சுவப்னா பட்கர்
சுவப்னா பட்கர் | |
---|---|
சுவப்னா பட்கர் | |
பிறப்பு | மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம் |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர் |
வலைத்தளம் | |
drswapnapatker |
சுவப்னா பட்கர் (Swapna Patker) என்பவர் ஒரு பெருநிறுவன பயிற்சியாளர் [1], வணிகப் பெண்மணி ஆவார். [2] 2015 ஆம் ஆண்டு சிவசேனா நிறுவனர் பாலாசாஹேப் தாக்கரேயின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான பால்கடு என்ற மராத்தி திரைப்படத்தை தயாரித்ததற்காக நன்கு அறியப்பட்டவர். இவர் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான தி ராயல் மராத்தா என்டர்டெயின்மென்ட்டின் தலைமை நிர்வாக இயக்குநராக உள்ளார். அவர் டி.என்.ஜி டைம்சின் நிறுவனரும், ஆசிரியரும் ஆவார். இது அரசியல், வணிகம், விளையாட்டு, பொழுதுபோக்கு தொடர்பான செய்திகளை உள்ளடக்கிய ஒரு இணைய செய்தி வலைவாசலாகும். [3] [4] சுவப்னா பட்கர் 2013 இல் வெளியான ஜீவன் பண்டா, [5] என்ற மராத்தி மொழி சுய முன்னேற்றப் புத்தகத்தின் ஆசிரியர் ஆவார். [6] [7] [8] [9]
பெருநிறுவன பயிற்சியாளராக
சுவப்னா பட்கர் மும்பையைச் சேர்ந்த பெருநிறுவன பயிற்சியாளர் மற்றும் "உடல் நல ஆலோசகர்" ஆவார். [10] இவர் மைண்ட்வொர்க்ஸ் டிரெய்னிங் சிஸ்டம்ஸ் என்னும் ஒரு ஆரோக்கிய மையம் மற்றும் இணைய வழி ஆலோசனை மற்றும் பயிற்சி அமைப்பை நிறுவினார். டாக்டர். ஸ்வப்னா பட்கர் குழந்தைகள், பெரியவர்கள், வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனைகளில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் உணர்ச்சிகளைக் கையாளுதல், போதை மருந்து, இணையருக்கிடையிலான உறவு ஆலோசனை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார். மேலும் குழந்தைகள், பெற்றோர்கள், பெருநிறுவனங்களுக்கான ஆரோக்கிய பயிற்சியில் இவர் நிபுணத்துவம் பெற்றவராக உள்ளார். இவர் கனவு ஆய்வாளராக, அவர் ஒருவரின் சொந்த கனவுகளுக்கான விளக்கம் மற்றும் அறிவாற்றல் (CBT) மற்றும் உணர்ச்சி (REBT) சிகிச்சைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நடப்பு வாழ்க்கை சிக்கல்களுக்கு அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் வழிகாட்டுகிறார். இந்தியாவில் லைஃப் கோச்சிங் பயிற்சியை நடத்தி வருகிறார். [11] [12]
எழுத்தாளராக
மனப் பயிற்சியைத் தவிர, பிற படைப்புத் துறைகளிலும் சுவப்னா பட்கர் தீவிரமாக இருக்கிறார். ஜிவன்ஃபுண்டா என்ற புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். ஒவ்வொரு மாதமும் 'கார்ப்பரேட் இந்தியா' பத்திரிகையில் இவர் எழுதி வந்துள்ளார். இவர் டைனிக் சமனாவில் கார்ப்பரேட் மந்திரம் & அதவ்த்யாச்சா மனுஸ் என்ற பத்திகளை எழுதிவந்துள்ளார். [13] [14] [15]
தயாரிப்பாளராக
2015 ஆம் ஆண்டில், தி ராயல் மராத்தா என்டர்டெயின்மென்ட் என்ற பதாகையின் கீழ், சுவப்னா பட்கர் மறைந்த பால் தாக்கரேயின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான பால்கடு என்ற மராத்தி மொழித் திரைப்படத்தைத் தயாரித்தார். படத்திற்கு பாடல் வரிகளையும் எழுதினார். [16] [17] [18] [19] [20]
உணவக உரிமையாளராக
ஒரு பெண் தொழில்முனைவோராக, இவர் மும்பையில் பல சமையல் மற்றும் சிறந்த உணவு குடும்ப உணவகமான Saffron 12 ஐ நிறுவினார். 12 மார்ச் 2013 அன்று, சாப்ரான் 12 வெளியீட்டு விழாவில், சஞ்சய் தத், பப்பி லஹரி, ஹ்ரிஷிதா பட், முதாசிர் அலி, தாஜ்தர் அம்ரோஹி, சுரேஷ் வாட்கர், வைப் பத்மா, தலிப் தஹில், கேரி ரிச்சர்ட்சன், முரளி சர்மா ஆகியோர் விருந்தினர்களாகக் காணப்பட்டனர். [21] [22] [23] [24] [25]
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் போலி மருத்துவப் பட்டம் பெற்ற வழக்கில் 2021 சூன் 8 அன்று மும்பையில் பாந்த்ரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். [26] தான் கைது செய்யப்பட்டதை "பழிவாங்கும் கைது" என்று பட்கர் குற்றம் சாட்டினார். பம்பாய் உயர் நீதிமன்றம் 27 சூன் 2021 அன்று பட்கருக்கு ஜாமீன் வழங்கியது
மேற்கோள்கள்
- ↑ "It's time we concentrate on mental health". https://www.afternoonvoice.com/time-concentrate-mental-health.html.
- ↑ "A treat for city gourmets". 30 April 2013. http://mid-day.com/articles/a-treat-for-city-gourmets/211146.
- ↑ "TNG Times". https://tngtimes.com/.
- ↑ "Editorial TNG Times". https://tngtimes.com/category/editorial/.
- ↑ "स्वप्ना पाटकर यांच्या 'जीवन फंडा'चे प्रकाशन". 23 December 2013. http://navshakti.co.in/thane/73437/.
- ↑ "Music Launch Of 'Balkadu'". January 2015. http://www.zeetalkies.com/gossip/music-launch-of-balkadu.html.
- ↑ "Film Reviews: A case of wishful thinking". 23 January 2015. http://www.punemirror.in/entertainment/marathi-reviews/Film-Reviews-A-case-of-wishful-thinking/articleshow/45981505.cms.
- ↑ "New movie celebrating Shiv Sena chief Bal Thackeray delivers bitter dose of ideology". 22 January 2015. http://scroll.in/article/701608/new-movie-celebrating-shiv-sena-chief-bal-thackeray-delivers-bitter-dose-of-ideology.
- ↑ "बाळासाहेबांच्या जयंतीला घुमणार वाघाची डरकाळी, पाहा बाळकडूचा TRAILER". 31 December 2014. http://divyamarathi.bhaskar.com/article/top-news/5483/BOL-MB-trailer-of-marathi-movie-balkadu-4857590-PHO.html?referrer_url=.
- ↑ "It's time we concentrate on mental health". AfternoonVoice. https://www.afternoonvoice.com/time-concentrate-mental-health.html.
- ↑ "School Boy Raped". AfternoonVoice. https://www.afternoonvoice.com/school-boy-raped.html.
- ↑ "The unknown Indian woman doctor on Google Doodle". பிபிசி.com. https://www.bbc.com/news/world-asia-india-42078004.
- ↑ स्वप्ना पाटकर यांच्या `जीवन फंडा’चे प्रकाशन
- ↑ भरत दाभोळकर यांच्या हस्ते जीवनफंडा पुस्तक प्रकाशित
- ↑ जीवनफंडा या पुस्तकाचे प्रकाशन
- ↑ "बाळकडू : पुन्हा एकदा घुमणार बाळासाहेबांचा आवाज!". Zee News. 30 December 2014. http://zeenews.india.com/marathi/news/kallabaji/trailer-balkadu-marathi-movie/263738.
- ↑ "चित्रपट बाळकडू – प्रेक्षकांसाठी कडू डोस". Marathi Shrushti. 24 January 2015. http://www.marathisrushti.com/articles/movie-balkadu/.
- ↑ "'बाळकडू' – आवाज रूपातील बाळासाहेब ठाकरे". லோக்சத்தா. 23 January 2015. http://www.loksatta.com/manoranjan-news/movie-review-marathi-movie-balkadu-1064455/.
- ↑ "उद्धव ठाकरेंच्या उपस्थितीत रंगला 'बाळकडू'चा प्रीमिअर शो, पाहा ग्रॅण्ड सोहळ्याचे". Divya Bhaskar. 23 January 2015. http://divyamarathi.bhaskar.com/news-rlt/BOL-MB-premier-of-marathi-film-balkadu-marathi-film-4881805-PHO.html.
- ↑ "'बाळकडू'चा आज प्रीमियर: राजकीय-सामाजिक क्षेत्रातील दिग्गज लावणार हजेरी!". Divya Bhaskar. 22 January 2015. http://divyamarathi.bhaskar.com/news/MAH-MUM-premier-of-balkadu-marathi-cinema-on-balasaheb-thackerys-life-4880557-PHO.html.
- ↑ "A saffron soiree". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 March 2013. http://timesofindia.indiatimes.com/entertainment/events/mumbai/A-saffron-soiree/articleshow/18909013.cms?from=mdr.
- ↑ "Mahim eatery Saffron 12 is a mixed bag of delights". 14 March 2014. http://mid-day.com/articles/mahim-eatery-saffron-12-is-a-mixed-bag-of-delights/15156138.
- ↑ "Launch: 'Saffron 12'". 10 March 2013. http://photogallery.navbharattimes.indiatimes.com/events/mumbai/launch-saffron-12/articleshow/18906604.cms.
- ↑ "Tickling taste buds". 21 April 2013. http://www.mid-day.com/articles/tickling-taste-buds/209905.
- ↑ "Sanjay Dutt at the launch of 'Saffron 12'". Bollywood Hungama. http://www.bollywoodhungama.com/more/photos/view/stills/parties-and-events/id/1756964.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Film producer Swapna Patker arrested for obtaining fake PhD degree".