காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில்
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) காளீஸ்வரர் காளையார்கோயில் கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
தேவாரம் பாடல் பெற்ற காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கானப்பேர் |
அமைவிடம் | |
ஊர்: | காளையார்கோவில் |
மாவட்டம்: | சிவகங்கை மாவட்டம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சொர்ணகாளீஸ்வரர் |
தாயார்: | சொர்ணவல்லி |
தல விருட்சம்: | கொக்கு மந்தாரை |
தீர்த்தம்: | கஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர் |
சொர்ணகாளீஸ்வரர் கோயில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ளது. சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]
அமைவிடம்
சென்னை-ராமேஸ்வரம் அல்லது திருச்சி-மானாமதுரை இருப்புப்பாதையில் சிவகங்கை தொடருந்து நிலையத்தின் அருகில் உள்ள காளையார்கோயிலில் உள்ளது. சிவகங்கை நகரத்திலிருந்து கிழக்கே 20 கிமீ தொலைவில் உள்ளது.
தொடர்பு எண்: 04575-232516 , 9486212371.[2]
இறைவன், இறைவி
பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவரும், அம்பாளும் மட்டுமே இருப்பர். காஞ்சிபுரம் ஓணகாந்தன்தளியில் மூன்று சிவன் சன்னதிகள் உள்ளன. அம்பாளுக்கு தனி சன்னதி கிடையாது.
ஆனால், அதி அற்புதமான இத்தலத்தில் மூன்று இறைவனும், மூன்று இறைவியும் எழுந்தருளுகின்றனர்.[3]
சொர்ணகாளீஸ்வரர் - சொர்ணவல்லி
சோமேசர் - சவுந்தரநாயகி
சுந்தரேசுவரர் - மீனாட்சி
இதில் தேவாரப் பதிகம் பெற்றவர் சொர்ணகாளீஸ்வரர்.[4]
தெப்பக்குளம்
காளையார் கோயில் தெப்பக்குளம் என்றும் ஆனைமடு குளம் என்றும் அழைக்கப்படும் இக்குளம் பல நூறு ஆண்டுகட்கு முன் வெட்டப்பட்டது.[5]
1900கள் தொடக்கத்தில் தேவகோட்டை ஜமீன்தார் அள.அரு.இராம.அருணாச்சலம் செட்டியார் அவர்கள் இக்குளத்தை சதுர வடிவமாக சீர்படுத்தி கல்திருப்பணி செய்து, மேலும் அழகுற மதுரை வண்டியூர் தெப்பக்குளம் நீராழி மண்டபத்தை ஒத்து இக்குளத்தின் நடுவே அற்புதமான நீராழி மண்டபம் ஒன்றை அமைத்துள்ளார்கள்.[6]
திருப்பணி
அண்மையில் இக்கோயிலில் திருப்பணி நிறைவுற்றுள்ளது.
மேற்கோள்கள்
- ↑ அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் கோயில்
- ↑ "தொடர்பு எண்". Saivam.
{{cite web}}
:|first=
missing|last=
(help); Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "மூன்று இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றார்கள்". DINAMALAR.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "தேவாரப் பதிகம் பெற்றவர்". SAIVAM.
{{cite web}}
:|first=
missing|last=
(help); Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ டாக்டர் கே.ராஜய்யன். "முதல் விடுதலைப் போர்" புத்தகம்.
- ↑ H.V. Lanchester (1918). https://archive.org/details/dli.csl.8457. Town Planning In Madras. pp. Pic-1.
{{cite book}}
:|contribution-url=
missing title (help); Cite has empty unknown parameter:|Town Planning In Madras=
(help)
வெளி இணைப்புகள்
- அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்
- கானப்பேர் (திருக்கானப்பேர்)
- திருக்கானப்பேர் - திருக்கானப்பேரூர்-காளையார்கோயில்
படத்தொகுப்பு
-
மற்றொரு கோபுரம்
-
முன் மண்டபம்
-
உள் வாயில்
-
உள்ளிருந்து கோபுரம்
-
உள் மண்டபம்
-
கோயிலின் வெளித்தோற்றம்
காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தல எண்: 10 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 201 |