உதம்சிங் நகர் மாவட்டம்
உதம்சிங் நகர் மாவட்டம்
ऊधम सिंह नगर ज़िला | |
---|---|
மாவட்டம் | |
உத்தராகண்ட மாநிலத்தில் உதம்சிங் நகர் மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
கோட்டம் | குமாவுன் |
தலைமையிடம் | ருத்ரபூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,542 km2 (981 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 16,48,902 |
• அடர்த்தி | 425/km2 (1,100/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | UK - 06 |
இணையதளம் | usnagar |
உதம்சிங் நகர் மாவட்டம் (Udham Singh Nagar district) (இந்தி: ऊधम सिंह नगर ज़िला) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் ருத்ரபூர் நகரம் ஆகும்.
கோவிந்த வல்லப பந்த் வேளாண்மை & தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உதம்சிங் நகர் மாவட்டத் தலைமையிடமான ருத்திராப்பூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பந்த்நகரில் உள்ளது.
இம்மாவட்டத்தின் ருத்ரபூர் நகரத்தையும், சமோலி மாவட்டத்தின் கர்ணபிரயாகையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 109 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.
இம்மாவட்டத்தின் நகரங்கள் ருத்ரபூர், நியு தெக்ரி மற்றும் பந்த்நகர் ஆகும்.
வருவாய் வட்டங்கள்
[தொகு]2,542 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உதம்சிங் நகர் மாவட்டம் பாஜ்பூர், காதர்பூர், ஜாஸ்பூர், காசிபூர், கிச்சா, காதிமா மற்றும் சீதாகஞ்ச் என ஏழு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]குமாவன் மண்டலத்தில் அமைந்த உதம்சிங் நகர் மாவட்டம், வடக்கில் நைனித்தால் மாவட்டம், வடகிழக்கில் சம்பாவத் மாவட்டம், கிழக்கில் நேபாளம், தெற்கிலும், மேற்கிலும் உத்தரப் பிரதேசம் எல்லைகளாக அமைந்துள்ளது. அக்டோபர் 1995-இல் நைனித்தால் மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து உதம்சிங் நகர் மாவட்டம் துவங்கப்பட்டது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,648,902 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 858,783 மற்றும் பெண்கள் 790,119 ஆக உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 920 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 649 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 73.10 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.09 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.45 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 229,162 ஆக உள்ளது.[1]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவர்களின் எண்ணிக்கை 11,04,452 ஆகவும், இசுலாமிய சமயத்தவர்களின் 3,72,267 எண்ணிக்கை ஆகவும், சீக்கிய சமயத்தவர்களின் எண்ணிக்கை 1,62,768 ஆகவும், கிறித்தவர்களின் எண்ணிக்கை 6,064 ஆகவும் மற்றும் பிற சமயத்தவர்கள் கனிசமாக உள்ளனர்.
உத்தராகண்ட மாநிலத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில், அரித்துவார் மாவட்டம் மற்றும் டேராடூன் மாவட்டங்களுக்கு அடுத்து உதம்சிங் நகர் மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.census2011.co.in/census/district/585-udham-singh-nagar.html
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.