சமாரியம்(III) பாசுபேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
13465-57-1 14913-18-9 | |
ChemSpider | 13931016 |
EC number | 236-698-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 13710715 16217379 |
| |
பண்புகள் | |
O4PSm | |
வாய்ப்பாட்டு எடை | 245.33 g·mol−1 |
தோற்றம் | திண்மம் |
அடர்த்தி | 5.83 கி·செ.மீ−3 |
கரையாது | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சமாரியம்(III) பாசுபேட்டு (Samarium(III) phosphate) என்பது SmPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியத்தின் அறியப்பட்ட பாசுபேட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
தயாரிப்பு
[தொகு]ஏதாவதொரு கரையக்கூடிய சமாரியம்(III) உப்புடன் சோடியம் மெட்டாபசுபேட்டைச் சேர்த்து வினை புரியச் செய்தால் சமாரியம்(III) பாசுபேட்டு உருவாகிறது:
பாசுபாரிக் அமிலத்துடன் சமாரியம்(III) குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் சமாரியம்(III) பாசுபேட்டைத் தயாரிக்கலாம்.[1]
பண்புகள்
[தொகு]சமாரியம்(III) பாசுபேட்டு 750 ° செல்சியசு வெப்பநிலையில் சோடியம் புளோரைடுடன் வினைபுரிந்து Na2SmF2PO4 சேர்மத்தை உருவாக்குகிறது.[2] P21/n என்ற இடக்குழுவுடன் a = 0.6669 நானோமீட்டர், b = 0.6868 நானோமீட்டர், c = 0.6351 நானோமீட்டர், β = 103.92 °, Z = 4 என்ற அளவுருக்களுடன் சமாரியம்(III) பாசுபேட்டு ஒற்றைச்சரிவச்சு படிகங்களாக உருவாகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ HIKICHI, Yasuo; MURAYAMA, Kyouhei; OHSATO, Hitoshi; NOMURA, Tsuyoshi (1990). "Thermal changes of rare earth phosphate minerals" (in ja). Journal of the Mineralogical Society of Japan (Japan Association of Mineralogical Sciences) 19 (3): 117–126. doi:10.2465/gkk1952.19.117. பன்னாட்டுத் தர தொடர் எண்:1883-7018.
- ↑ Zimina, G. V.; Smirnova, I. N.; Gorkovenko, M. Yu.; Spiridonov, F. M.; Komissarova, L. N.; Kaloev, N. I. Synthesis and study of rare earth element fluorophosphates Na2LnF2PO4(in உருசிய மொழி). Zhurnal Neorganicheskoi Khimii, 1994. 39 (9): 1571-1574. பன்னாட்டுத் தர தொடர் எண் 0044-457X.
- ↑ D.F. Mullica, David A. Grossie, L.A. Boatner (March 1985). "Coordination geometry and structural determinations of SmPO4,EuPO4 and GdPO4" (in en). Inorganica Chimica Acta 109 (2): 105–110. doi:10.1016/S0020-1693(00)84549-1. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0020169300845491. பார்த்த நாள்: 2021-11-19.