாம் சிவப்புக்கல்லு மூக்குத்தியாம்.. (பாடல்: கே. சி. எஸ். அருணாசலம், பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்)
  • உண்மை ஒரு நாள் வெளியாகும்.. (பாடியவர்: திருச்சி லோகநாதன்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதை_தெரியுது_பார்&oldid=1026269" இலிருந்து மீள்விக்கப்பட்டது