அசெட்டோஅசெட்டிக் எசுத்தர் தொகுப்புவினை
அசெட்டோஅசெட்டிக் எசுத்தர் தொகுப்புவினை (Acetoacetic ester synthesis) என்பது எதில் அசெட்டோ அசெட்டேட்டை அதன் இரண்டு கார்பனைல் தொகுதிகளின் α–கார்பனில் அல்க்கைலேற்றம் செய்து கீட்டோனாக மாற்றுகின்ற வினையாகும். மேலும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் α-பதிலீட்டு அசெட்டோன் தயாரிக்கின்ற வினையாகும். இவ்வினை மலோனிக்கு எசுத்தர் தொகுப்பு வினையைப் போன்ற ஒரு வினையாகும்.
வினைவழிமுறை
[தொகு]இருகார்பனைல் α-கார்பனை ஒரு வலிமையான காரம் புரோட்டான் நீக்கம் செய்கிறது. மெத்தில் கார்பனை விட இந்தக் கார்பன் முன்னுரிமை பெறுகிறது, ஏனெனில் இங்கு உருவான ஈனோலேட்டு இணைப்பு மற்றும் ஒத்திசைவால் நிலைபெறுகிறது. பின்னர், இந்தக் கார்பன் அணுக்கருநாட்ட பதிலீட்டு வினைக்கு உட்படுகிறது. கிடைக்கும் சேர்மத்தை நீர்த்த அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்தினால் புதியதாக உருவாகும் அல்க்கைலேற்றம் பெற்ற எசுத்தர் நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு β-கீட்டோ அமிலம் உருவாகிறது. இதை கார்பாக்சில் நீக்கம் செய்வதன் மூலம் மெத்தில் கீட்டோன் உருவாகிறது[1][2]
.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Smith, Janice Gorzynski. Organic Chemistry: Second Ed. 2008. pp 905–906
- ↑ Acetoacetic Ester Synthesis – Alkylation of Enolates | PharmaXChange.info