கெமெனா ஆறு
கெமெனா ஆறு Kemena River Sungai Kemena | |
---|---|
கெமெனா ஆறு (2023) | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | தென்சீனக் கடல் |
⁃ ஆள்கூறுகள் | 03°10′24″N 113°02′36″E / 3.17333°N 113.04333°E |
கெமெனா ஆறு (மலாய்: Sungai Kemena; ஆங்கிலம்: Kemena River); மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். இந்த ஆறு, சரவாக், பிந்துலு பிரிவின், செபாவு மாவட்டதை ஊடுருவிச் செல்கிறது. பின்னர் இறுதியாக, பிந்துலு மாநகரத்தின் துறைமுகப் பகுதியை அடைந்து தென்சீனக்கடலில் கலக்கிறது.[1]
செபாவு மாவட்டத்தின் உட்புறங்களில் கிடைக்கும் வெப்ப மண்டலக் காட்டு மரங்கள்; மற்றும் அங்குள்ள சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க் கனிமங்களைக் கொண்டு செல்லவும் இந்த ஆறு பயன்படுகிறது.[2]
பொது
[தொகு]கெமெனா ஆற்றில் 728.56 மீட்டர் நீளம் கொண்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. RM 74,893,670 ரிங்கிட் செலவில் கட்டப்படும் இந்தப் பாலம் திசம்பர் 2025 இறுதிக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாலக் கட்டுமானம் மிகவும் தாமதமான திட்டமாகக் கருதப்படுகிறது; மற்றும் அதன் திட்டமிடப்பட்ட நிறைவு மூன்று ஆண்டுகள் தாமதமானது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kemena River in Bintulu". Tripadvisor. பார்க்கப்பட்ட நாள் 5 October 2024.
- ↑ "Sungai Kemena Nombor Dua". AllTrails Mountain Design. பார்க்கப்பட்ட நாள் 5 October 2024.
- ↑ "Kemena River Bridge Construction Ahead Of Schedule | New Sarawak Tribune". New Sarawak Tribune. 17 May 2024. பார்க்கப்பட்ட நாள் 5 October 2024.