பிரியாத வரம் வேண்டும்
பிரியாத வரம் வேண்டும் | |
---|---|
இயக்கம் | கமல் |
தயாரிப்பு | நிகிலா எண்டர்பிரைஸஸ் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | பிரசாந்த் ஷாலினி ஜனகராஜ் கிருஷ்ணா மணிவண்ணன் நிழல்கள் ரவி வையாபுரி ஜோமோல் |
வெளியீடு | 2001 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பிரியாத வரம் வேண்டும் 2001 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.1999 இல் மலையாளத்தில் வெற்றிப் பெற்ற நிறம் என்கின்ற படத்தின் தமிழாக்கம்.2000களில் தமிழ்த் திரையுலகில் பிரபலமாக இருந்த பிரசாந்த் மற்றும் ஷாலினி முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க, இத்திரைப்படத்தை நிறம் படத்தை இயக்கிய கமலே தமிழிலும் இயக்கினார். இத்திரைப்படத்தில் மனோரமா, ஜனகராஜ், மணிவண்ணன், வையாபுரி, கோவை சரளா என எண்ணற்ற நட்சத்திர நடிகர் பட்டாளங்களைக் கொண்டுத் தயாரிக்கப்பட்டிருந்தது.இத்திரைப்படத்திற்கு எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 2001-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.
கதை
சஞ்சய் (பிரசாந்த்) மற்றும் நிதி (ஷாலினி) சிறுவயது முதலே இணைபிரியா நண்பர்கள். அக்கம் பக்கத்து வீடுகளில் வசிக்கும் இருவரும் பள்ளிபருவம் முதல் கல்லூரி பருவம் வரை, காலையில் கண் விழிக்கும் நேரத்திலிருந்து இரவு தூங்கப்போகும் நேரம் வரை ஒன்றாகவே வளருகின்றனர், படிக்கின்றனர், ஒன்றாகவே நேரத்தைச் செலவிடுகின்றனர். கல்லூரியில் சஞ்சயை சினேகாவும் (ஜோமோல்), நிதியை பிரவீனும் (கிருஷ்ணா) காதலிக்கின்றனர். ஒருகட்டத்தில் நிதியின் மேல் காதல் வயப்பட்ட பிரவீன் நிதியிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார். இந்நிலையில் நிதி கல்லூரி சுற்றுலாவிற்காக ஒரு வாரகாலம் பெங்களூர் செல்கிறார். இந்த ஒரு வாரக்காலத்தில் நிதியின் பிரிவை உணரும் சஞ்சய் நிதி இல்லாமல் தன்னால் இருக்க முடியாததையும் நிதியை அவன் காதலிப்பதையும் வீட்டின் வேலைக்காரி சஞ்சய்க்கு உணர்த்துகின்றார். எனினும் சஞ்சய் இருவரின் நட்பின் காரணமாக தனது காதல் எண்ணங்களை நிதியிடம் மறைக்கின்றான். இதை அறியாத நிதி பிரவீனின் காதலை ஏற்றுக்கொள்கிறார். நிதி மற்றும் பிரவீன் வீடுகளில் இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. இந்த சமயங்களில் நிதியும் தன்னால் சஞ்சயை பிரிந்து இருக்க முடியாது என்பதை உணருகின்றார் சஞ்சயிடம் அதைத் தெரிவிக்கிறார். சஞ்சயும் தனது அதே நிலையை நிதியிடம் தெரியப்படுத்தி இருவரும் இறுதியில் இணைகின்றனர்.
நடிகர்,நடிகைகள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்
- மணிவண்ணன்-தனசேகரன்
படத்தயாரிப்புச் செய்திகள்
1999இல் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிப்பெற்ற நிறம் படத்தினைத் தொடர்ந்து அப்படத்தினை தமிழில் மொழியாக்கம் செய்வதன் மூலம் அப்படத்தின் இயக்குனர் கமல் தமிழில் அறிமுகம் ஆவதென முடிவு செய்தார்.