கும்பகோணம் வீரபத்திரர் கோயில்
வீரபத்திரர் கோயில், கும்பகோணத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]கும்பகோணம் மகாமகக் குளத்தின் வட கரையில் வீர சைவ மடத்திற்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது.
இறைவன்
[தொகு]கருவறையில் அகோர வீரபத்திரர் நின்ற நிலையில் உள்ளார். வீரபத்திரர் என்பது சிவபெருமானைக் குறிக்கும். இவ்விறைவனை கங்கைவீரன், கங்கை வீரேஸ்வரர் என்றும் அழைப்பர்.
கோயில் அமைப்பு
[தொகு]கோயிலின் முன்மண்டபத்தில் கருவறைக்கு முன்பாக வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் காணப்படுகின்றனர். இறைவன் சன்னதியின் வலப்புறம் மன்னர்களைப்போன்ற நிலையில் இருவர் இறைவனை வணங்கிய நிலையில் உள்ளனர். அருகே ஒரு சன்னதியில் அம்மன் உள்ளார். மூலவரின் கருவறைக்கு எதிராக நந்தியும், பலிபீடமும் உள்ளன. இக்கோயிலில் காணப்படுகின்ற செங்கல் கட்டுமானம் கட்டடக்கலையின் நுட்பத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.
குடமுழுக்கு
[தொகு]இக்கோயிலின் குடமுழுக்கு 12 பிப்ரவரி 2016இல் நடைபெற்றது.[1][2]
இவற்றையும் காண்க
[தொகு]- தாராசுரம் வீரபத்திரர் கோயில்
- தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்
- அனுமந்தபுரம் வீரபத்திரர் கோயில்
- கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலயம்