உள்ளடக்கத்துக்குச் செல்

அரூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

அரூர் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அரூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 165 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] இவ்வட்டம் அரூர், தீர்த்தமலை, மொரப்பூர் என 3 உள்வட்டங்கள் கொண்டது.

இவ்வட்டத்தில் அரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

பரப்பளவு

அரூர் வட்டத்தின் பரப்பளவு சுமார் 1,10,354 எக்டேர்களாகும்.[3] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் 25 சதவிகிதம்.

மக்கள் வகைப்பாடு

2016 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,65,209 மக்கள் அரூர் வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[5] விட குறைவானது. அரூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்

  1. தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. "காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை" (PDF). Archived from the original (PDF) on 2016-04-07. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
  3. "தர்மபுரி மாவட்ட இணையதளம்". Archived from the original on 2011-04-14. பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2014.
  4. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2014.
  5. "இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு". பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரூர்_வட்டம்&oldid=3541770" இலிருந்து மீள்விக்கப்பட்டது