சக்சினோநைட்ரைல்
Appearance
சக்சினோநைட்ரைல் (Succinonitrile) என்பது C2H4(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பியூட்டேன் இருநைட்ரைல், பியூட்டேன் டைநைட்ரைல் என்ற பெயர்களாலும் இந்த நைட்ரைல் சேர்மம் அழைக்கப்படுகிறது.
சக்சினோநைட்ரைல் நிறமற்ற மெழுகு போன்ற திடப்பொருளாகும், இது 58 °செல்சியசு வெப்பநிலையில் உருகும்.
அக்ரைலோநைட்ரைலுடன் ஐதரசன் சயனைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஐதரோசயனேற்றம் நிகழ்ந்து சக்சினோநைட்ரைல் உருவாகும்.:[1]
- CH2=CHCN + HCN → NCCH2CH2CN
சக்சினோநைட்ரைலை ஐதரசனேற்றம் செய்தால் புட்ரெசின் எனப்படும் 1,4-ஈரமினோபியூட்டேன் கிடைக்கும்.