ஆட்சி மொழி
ஆட்சி மொழி (ⓘ) அல்லது அரசகரும மொழி அல்லது அலுவல் மொழி அல்லது உத்தியோகப்பூர்வ மொழி என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட சட்ட அந்தஸ்து வழங்கப்பட்ட மொழியைக் குறிக்கும். சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியைத் தான் தமது பொதுமொழியாகப் பயன்படுத்துகின்றன.[1] மக்கள் பயன்படுத்தும் மொழியைச் சட்டத்தினால் மாற்ற முடியாது[2]பயன்படுத்தும் மொழியைக் குறிக்காது ஆனால் அரசாங்கம் பயன்படுத்தும் மொழியையே குறிக்கும்.[3]
விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், பல நாடுகளில் ஆட்சி மொழியற்ற ஏனைய மொழிகளிலும் ஆவணங்கள் வரையப்படவேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது.
அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழிகள் அல்ல. அரசால் அங்கீகரிக்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Official Language", Concise Oxford Companion to the English Language, Ed. Tom McArthur, Oxford University Press, 1998.
- ↑ The Status of Languages in Puerto Rico. பரணிடப்பட்டது 2017-10-10 at the வந்தவழி இயந்திரம் Luis Muñiz-Arguelles. University of Puerto Rico. 1986. Page 466. Retrieved 23 November 2012.
- ↑ Pueblo v. Tribunal Superior, 92 D.P.R. 596 (1965). Translation taken from the English text, 92 P.R.R. 580 (1965), p. 588-589. See also LOPEZ-BARALT NEGRON, "Pueblo v. Tribunal Superior: Español: Idioma del proceso judicial", 36 Revista Juridica de la Universidad de Puerto Rico. 396 (1967), and VIENTOS-GASTON, "Informe del Procurador General sobre el idioma", 36 Rev. Col. Ab. (P.R.) 843 (1975).