சிந்து ஆற்று யுத்தம்
சிந்து ஆற்று யுத்தம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் குவாரசமியப் படையெடுப்பின் ஒரு பகுதி | |||||||||
சலாலத்தீன் சிந்து ஆற்றைக் கடந்ததன் மூலம் யுத்தத்திலிருந்து தப்பியோடுதல் பற்றிய ஒரு கலைஞரின் சித்தரிப்பு |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
மங்கோலியப் பேரரசு | குவாரசமிய அரசமரபு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
செங்கிஸ் கான் சகதாயி கான் ஒக்தாயி கான் | சலாலத்தீன் மிங்புர்னு மாலிக் கான் |
||||||||
பலம் | |||||||||
50,000 குதிரைப்படை[1] 50,000க்கும் அதிகமான வீரர்கள்[2] | 3,000 குதிரைப்படை, 700 பாதுகாவலர்கள் [1] 30,000–35,000 வீரர்கள் (அகதிகள்)[2] |
||||||||
இழப்புகள் | |||||||||
குவாரசமிய இழப்பை விட அதிகம் | பெரும்பாலான இராணுவம் |
சிந்து ஆற்று யுத்தம் என்பது செங்கிஸ் கானின் மங்கோலியர்களுக்கும் குவாரசமிய அரசமரபின் சுல்தான் சலாலத்தீன் மிங்புர்னுவின் படைகளுக்கும் இடையில் 1221 ஆம் ஆண்டு சிந்து ஆற்றின் அருகில் நடைபெற்ற யுத்தமாகும்.
பின்புலம்
[தொகு]குவாரசமியாவின் தலைநகரமான சமர்கந்து மற்றும் புகாரா போன்ற நகரங்களை மங்கோலியர்கள் சூறையாடிய பிறகு மிங்புர்னு தனது வீரர்கள் மற்றும் பாரசீகத்தில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான அகதிகளுடன் இந்தியாவிற்குத் தப்பி ஓடினார். காசுனி நகருக்கு அருகில் நடைபெற்ற பர்வான் யுத்தத்தில் வென்ற பிறகு,[3] சுமார் 30,000 வீரர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான அகதிகளுடன் தஞ்சம் அடைவதற்காக மிங்புர்னு இந்தியாவை நோக்கிப் பயணித்தார்.[4] சிந்து ஆற்றைக் கடக்க அவர்கள் முயற்சித்தபோது செங்கிஸ் கானின் தலைமையிலான இராணுவமானது அவர்களைப் பின்தொடர்ந்தது.[4]
யுத்தம்
[தொகு]மிங்புர்னு தனது குறைந்தது 30,000 வீரர்களை, மங்கோலியர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மலைகளைப் பின்புறமாகக் கொண்டு ஒரு பிரிவையும், ஆற்று வளைவால் பின்பகுதி பாதுகாக்கப்பட்ட இடத்தில் மற்றொரு பிரிவையும் நிறுத்தினார்.[3] போரைத் தொடங்கிய ஆரம்ப மங்கோலியத் தாக்குதலானது முறியடிக்கப்பட்டது.[3] மிங்புர்னு பதில் தாக்குதல் நடத்தியதில் மங்கோலிய இராணுவத்தின் மையப்பகுதியைக் கிட்டத்தட்டத் தாக்கும் அளவுக்குச் சென்றார்.[3] மலையின் அருகிலிருந்த மிங்புர்னுவின் இராணுவப் பிரிவை சுற்றி வளைப்பதற்காகச் செங்கிஸ் கான் 10,000 வீரர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவை அனுப்பினார்.[3] இரண்டு பக்கங்களிலிருந்தும் தனது ராணுவம் தாக்கப்பட்டு குழப்பத்தில் சரிய, மிங்புர்னு சிந்து ஆற்றைக் கடந்து தப்பியோடினார்.[3][5]
உசாத்துணை
[தொகு]- ↑ 1.0 1.1 Sverdrup 2010, ப. 109-117.
- ↑ 2.0 2.1 Dupuy & Dupuy 1993, ப. 366.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 A Global Chronology of Conflict: From the Ancient World to the Modern Middle, Vol. I, ed. Spencer C. Tucker, (ABC-CLIO, 2010), 273.
- ↑ 4.0 4.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;Sverdrup
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Sverdrup, Carl (2010). "Numbers in Mongol Warfare". Journal of Medieval Military History. 8. Boydell Press: 109–17 [p. 113]. doi:10.1515/9781846159022-004. ISBN 978-1-84383-596-7.