உள்ளடக்கத்துக்குச் செல்

சின்னச் செம்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்னச் செம்பகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. bengalensis
இருசொற் பெயரீடு
Centropus bengalensis
(Gmelin, JF, 1788)
Subspecies

See text

சின்னச் செம்பகம் அல்லது சின்னச் செம்போத்து (Lesser coucal) Centropus bengalensis ) என்பது குயில் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குயில் இனம் ஆகும். இது பரந்த வாழிட எல்லையைக் கொண்டுள்ளது. இது பல ஒத்த இனங்களுடன் உள்ளது. இது பெரும்பாலும் காடுகளை ஓட்டிய புல் மற்றும் சதுப்பு நிலத்தை வாழ்விடமாக கொண்டுள்ளது. இது அதன் சிறிய உடல் அளவு, சிறிய அலகு, தலை மற்றும் பின்புறத்தின் இறகுகளில் வெளிறிய கோடுகளால் வேறுபடுகிறது. இதன் பின்னங்கால் விரலில் உள்ள மிக நீண்ட நகம் மற்றும் தனித்துவமான கூவல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பருவ கால இறகு வேறுபாடுகளைக் கொண்டுள்ள சில குயில்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் மற்ற குயில்களைப் போல, பாலினங்களிக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை.

வகைபிரித்தல்

[தொகு]

1788 ஆம் ஆண்டில் ஜெர்மன் இயற்கை ஆர்வலர் ஜோஹான் ஃபிரெட்ரிக் கிமெலின், கரேலசு லின்னேயசின் சிஸ்டமா நேச்சுரேவின் திருத்தப்பட்டு, விரிவாக்கப்பட்ட பதிப்பில் சின்னச் செம்பகம் முறையாக விவரிக்கப்பட்டது . அவர் இதை குக்குலசு பேரினத்தில் உள்ள மற்ற அனைத்து குயில்களுடன் சேர்த்து, குக்குலஸ் பெங்கலென்சிஸ் என்ற விலங்கியல் பெயரை உருவாக்கினார். 1776 ஆம் ஆண்டில் ஆங்கில இயற்கை ஆர்வலர் பீட்டர் பிரவுன் அவர்களால் விவரிக்கப்பட்டு விளக்கப்பட்ட வங்காளத்தின் "லார்க்-ஹீல்டு குக்கூ" பற்றிய விளக்கத்தை கிமெலின் அடிப்படையாகக் கொண்டார். 1811 ஆம் ஆண்டில் ஜெர்மன் விலங்கியல் வல்லுனரான யொஃகான் கார்ல் வில்ஹெல்ம் இல்லிகர் அறிமுகப்படுத்திய சென்ட்ரோபஸ் பேரினத்தில் வைக்கப்பட்ட சுமார் 30 இனங்களில் சின்னச் செம்பகமும் ஒன்றாகும்.[2]

இதில் ஆறு துணை இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

  • C. b. bengalensis ( Gmelin, JF, 1788) – இந்தியா, நேபாளம் முதல் மியான்மர், தாய்லாந்து மற்றும் இந்தோசீனா வரை
  • C. b. lignator ஸ்வின்ஹோ, 1861 - தெற்கு, தென்கிழக்கு சீனா, ஆய்னான் மற்றும் தைவான்
  • C. b. javanensis Dumont, 1818 - மலாய் தீபகற்பத்திலிருந்து சுமாத்திரா, ரியாவு மற்றும் லிங்க தீவு (மத்திய சுமத்ராவின் கிழக்கு), பாங்கா மற்றும் பெலிதுங் (தெற்கு சுமத்ராவின் கிழக்கு), சாவகம், போர்னியோ, பலவான் மற்றும் சூலு தீவுக்கூட்டம் (தென்மேற்கு, தெற்கு பிலிப்பைன்ஸ்)
  • C. b. philippinensis மீஸ், 1971 – பிலிப்பைன்ஸ் (பலாவன் குழு மற்றும் சுலு தீவுக்கூட்டம் தவிர) சில சமயங்களில் ஜாவனென்சிசில் சேர்க்கப்பட்டுள்ளது.[3][4]
  • C. b. sarasinorum ஸ்ட்ரெஸ்மேன், 1912 – சுலாவெசி, சங்கிஹே மற்றும் தலாட் தீவுகள் (வடகிழக்கு சுலவேசியின் வடக்கு) மற்றும் சிறு சுண்டாத் தீவுகள்
  • C. b. medius போனபார்டே, 1850 – மலுக்கு தீவுகள் ( காய் தீவுகள், தென்கிழக்கு மொலுக்காஸ் தவிர)

விளக்கம்

[தொகு]
மலேசியாவின் தாமன் நெகாராவில் ஜாவனென்சிஸ் என்ற கிளையினம்

இந்த சற்றே சிறிய அளவிலான மற்றும் குட்டையான அலகு கொண்டுள்ளது. இந்த செம்பகம் மிக நீண்ட பின்னங்கால் விரல் நகங்களைக் கொண்டுள்ளது, இதன் பின்னங்கால் விரல் இந்த பேரினத்தில் உள்ள பறவைகளில் மிக நீளமானதாகும். இப்பறவை செம்போத்து என்னும் செம்பகம் போலவே உள்ளது. ஆனால் அளவில் சற்று சிறியது. இதனை வாலிறகுகள் வெள்ளை முனையோடு இருப்பது கொண்டு வேறுபடுத்தி அறியலாம்.

நடத்தையும் சூழலியலும்

[தொகு]

காடுகளை ஒட்டிய சதுப்பு நிலம் அல்லது புல்வெளிப் பகுதிகளில் சின்னச் செம்பகம் தனித்தனியாக அல்லது இணையாகக் காணப்படும். இவை முக்கியமாக தாழ்நிலங்களில் காணப்படுகின்றன. மற்ற குயில்களைப் போல்லலாமல், கூடுகட்டி குஞ்சு பொரிக்கத் தெரிந்தவை. இவை மே முதல் செப்டம்பர் வரை கூடு கட்டுகின்றன, ஆனால் முக்கியமாக இந்தியாவில் சூன் மாதத்தில் மழைக்குப் பிறகு, குட்டையான மரல்களில் புற்களைக் கொண்டு கூட்டை உருவாக்குகின்றன.[5] பொதுவாக இந்தியாவில் காணப்படுபவை மூன்று முட்டைகளையும், தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுபவை இரண்டு முட்டைகளையும், தைவானில் காணப்படுபவை நான்கு முட்டைகளையும் இடுகின்றன. இரு பாலினத்தவையும் முட்டைகளை அடைகாத்து, குஞ்சுகளைப் பராமரிக்கின்றன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Centropus bengalensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22684254A93021566. https://www.iucnredlist.org/species/22684254/93021566. பார்த்த நாள்: 21 October 2021. 
  2. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2022). "Turacos, bustards, cuckoos, mesites, sandgrouse". IOC World Bird List Version 12.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 13 August 2022.
  3. Mees, G.F. (1971). "The Philippine subspecies of Centropus bengalensis (Gmelin) (Aves, Cuculidae)". Zoologische Mededelingen Uitgegeven Door Het Rijksmuseum Van Natuurlijke Historiete Leiden 45: 189-191. https://www.repository.naturalis.nl/document/150535. 
  4. 4.0 4.1 Payne, R.B. (1997). "Lesser coucal". In del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J. (eds.). Handbook of the Birds of the World. Vol. 4: Sandgrouse to Cuckoos. Barcelona, Spain: Lynx Edicions. p. 590. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-87334-22-1.
  5. Rasmussen, Pamela C.; Anderton, J.C. (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Washington D.C. and Barcelona: Smithsonian Institution and Lynx Edicions. pp. 223–224. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-87-3.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னச்_செம்பகம்&oldid=3929849" இலிருந்து மீள்விக்கப்பட்டது