தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற தருமபுரம் யாழ்முறிநாதர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10°55′09″N 79°49′08″E / 10.9192°N 79.8189°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருத்தருமபுரம் |
பெயர்: | தருமபுரம் யாழ்முறிநாதர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தருமபுரம் |
மாவட்டம்: | காரைக்கால் |
மாநிலம்: | புதுச்சேரி |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | தருமபுரீசுவரர் (யாழ்முறிநாதர்) |
தாயார்: | மதுர மின்னம்மை (தேனாமிர்தவல்லி) |
தல விருட்சம்: | வாழை |
தீர்த்தம்: | தரும தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் |
ஆகமம்: | மகுடாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகாசி திருவிழா, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
தொன்மை: | புராதனக்கோயில் |
தருமபுரம் யாழ்முறிநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 51ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
[தொகு]சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும்.
இறைவன், இறைவி
[தொகு]இக்கோயிலில் உள்ள இறைவன் தருமபுரீசுவரர்,இறைவி மதுரமின்னம்மை.
அமைப்பு
[தொகு]இக்கோயிலின் ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில் பலி பீடம், கொடி மரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் இடது புறம் தேனாமிர்தவல்லி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். அடுத்துள்ள வாயிலைக் கடந்து செல்லும்போது பலி பீடமும், நந்தியும் உள்ளன. கருவறையில் மூலவர் யாழ்முரிநாதர் லிங்கத்திருமேனியாக உள்ளார். மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, அடிமுடிகாணா அண்ணல், விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் மடப்பள்ளி உள்ளது. தொடர்ந்து விநாயகர், நால்வர், சந்தானாசார்யார், 63 நாயன்மார்கள் உள்ளனர். அடுத்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், காசி விசுவநாதர், சந்திரசேகர், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். இத்திருச்சுற்றில் சூரியன், சந்திரன், பைரவர், நவக்கிரகம் ஆகியோர் உள்ளனர். நடராசர் சன்னதியும் உள்ளது.
திருநீலகண்ட யாழ்ப்பாணர்
[தொகு]திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத்தலமான இதில் திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்திற்கு யாழ் அமைக்க திருநீலகண்ட யாழ்ப்பாணர் முயல, யாழில் இசை அடங்காது யாழ் முரிந்த தலமாதலால் யாழ்முரி என்ற சிறப்புப் பெற்ற தலம்.[1]
குடமுழுக்கு
[தொகு]இக்கோயிலின் குடமுழுக்கு 9 பிப்ரவரி 2017 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 209
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருத்தெளிச்சேரி பார்வதீஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 51 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 51 |