உள்ளடக்கத்துக்குச் செல்

காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காளையார்கோயில் தமிழ் நாட்டத்திலுள்ள் சிவகங்கை மாவட்டத்தில், காளையார்கோயில் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் காளையார்கோவில் அருகிலுள்ள தலைகிராமமான மேட்டுப்பட்டியைச் சேர்ந்த மக்களால் கட்டப்பட்டது. மருது சகோதரர்கள் பிறக்கும் முன்னரே இக்கோயில் கட்டப்பட்டதாகும். வரலாற்றுமிக்க இடத்தை ஆட்சி செய்தது மட்டுமே மருத பாண்டியர்கள் ஆவர்.  இங்கே ஒரு மிகப்பெரிய சிவன் கோயில் உள்ளது.  இக்கோயிலின்  தேவஸ்தானம் மற்றும் தேவக்கோட்டை  ஜமீன்  குடும்பத்தாரும்,  இத்திருகோயிலை நிர்வாகம் செய்கிறார்கள்.

இடம்

காளையார்கோயில் சிவகங்கை மாவட்டத்திற்கு, 18 கி.மீ. கிழேக்கே உள்ளது,

பெயர் கோயில்

காளையார்கோயில் என்னும் பெயர், காலீஸ்வரர் கோயில் என்னும் பெயரிலிருந்து பெற்றது. காலீஸ்வரர் என்னும் சொல் வழக்கமொழியில் மருவி காளையார் என்றானது.   சங்க காலத்தில், இந்த இடம்  கானப்பேர்  என்று அழைக்கப்பட்டது. இதற்கான சான்று,  புறநானூற்றில்,  21ஆம் பாடலில் ஐயூர் மூலங்கிழார்,  சங்க  கால கவிஞ்ர்,  குறிப்பிட்டுள்ளார்.  கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் சுந்தர மூர்த்தி நாயனார், இக்கோயிலிள்ள்  மூலவரை காளை என்று விவரித்துப் பாடினார். அன்று முதல், இத்திருக்கோயில்  காளையார்கோயில்  என்று  அழைக்கப்பட்டது.

கோயில் அமைப்பு

இத்திருக்கோயிலை, ஒரு உயரமான ராச கோபுரம் (150 அடி) அலங்கரிக்கிறது. ஒரு தெப்பக்குளம்,  மண்டப்பத்துடன்  உள்ளது. அதற்கு 'ஆணை மாடு' என்ற பெயர். ஐராவதம், தேவர் இந்திராவுடைய யானை உருவாக்கிய குளம் என்ற ஐதீகம் உள்ளது.[1]

உள்ளே மூன்று மூர்த்திகள், படைப்பு, பாதுகாப்பு மற்றும் நிறைவு  ஆகியச்  செயல்களை  குறிக்கின்றன.  மூலவரான சிவனை, இங்கே காலீஸ்வரர், சோமேஸ்வரர் மற்றும் சுந்தேரஸ்வரர் என்று  அழைக்கிறார்கள். அவரது துணைவியாரான  பார்வதியை, ஸ்வர்நாம்பிகை, சௌந்தர்ய நாயகி மற்றும் மீனாட்சி  என்று அழைக்கிறார்கள்.

மன்னர்களின் கோட்டை

காளையார்கோயில், சங்கக் காலங்களிலிருந்து சிவகங்கை மன்னர்களின் கோட்டையாகவே  செயல்ப்பட்டது. சுதந்திர போரட்ட வீரர்களாகிய முத்து வடுக நாத்த தேவர் மற்றும்  மருது சகோதரர்களின் கோட்டையாகவும் திகழ்ந்தது.

வரலாறு

25 ஜூன் 1772, ஆங்கிலேயப் படைகள், கர்னல். ஜோசப் ஸ்மிட் மற்றும் கேப்டன். போஜூர் தலைமையில் காளையார் கோயிலை நோக்கி அணிவகுத்தனர். சிவகங்கையின் இரண்டாவது ராஜா , முத்து வடுகநாத தேவர் (1750–1772) மற்றும் மருது சகோதரர்கள் அவர்களை எதிர்த்து கோயிலை பாதுகாக்க முயன்றனர். இதில் ராஜா முத்து வடுகநாதர் ம்ற்றும் பல வீரர்கள் உயிர்மாண்டனர். படையெடுத்த  ஆங்கிலேயர்கள்  50,000 பகோடாஸ் மதிப்புள்ள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

காளையார் கோயில் சிவகங்கை தேவஸ்தானத்திருக்கு சொந்தமானது. கோயில் சிறிது காலம் பூட்டி  வைக்கப்பட்டது. பின்னர், இதனை சீர் அமைக்க, கணிசமான பழுது பார்க்கும் வேலைகள் நடந்தன. இதற்கான செலவை, தெவக்கோட்டை ஜமீன்தார், எல் அர் எம் அருணாச்சலம் செட்டியார் ஏற்றுக்கோண்டார்.

திருவிழாக்கள்

காலீஸ்வரர் திருவிழா, தை மாதம் கொண்டாடப்படுகிறது. 'பூசம்' அன்று, தேர் இழுக்கப்படும். 'சோமேஸ்வரர்  பிரமோட்சவம்' வைகாசி மாதத்தில் நடக்கும்.

மேலும்

குறிப்புகள்