உள்ளடக்கத்துக்குச் செல்

விக்டர் அம்புரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டர் அம்புரோசு
பிறப்புதிசம்பர் 1, 1953 (1953-12-01) (அகவை 71)
ஆனோவர், நியூ ஆம்சயர்(Hanover, New Hampshire), ஐக்கிய அமெரிக்கா.
துறைஉயிரியல்
பணியிடங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகப் புற்றுநோய் நடுவம் (1975–1976)
மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (1976–1979)
ஆர்வேடு(1985–1992)
தார்த்துமவுத்துக் கல்லூரி(1992–2001)
தார்த்துமவுத்து மருத்துவக் கல்லூரி (2001–2007)
மாசாச்சூசெட்சுப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி (2008–)
கல்வி கற்ற இடங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (இளங்கலை, முனைவர்)
ஆய்வேடுThe protein covalently linked to the 5'-end of poliovirus RNA (1979)
ஆய்வு நெறியாளர்தாவீது பாலட்டிமோர் (David Baltimore)
அறியப்படுவதுசிற்றிழை ஆ.என்.ஏ (சிற்றிழை இரைபோ இனியக் கருக்காடி) (microRNA) கண்டுபிடிப்பு
விருதுகள்
இணையதளம்
umassmed.edu/ambroslab/

விட்டர். அம்புரோசு (பிறப்பு 1 திசம்பர் 1953) அமெரிக்காவில் உள்ள மாசாச்சூசெட்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுபவர். இவர் கியரி உருவுக்குன் என்பாருடன் சேர்ந்து 2024 ஆம் ஆண்டுக்கான உடலியங்கிய மருத்துவ நோபல் பரிசை வென்றார். இவர் முதன்முதலாகச் சிற்றிழை ஆர்.என்.ஏ (MicroRNA) (சிற்றிழை இரைபோ இனியக் கருக்காடி) என்பதைக் கண்டுபிடித்தார்..

வாழ்க்கைப் பின்புலம்

அம்புரோசு அமெரிக்காவில் நியூ ஆம்சயரில் பிறந்தார். இவருடைய தந்தையார் இலாங்கின் அவர்கள் போலந்து நாட்டிலிருந்து போர்க்கால அகதியாக அமெரிக்காவுக்கு வந்தவர்[1]. விட்டர் அம்புரோசு வெருமாண்டு மாநிலத்தில் ஆர்த்துலாந்து (Hartland) என்னுமிடத்தில் சிறு பாற்பொருள் விளைவிப்புக் குடியிருப்பில் குடும்பத்தில் எட்டு குழந்தைகளுடன் ஒருவராக வளர்ந்து வந்தார். அங்கிருந்த உட்டுசிட்டாகு ஒன்றிய உயர்நிலைப் பள்ளியில் (Woodstock Union High School.) படித்தார்.[2] . பின்னர் விட்டர் அம்புரோசு தனது இளங்கலைப் பட்டத்தை உயிரியல் துறையில் 191975 ஆம் ஆண்டும் முனைவர் பட்டத்தையும் நோபல் பரிசாளர் தாவீது பாலட்டிமோர் அவருடைய நெறியாள்கையில் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விநிறுவனத்தில் 1979 ஆம் ஆண்டும் பெற்றார்.

அம்புரோசு தன்னுடைய ஆய்வை மாசாச்சுசெட்சு கல்வினிறுவனத்தில் தொடர்ந்தார். முதலில் வருங்காலத்தில் நோபல் பரிசு பெறும் இராபர்த்து ஓரோவிட்சிடம் முதுமுனைவராகவும் பின்னர் 1982 இல் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் பேராசிரிய்ராகவும் தொடர்ந்தார். பின்னர் 1992 இல் தார்த்துமவுத்துக் கல்லூரியில் சேர்ந்தார். 2008 இல் மாசாச்சுசெட்சு பல்க்லைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் மூலக்கூற்று மருத்துவத்துறையில் சேர்ந்தார்.தற்பொழுது இவர் தன்னுடைய முன்னாள் தார்த்துமவுத்து மாணவர் ஒவாடு சுகாட்டு சில்வர்மன் என்பாரின் பெயரில் அமைந்த சில்வர்மன் இயற்கை அறிவியல்களுக்கான இருக்கைப்பேராசிரியராக உள்ளார்.

சிற்றிழை ஆர்.என்.ஏ கண்டுபிடிப்பு

1993 இல் அம்புரோசும் அவருடைய உடன் ஆய்வாளர்கள் உரோசலிண்டு இலீ ( Rosalind Lee) அவர்களும் உரோண்டா பைன்பவும் (Rhonda Feinbaum ) அவர்களும் செல் என்னும் ஆய்விதழில் சேர்ந்தெசழுதி வெளியிட்ட கட்டுரையில் புரதம் உருவாக்க உதவாத ஒற்றையிழை கட்டுப்பாட்டு ஆர்.என்.ஏ பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். இது C. elegans என்னும் கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவும் சிறு புழுவில் இருந்த ஆர்.என்.ஏ. (இரைபோ இனியக் கருக்காடி) முன்னர் அம்புரோசும் ஓரோவிட்சும் செய்த ஆய்வில் இலிந்4 ( lin-4) என்னும் மரபணுச் சரம் C. elegans புழுவின் வழமையான இளம்புழு (larva) வளர்ச்சிக்கு முகன்மையானது என்று கண்டுபிடித்திருந்தனர்.

உசாத்துணை

  1. "Obituary for Longin B. Ambros at Windsor". www.knightfuneralhomes.com (in ஆங்கிலம்).
  2. Gitschier, Jane (2010-03-05). "In the Tradition of Science: An Interview with Victor Ambros" (in en). PLOS Genetics 6 (3): e1000853. doi:10.1371/journal.pgen.1000853. பன்னாட்டுத் தர தொடர் எண்:1553-7404. பப்மெட்:20221254. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டர்_அம்புரோசு&oldid=4107893" இலிருந்து மீள்விக்கப்பட்டது