உள்ளடக்கத்துக்குச் செல்

ஒன்றாரியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒன்ரோறியோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒண்டாரியோ
குறிக்கோளுரை: உத் இன்செபிட் பிடெலிஸ் சிக் பெர்மனென்ட் (இலத்தீன்)
("நம்பிக்கைக்குரியவளாக துவங்கினாள், நம்பிக்கைக்குரியவளாக இருப்பாள்")
Map of Canada with ஒண்டாரியோ highlighted
Map of Canada with ஒண்டாரியோ highlighted
Confederationசூலை 1, 1867 (1வது)
Capitalடொராண்டோ
Largest cityடொராண்டோ
Largest metroடொராண்டோ மாநகரம்
அரசு
 • துணை ஆளுனர்எலிசபெத்து தவுதுசுவெல்
 • Premierகாத்தலீன் வின் (ஒன்டாரியோ நடுநிலைமைக் கட்சி)
Federal representation(in Canadian Parliament)
House seats107 of 338 (31.7%)
Senate seats24 of 105 (22.9%)
 • பரப்பளவு தரவரிசைRanked 4வது
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்1,28,61,940 (அண்.)[1]
 • தரவரிசைRanked 1வது
இனம்
Official languagesஆங்கிலம் (நடப்பின்படி மெய்யான)
GDP
 • Rank1st
 • Total (2008)C$597.2 பில்லியன்[2]
 • Per capitaC$51,340 (7th)
நேர வலயம்ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5 & -6
Postal abbr.
ON
Postal code prefixK, L, M, N, P
ஐஎசுஓ 3166 குறியீடுCA-ON
Flowerவெள்ளை டிரில்லியம்
Treeகிழக்கு வெண்பைன் மரம்
Birdபொது மீன்கொத்திப் பறவை
இணையதளம்www.ontario.ca
Rankings include all provinces and territories

ஒண்டாரியோ அல்லது ஒன்ராறியோ (Ontario) கிழக்கு-மத்திய கனடாவில் அமைந்துள்ள பத்து மாகாணங்களில் ஒன்றாகும். கனடாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் இதுவாகும்.[4][5] மற்ற மாகாணங்களை விட மக்கள்தொகை வேறுபாட்டில், கிட்டத்தட்ட 40 சதவீதம்[6] அதிக அளவு கனடிய மக்கள் தொகையை இம்மாகாணம் கனடாவிற்குப் பங்களிக்கிறது. பரப்பளவில் இரண்டாவது பெரிய மாகாணமாக விளங்கும் ஒண்டாரியோ வடமேற்கு நிலப்பகுதிகள் மற்றும் நூனவுட்[3] ஆட்சிப்பகுதிகளும் பட்டியலில் சேர்க்கப்பட்டால் மொத்த பரப்பளவின் அடிப்படையில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. நாட்டின் தலைநகரமான ஒட்டாவா மற்றும் நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான டொரண்டோ ஆகியன ஒண்டாரியோ மாகாணத்திலேயே உள்ளன.[7]

ஒண்டாரியோவின் எல்லைகளாக மேற்கில் மானிட்டோபா மாகாணமும், வடக்கில் அட்சன் விரிகுடா மற்றும் யேம்சு விரிகுடாவும், கிழக்கு மற்றும் வடகிழக்கில் கியூபெக் மாகாணமும், வடக்கில் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களான மினசோட்டா, மிச்சிகன், ஒகையோ, பென்சில்வேனியா மற்றும் நியூ யோர்க் மாநிலம் முதலியனவும் உள்ளன. ஐக்கிய அமெரிக்காவுடனான ஒண்டாரியோவின் 2,700 கிமீ (1,678 மை) தொலைவுள்ள எல்லை பெரும்பாலும் உள்நில நீர்நிலைகளாலானது: மேற்கில் காடுகளின் ஏரி எனப்படும் லேக் ஆப் உட்சும், கிழக்கில் முதன்மையான ஆறுகளும் அமெரிக்கப் பேரேரிகள்/செயின்ட் லாரன்சு ஆற்று வடிநீர் அமைப்பும் அமைந்துள்ளன. இந்த முதன்மை ஆறுகள் இரைய்னி ஆறு, பிஜியன் ஆறு, சுப்பீரியர் ஏரி, செயின்ட் மேரீசு ஆறு, ஊரான் ஏரி, செயின்ட் கிளையர் ஆறு, செயின்ட் கிளையர் ஏரி, டெட்ரோயிட் ஆறு, ஈரீ ஏரி, நயாகரா ஆறு, ஒண்டாரியோ ஏரி ஆகியனவாகும்; ஒண்டாரியோவின் கிங்சுட்டன் முதல் கார்ன்வாலுக்கு சிறிதே கிழக்கில் கியூபெக் எல்லை வரை செயின் லாரன்சு ஆற்றோடு எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையின் நிலப்பகுதி 1 km (0.6 mi) மட்டுமே ஆகும்; இவை மின்னசோட்டா எல்லையில் உள்ள ஐய்ட்டு ஆப் போர்ட்டேச் உள்ளிட்ட நாவாய் செல் நிலப்பகுதிகளை அடக்கியவை.[8]

ஒண்டாரியோ சிலநேரங்களில் கருத்துருக்களின்படி வடக்கு ஒண்டாரியோ எனவும் தெற்கு ஒண்டாரியோ எனவும் இரு வட்டாரங்களாகப் பிரிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான மக்கள்தொகையும் விளைவிற்குரிய நிலமும் தெற்கில் உள்ளது. மாறாக, வடக்கு ஒண்டாரியோவில் மக்களடர்த்தி குறைவாக உள்ளது; அடர்ந காடுகளையும் கடுமையான குளிர்காலத்தையும் கொண்டுள்ளது.

சொற்பிறப்பியல்

[தொகு]

இந்த மாகாணத்திற்கு ஒண்டாரியோ ஏரியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க/கனடிய தொல்மொழியான வயான்டோட் மொழியில் ஒண்டாரியோ என்பது பெரும் ஏரி என்று பொருள்படும்.[9] மற்றுமொரு உள்ளக மொழியில் "அழகிய நீர்நிலை" எனப் பொருள்படும் இசுக்காண்டரியோவிலிருந்தும் வந்திருக்கலாம்.[10] ஒண்டாரியோ மாகாணத்தில் ஏறத்தாழ 250,000 நன்னீர் ஏரிகள் உள்ளன.[11]

புவியியல்

[தொகு]
அல்கோங்குயின் மாகாணப் பூங்கா, கேச் ஏரி - 2006 இலையுதிர்காலம்.
நயாகரா அருவி

ஒண்டாரியோ மாகாணத்தை மூன்று முதன்மையான புவியியல் வட்டாரங்களாகப் பிரிக்கலாம்:

மலைப்பாங்கான நிலப்பகுதிகள் இல்லாதபோதும் மேட்டுநிலங்கள் பெரும் பரப்பில் உள்ளன; குறிப்பாக வடமேற்கிலிருந்து தென்கிழக்காகச் செல்லும் கேனடியக் கேடயப் பகுதியில் காணலாம். மிகவும் உயரமான இடமாக இழ்சுபட்டினா முகடு உள்ளது; வடக்கு ஒண்டாரியோவிலுள்ள இதன் உயரம் கடல்மட்டத்திலிருந்து 693 மீட்டர்கள் (2,274 அடி) ஆகும். தெற்கில் டன்டால்க் மேட்டுநிலத்தில் நீலமலைகளில் 500 m (1,640.42 அடி) உயரம் தாண்டப்படுகின்றது.

மாகாணத்தின் பெரும்பாலான தென்மேற்கு பகுதியில் கரோலினியக் காடுகள் மண்டலம் அமைந்துள்ளது. பேரேரி-செயின்ட் லாரன்சு பள்ளத்தாக்கில் கிழக்கு பேரேரி தாழ்நிலக் காடுகள் இருந்தன; இவை அழிக்கப்பட்டு வேளாண் நிலங்களாகவும் தொழிலகங்கள், குடியிருப்புப் பகுதிகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. ஒண்டாரியோவின் சிறப்புமிகு புவியியல் அடையாளமாக நயாகரா அருவி உள்ளது. அத்திலாந்திக்குப் பெருங்கடலிலிருந்து வடமேற்கிலுள்ள தண்டர் விரிகுடா வரை நீர்ப்போக்குவரத்துச் செல்ல செயின்ட் லாரன்சு கடல்வழி உதவுகின்றது. வடக்கு ஒண்டாரியோ மாகாணத்தின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 87 விழுக்காடு நிலப்பகுதியை அடக்கியுள்ளது; மாறாக தெற்கு ஒண்டாரியோவில 94 விழுக்காடு மக்கள் வாழ்கின்றனர்.

மக்கள் தொகையியல்

[தொகு]
மக்கள் தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
18519,52,004—    
186113,96,091+46.6%
187116,20,851+16.1%
188119,26,922+18.9%
189121,14,321+9.7%
190121,82,947+3.2%
1911 25,27,292+15.8%
192129,33,662+16.1%
193134,31,683+17.0%
194137,87,655+10.4%
195145,97,542+21.4%
195654,04,933+17.6%
196162,36,092+15.4%
196669,60,870+11.6%
197177,03,105+10.7%
197682,64,465+7.3%
198186,25,107+4.4%
198691,01,695+5.5%
19911,00,84,885+10.8%
19961,07,53,573+6.6%
20011,14,10,046+6.1%
20061,21,60,282+6.6%
20111,28,51,821+5.7%
Source: Statistics Canada

கனடாவின் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 908,607.67 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஒன்றாரியோவின் மக்கள் தொகை 12,851,821 ஆகும். மக்கள் தொகை அடர்த்தி 14.1/km2 (36.6/sq mi) ஆகவுள்ளது.

ஒன்றாரியோ மக்கள் தொகையில் ஆங்கிலேய கனடியர்கள் பெரும்பான்மையினராகவும், ஐரோப்பியக் கனடியர்கள் சிறுபான்மையினராகவும் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் பிரெஞ்சு மொழி பேசும் கனடியர்கள் 5% உள்ளனர். ஒன்றாரியோ மக்களில் கரிபியன் தீவினர், லத்தீன் அமெரிக்கர்கள், ஆசிய மக்கள் மற்றும் ஆப்பிரிக்க மக்கள் அதிக அளவில் நகர்ப்புறங்களில் குடியேறியுள்ளனர்.

மொத்த மக்கள் தொகையில் 25.9% மக்கள் சிறுபான்னமையினராகவும், மண்னின் மைந்தர்களான பழங்குடி மக்கள் 2.4% அளவில் உள்ளனர். பிற மக்களை விட பழங்குடி மக்களின் மக்கள் தொகை வேகமாக உயர்ந்து வருகிறது.[12]

சமயங்கள்

[தொகு]

கத்தோலிக்க திருச்சபையினர் 31.4% ஆகவும்; கனடா ஒன்றிய திருச்சபையினர் 7.5% ஆகவும்; ஆங்கிலிக்கன் திருச்சபையினர் 6.1% ஆகவும்; எச்சமயத்தையும் சாராதவர்கள் 23.1% ஆக உள்ளனர்.[13]

பெரும்பான்மையினர் பின்பற்றும் சமயங்கள், ஆண்டு 2011:

சமயம் மக்கள் %
மொத்தம் 12,651,795 100  
கத்தோலிக்கர்கள் 3,976,610 31.4
சமயம் சாராதவர்கள் 2,927,790 23.1
சீர்திருத்தத் திருச்சபையினர் 2,668,665 21.1
பிற கிறித்தவப் பிரிவினர் 1,224,300 9.7
இசுலாமியர்கள் 581,950 4.6
இந்துக்கள் 366,720 2.9
கிழக்கு மரபுவழி திருச்சபையினர் 297,710 2.4
யூதர்கள் 195,540 1.5
சீக்கியர்கள் 179,765 1.4
பௌத்தர்கள் 163,750 1.3
பிற சமயத்தினர் 68,985 0.5

மொழிகள்

[தொகு]

ஒன்றாரியோவின் முதன்மை மொழி ஆங்கிலம் ஆகும். இதுவே ஒன்றாரியோ மாகாணத்தின் அலுவல் மொழியாகும்.[14] ஆங்கில மொழி 70% மக்களால் பேசப்படுகிறது. ஒன்றாரியோவின் வடகிழக்கிலும், கிழக்கிலும் மற்றும் தெற்குப் பகுதியில் அடர்த்தியாக வாழும் மக்கள் பிரெஞ்சு மொழியை பேசுகின்றனர். ஒன்றாரியோவின் மொத்த மக்கள் தொகையில் 4% விழுக்காட்டினர் பிரஞ்சு மொழியை தாய் மொழியாகவும்,[15] மற்றும் 11% விழுக்காட்டினர் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழி என இரு மொழிகள் பேசுகின்றனர்.[15] மேலும் ஒன்றாரியோவில் குடியேறியவர்களால் அரபு, ஜெர்மானியம், ஒல்லாந்தியம், இத்தாலியம், எசுபானியம், போத்துகீயம், சீனம் இந்தி, குஜராத்தி, தமிழ் மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளும் பேசப்படுகிறது.[16]

போக்குவரத்து வசதிகள்

[தொகு]

சாலைப் போக்குவரத்து

[தொகு]

400 எண் வரிசைகள் கொண்ட நெடுஞ்சாலைகள், ஒன்றாரியோ ‎மாகாணத்தின் தென் பகுதியின் பிரபலமான சாலைகள் ஆகும். இவைகள் அருகில் உள்ள கனடாவின் மாகாணங்களையும், ஐக்கிய அமெரிக்காவின் பல எல்லைப்புற நகரங்களை இணைக்கிறது.[17][18] ஒன்றாரியோவின் பிற மாகாண நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகள் ஒன்றாரியோ மாகாணப் பகுதிகளை இணைக்கிறது.

நீர் வழிப் போக்குவரத்து

[தொகு]

மாகாணத்தின் தென் பகுதியையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் செயிண்ட் லாரன்சு கடல் நீர் போக்குவரத்து சரக்குக் கப்பல்கள், குறிப்பாக இரும்புக் கனிமங்களை துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல உதவுகிறது.

தொடருந்துகள்

[தொகு]

பயணிகளைச் ஏற்றிச் செல்லும் தொடருந்துகள், தெற்கு ஒன்றாரியோவிலிருந்து, மேற்கின் பசிபிக் கடற்கரையில் உள்ள வான்கூவர் நகரம் வரை இணைக்கிறது. மேலும் கியூபெக், ஆமில்டன், ஒட்டாவா மற்றும் மொண்ட்ரியால் போன்ற நகரங்களை தொடருந்துகள் இணைக்கின்றன.

வானூர்தி போக்குவரத்து

[தொகு]

ஒன்றாரியோ மாகாணத் தலைநகரான ரொறன்ரோவில் உள்ள ரொறன்ரோ பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை[19] 2015ஆம் ஆண்டில் 41 மில்லியன் பயணிகள் பயன்படுத்தினர்.[20]

ஒன்றாரியோ மாகாணத்தின் உள்ளூர் பயணத்திற்கு சிறு விமானச் சேவைகள் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Statistics Canada. "Canada's population estimates 2008-03-27". Archived from the original on 2008-03-31. பார்க்கப்பட்ட நாள் 2008-04-05.
  2. "Ontario Budget 2007: Chapter II". Archived from the original on 2008-12-01. பார்க்கப்பட்ட நாள் 2008-05-23.
  3. 3.0 3.1 "Canada's provinces and territories total area, land area and water area". Statistics Canada. Archived from the original on 2007-02-10. பார்க்கப்பட்ட நாள் 2007-01-05.
  4. "Ontario". Merriam-Webster's Collegiate Dictionary 11th ed. New York: Merriam-Webster, Inc. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87779-809-5. {{cite web}}: Italic or bold markup not allowed in: |work= (help)
  5. Ontario is located in the geographic eastern half of Canada, but it has historically and politically been considered to be part of Central Canada (along with மானிட்டோபா).
  6. Finance, Government of Ontario, Ministry of. "Ontario Fact Sheet May 2016". Fin.gov.on.ca. பார்க்கப்பட்ட நாள் June 7, 2016.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  7. "Population of census metropolitan areas (2001 Census boundaries)". Statistics Canada. Archived from the original on July 24, 2005. பார்க்கப்பட்ட நாள் சனவரி 5, 2007.
  8. Canada/United States International Boundary Commission (2006). "St. Lawrence River and Great Lakes" (pdf). Presentation at 2006 IBRU Conference, p. 21. Durham University. பார்க்கப்பட்ட நாள் 2014-05-06.
  9. Mithun, Marianne (2000). The Languages of Native North America. Cambridge: Cambridge University Press. p. 312.
  10. "About Canada // Ontario". Study Canada. pp. Last Paragraph-second last sentence. பார்க்கப்பட்ட நாள் April 23, 2011. The name "Ontario" is generally thought to be derived from the Iroquois word Skanadario, meaning "beautiful water"
  11. "Lakes and Rivers". Ontario Ministry of Natural Resources. பார்க்கப்பட்ட நாள் March 23, 2014.
  12. "Archived copy". Archived from the original on ஜூலை 3, 2013. பார்க்கப்பட்ட நாள் December 26, 2013. {{cite web}}: Check date values in: |archivedate= (help)CS1 maint: archived copy as title (link)
  13. "National Household Survey (NHS) Profile, 2011". Statistics Canada. May 8, 2013. பார்க்கப்பட்ட நாள் May 29, 2013.
  14. "The Legal Context of Canada's Official Languages". Site for Language Management in Canada, University of Ottawa. Archived from the original on அக்டோபர் 10, 2017. பார்க்கப்பட்ட நாள் February 4, 2016.
  15. 15.0 15.1 "The evolution of English–French bilingualism in Canada from 1961 to 2011". www.statcan.gc.ca. பார்க்கப்பட்ட நாள் September 19, 2015.
  16. Canada, Government of Canada, Statistics. "2011 Census of Canada: Topic-based tabulations". 12.ststcan.gc.ca. பார்க்கப்பட்ட நாள் June 7, 2016.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  17. Ministry of Transportation (Ontario) (August 6, 2002). "Ontario government investing $401 million to upgrade Highway 401". Archived from the original on September 14, 2007. பார்க்கப்பட்ட நாள் December 20, 2006.
  18. Brian Gray (மார்ச் 10, 2004). "GTA Economy Dinged by Every Crash on the 401 – North America's Busiest Freeway". Toronto Sun, transcribed at Urban Planet. பார்க்கப்பட்ட நாள் மே 18, 2007. ரொறன்ரோ நகரத்தின் ஊடாகச் செல்லும் நெடுஞ்சாலை எண் 401 உலகின் சுறுசுறுப்பான சாலைகளில் ஒன்றாகும். {{cite web}}: Check date values in: |date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  19. "Total aircraft movements by class of operation — NAV CANADA towers". Statcan.gc.ca. பார்க்கப்பட்ட நாள் February 24, 2015.
  20. "Toronto Pearson (Enplaned + Deplaned) Passengers" (PDF). GTAA. February 8, 2016. Archived from the original (PDF) on பிப்ரவரி 16, 2016. பார்க்கப்பட்ட நாள் March 5, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒன்றாரியோ&oldid=3928383" இலிருந்து மீள்விக்கப்பட்டது