உள்ளடக்கத்துக்குச் செல்

சரிக்கே பிரிவு

ஆள்கூறுகள்: 02°07′32″N 111°31′19″E / 2.12556°N 111.52194°E / 2.12556; 111.52194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரிக்கே பிரிவு
Sarikei Division
சரவாக்

கொடி
சரவாக் மாநிலத்தில் சரிக்கே பிரிவு
சரவாக் மாநிலத்தில் சரிக்கே பிரிவு
சரிக்கே பிரிவு is located in மலேசியா
சரிக்கே பிரிவு

      சரிக்கே பிரிவு       மலேசியா
ஆள்கூறுகள்: 02°07′32″N 111°31′19″E / 2.12556°N 111.52194°E / 2.12556; 111.52194
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசரிக்கே பிரிவு
நிர்வாக மையம்கூச்சிங்
உள்ளூர் நகராட்சி1. சரிக்கே நகராண்மைக் கழகம்
Majlis Daerah Sarikei (MDS)
2. மெராடோங் ஜுலாவ் நகராண்மைக் கழகம்
Majlis Daerah Meradong Julau (MDMJ)
அரசு
 • ஆளுநர் (Resident)பெலிசியா தான் யா உவா (Felicia Tan Ya Hua)
பரப்பளவு
 • மொத்தம்4,332.4 km2 (1,672.7 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,16,290
 • அடர்த்தி27/km2 (70/sq mi)
போக்குவரத்துப் பதிவெண்QR
இணையத்தளம்Sarikei Administrative Division

சரிக்கே பிரிவு (மலாய் மொழி: Bahagian Sarikei; ஆங்கிலம்: Sarikei Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். சரிக்கேயின் தொடக்க கால வரலாறு 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தொடங்குகிறது. பல வரலாற்று நிகழ்வுகள் உள்ளன.

1845-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி, இந்த சரிக்கே பகுதியைத்தான், ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் பார்வையிட்டார். ஜேம்சு புரூக்கின் நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களின் முதல் எதிர்ப்பு இங்குதான் தொடங்கியது.

பொது

[தொகு]

சரிக்கே பிரிவு மாவட்டங்கள்

[தொகு]

சரிக்கே பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

பொருளாதாரம்

[தொகு]

சரிக்கே பிரிவின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாகும். சரவாக்கில் உள்ள மற்ற பிரிவுகளை விட சரிக்கே பிரிவு அதிக அளவில் மிளகு உற்பத்தி செய்கிறது.

அன்னாசி பழங்களுக்கும், ஆரஞ்சு பழங்களுக்கும் இந்தப் பிரிவு பிரபலமானது. சரவாக்கில் உள்ள மற்ற இடங்களைப் போலவே மரத் தொழிலும் உள்ளூர் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகும்.

மக்கள் தொகை

[தொகு]

சரிக்கே பிரிவின் மொத்த மக்கள் தொகை 116,290. மக்கள் தொகையில் பாதி பேர் இபான் இன மக்கள். அதைத் தொடர்ந்து மெலனாவ், மலாய்க்காரர்கள், பிடாயூ மக்கள்; மற்றும் சீனர் மக்களின் ஆதிக்கம் சரிக்கே நகரில் பெரும்பான்மையாக உள்ளது.

சரிக்கே பிரிவு இனவாரியாக புள்ளிவிவரங்கள் [1][2]
நிர்வாக
மாவட்டம்
மொத்தம்
மக்கள்
தொகை
மலாய் இபான் பிடாயூ மெலனாவ் பூமிபுத்ரா சீனர் இந்தியர் பூமிபுத்ரா
அல்லாதவர்
மலேசியர்
அல்லாதவர்
சரிக்கே 56,228 9,192 18,559 456 3,933 594 21,772 116 370 1,236
மெராடோங் 28,713 4,450 12,322 217 1,489 282 8,731 93 92 1,037
ஜுலாவ் 15,449 245 14,504 59 60 94 435 7 12 30
பாக்கான் 15,139 125 14,423 26 39 136 289 13 35 53
சரிக்கே பிரிவு மொத்தம் 115,529 14,012 59,808 758 5,521 1,106 31,227 229 509 2,356

நிர்வாகம்

[தொகு]
சரிக்கே பிரிவின் நிர்வாக மாவட்டங்கள்

பொது போக்குவரத்து

[தொகு]
From To Transportation Duration
கூச்சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம் சிபு வானூர்தி நிலையம் நேரம் 35–40 நிமிடங்கள்
சிபு வானூர்தி நிலையம் சரிக்கே பேருந்து/வாடகை (சிபு நகர மையம்) 64 km/45 minutes
பிந்தாவா விரைவுப் படகு கூச்சிங் Terminal 1, சரிக்கே விரைவுப் படகு 3 மணி 30 நிமிடங்கள்
கூச்சிங் செண்ட்ரல் விரைவுப் பேருந்து சரிக்கே விரைவுப் பேருந்து 360 கி.மீ/6 மணி நேரம்

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Total population by ethnic group, sub-district and state, Malaysia, 2010" (PDF). Jabatan Perangkaan Malaysia. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
  2. "Official website of Sarikei Administrative Division". Archived from the original on 12 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 12 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sarikei
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிக்கே_பிரிவு&oldid=4102404" இலிருந்து மீள்விக்கப்பட்டது