உள்ளடக்கத்துக்குச் செல்

கியோத்தோ

ஆள்கூறுகள்: 35°1′N 135°46′E / 35.017°N 135.767°E / 35.017; 135.767
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கியோட்டோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கியோட்டோ
京都市
கியோட்டோ நகரின் அமைவிடம்
கியோத்தோ மாகாணத்தில் கியோட்டோ நகரின் அமைவிடம்
அமைவு
நாடு ஜப்பான்
பிரதேசம் கான்சாய்
மாகாணம் கியோத்தோ
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 827.90 ச.கி.மீ (319.7 ச.மை)
மக்கள்தொகை ( மார்ச் 2006)
     மொத்தம் 1,473,068
     மக்களடர்த்தி 1,779/ச.கி.மீ (4,607.6/ச.மீ)
அமைவு 35°1′N 135°46′E / 35.017°N 135.767°E / 35.017; 135.767
சின்னங்கள்
மரம் Weeping Willow,
katsura
மலர் Camellia, Azalea,
Sugar Cherry
Symbol of கியோட்டோ
கியோட்டோ நகரின் சின்னம்
கியோட்டோ நகரசபை
நகரத்தந்தை Yorikane Masumoto
முகவரி 〒604-8571
488 Teramachi-oike, Nakagyō-ku, Kyōto-shi, Kyōto-fu
தொலைபேசி 075-222-3111
இணையத் தளம்: City of Kyoto

கியோத்தோ, 1891
கியோத்தோவிலுள்ள தங்கக் கோயில்.

கியோத்தோ (Kyoto, {{lang-ja|京都}) ஜப்பான் நாட்டின் ஹோன்ஷூ தீவின் நடுப்பகுதியில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரத்தின் மக்கள்தொகை 1.5 மில்லியனுக்கும் அதிகமாகும். மேலும் கியோட்டோ மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது கி.பி 794 முதல் 1868 வரை பண்டைய ஜப்பானின் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது.[1] சப்பானின் பண்பாட்டு, கல்வி, தொழினுட்ப மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு சப்பானின் இரண்டாவது தொன்மையான தேசியப் பல்கலைக்கழகமான கியோத்தோ பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.

வரலாறு

[தொகு]

794 இற்குப் பிறகு சப்பானியப் பேரரசர்கள் ஹையன்-கியோ எனப்பட்ட இந்த நகரில் தான் வாழ்ந்துள்ளனர்.[2]

1868 இல் தெளிவிற்காக இந்த நகரம் சையிக்கியோ ("மேற்கத்திய தலைநகரம்") எனவும் தோக்கியோ எடொ ("கிழக்கத்திய தலைநகரம்") எனவும் அழைக்கப்பட்டன.[3]


புவியியல்

[தொகு]

இந்த நகரத்தின் கிழக்கு, வடக்கு, மேற்குப் பக்கங்களில் மலைகள் சூழ்ந்துள்ளன. இந்த மலைகளால் கியோத்தோவின் வானிலை கோடைக்காலத்தில் வெப்பமாகவும் ஈரப்பதனுடனும் குளிர்காலத்தில் மிகுந்த குளிராகவும் இருப்பதாக சிலர் நம்புகின்றனர்.

காலநிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், Kyoto, Kyoto
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 19.9
(67.8)
22.9
(73.2)
25.7
(78.3)
30.7
(87.3)
33.8
(92.8)
36.8
(98.2)
38.2
(100.8)
39.8
(103.6)
38.1
(100.6)
32.2
(90)
26.9
(80.4)
22.8
(73)
39.8
(103.6)
உயர் சராசரி °C (°F) 8.9
(48)
9.7
(49.5)
13.4
(56.1)
19.9
(67.8)
24.6
(76.3)
27.8
(82)
31.5
(88.7)
33.3
(91.9)
28.8
(83.8)
22.9
(73.2)
17.0
(62.6)
11.6
(52.9)
20.8
(69.4)
தினசரி சராசரி °C (°F) 4.6
(40.3)
5.1
(41.2)
8.4
(47.1)
14.2
(57.6)
19.0
(66.2)
23.0
(73.4)
26.8
(80.2)
28.2
(82.8)
24.1
(75.4)
17.8
(64)
12.1
(53.8)
7.0
(44.6)
15.9
(60.6)
தாழ் சராசரி °C (°F) 1.2
(34.2)
1.4
(34.5)
4.0
(39.2)
9.0
(48.2)
14.0
(57.2)
18.8
(65.8)
23.2
(73.8)
24.3
(75.7)
20.3
(68.5)
13.6
(56.5)
7.8
(46)
3.2
(37.8)
11.7
(53.1)
பதியப்பட்ட தாழ் °C (°F) −11.9
(10.6)
−11.6
(11.1)
−8.2
(17.2)
−4.4
(24.1)
−0.3
(31.5)
4.9
(40.8)
10.6
(51.1)
12.8
(55)
7.1
(44.8)
0.2
(32.4)
−4.4
(24.1)
−9.4
(15.1)
−11.9
(10.6)
பொழிவு mm (inches) 50.3
(1.98)
68.3
(2.689)
113.3
(4.461)
115.7
(4.555)
160.8
(6.331)
214.0
(8.425)
220.4
(8.677)
132.1
(5.201)
176.2
(6.937)
120.9
(4.76)
71.3
(2.807)
48.0
(1.89)
1,491.3
(58.713)
பனிப்பொழிவு cm (inches) 5
(2)
8
(3.1)
2
(0.8)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
3
(1.2)
18
(7.1)
ஈரப்பதம் 66 66 62 59 62 67 70 66 68 68 68 68 65.8
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.5 mm) 7.8 9.2 11.9 10.6 11.4 12.9 12.9 8.7 11.0 8.8 7.6 8.1 120.9
சராசரி பனிபொழி நாட்கள் 3.1 3.9 1.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 1.2 9.2
சூரியஒளி நேரம் 123.2 117.4 146.8 175.4 180.9 138.3 142.3 182.7 136.8 157.4 138.1 135.8 1,775.1
Source #1: 平年値(年・月ごとの値)
Source #2: (record temperatures) 観測史上1~10位の値(年間を通じての値)

பண்பாடு

[தொகு]

இங்கு மரபுவழியான சப்பானிய கட்டிடக் பாணிகளில் பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சில யுனெசுக்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு எதிராக, கியோத்தோ 19ஆம் நூற்றாண்டின் செல்வமிக்க நகரங்களில் ஒன்றாக இருந்தமையால் குடிமக்கள் ஐரோப்பியப் பாணி கட்டிடங்களை விரும்பினர். எனவே நகரின் மையத்தில் ஐரோப்பிய பாணி அலுவலகங்களும் பள்ளிகளும் கட்டப்பட்டுள்ளன.

கியோதோ சப்பானின் தொன்மையான நகரங்களில் ஒன்றாகும். இளவேனிலில் இங்கு மலரும் செர்ரிகளைக் காணவும் இலையுதிர்காலத்தில் மாறுகின்ற வண்ணக்கோலங்களைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர். கியோத்தோ மரபுவழி உணவுகளில் காய்கள் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உலகின் மிக்தொன்மையான புனைகதையான சிகிபு முரசாக்கியின் கெஞ்சியின் கதை, ஹையன் கால கியோத்தோவில் நடப்பதாக அமைந்துள்ளது.

காட்சிக்கூடம்

[தொகு]

தொடர்புடைய பக்கங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Scale models of Kyoto
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்சான்றுகள்

[தொகு]
  1. Nussbaum, Louis-Frédéric. (2002). "Kyoto" in Japan Encyclopedia, pp. 585-587.
  2. Nussbaum, "Heian-kyō" at pp. 303-304.
  3. Nussbaum, "Saikyō" at p. 807.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியோத்தோ&oldid=4150154" இலிருந்து மீள்விக்கப்பட்டது