உள்ளடக்கத்துக்குச் செல்

செரியான்

ஆள்கூறுகள்: 01°10′00″N 110°34′00″E / 1.16667°N 110.56667°E / 1.16667; 110.56667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரியான் நகரம்
Serian Town
சரவாக்
செரியான் விவசாயிகள் சந்தை
செரியான் is located in மலேசியா
செரியான்
      செரியான் நகரம்       மலேசியா
ஆள்கூறுகள்: 01°10′00″N 110°34′00″E / 1.16667°N 110.56667°E / 1.16667; 110.56667
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசெரியான் பிரிவு
மாவட்டம்செரியான் மாவட்டம்
நகரம்செரியான் நகரம்
செரியான் பிரிவு அமைவிடம்செரியான்
உள்ளூர் நகராட்சிசெரியான் நகராண்மைக் கழகம்
Majlis Daerah Serian (MDS)
அரசு
 • ஆளுநர் (Resident)ஜொனாதன் லுகோ (Jonathan Lugoh)
பரப்பளவு
 • மொத்தம்2,039 km2 (787 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்90,763
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்QC
இணையத்தளம்Serian Administrative Division

செரியான் அல்லது செரியான் நகரம் (மலாய் மொழி: Serian; ஆங்கிலம்: Serian) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் செரியான் பிரிவு; செரியான் மாவட்டத்தில் உள்ள நகரமாகும்.[1] அண்மைய காலங்களில் சரவாக் மாநிலத்தில் வளர்ச்சி பெற்று வரும் கிராமப்புற நகரங்களில் செரியான் நகரமும் ஒன்றாகும்.

கூச்சிங் மாநகரில் இருந்து சுமார் 40 மைல் (64 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரில் பிடாயூ பழங்குடி பூர்வீக மக்கள் 65%. மற்ற முக்கிய இனக்குழுக்களில் இபான், சீனர் மற்றும் மலாய்க்காரர்கள் அடுத்த நிலை வகிக்கிறார்கள்.

செரியான் நகரம் மிகவும் பரபரப்பான நகரங்களில் ஒன்றாகும். கவாய் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில்; தீபகற்ப மலேசியா, வெளிநாடுகள் அல்லது முக்கிய நகரங்களில் இருந்து வீடு திரும்பும் பிடாயூ மக்கள், செரியான் நகரத்தில் நிரம்பி இருப்பார்கள்.

பொது

[தொகு]

செரியான் நகரம் அதன் டுரியான் பழங்களுக்கு பெயர் பெற்றது. செரியான் பகுதியில் கிடைக்கும் டுரியான் பழங்கள், சரவாக் மாநிலத்தில் சிறந்தவை என்று பிரபலமாக நம்பப் படுகிறது.

"பழங்களின் ராஜா" (King of Fruits) என்று அழைக்கப்படும் அந்த டுரியான் பழங்களின் நினைவாக, செரியான் நகரச் சந்தை சதுக்கத்தின் நடுவில் ஒரு மாபெரும் நினைவுச் சின்னத்தைச் செரியான் மாவட்ட மன்றம் அமைத்துள்ளது.

புலிச் சிலைகள்

[தொகு]

ஏற்கனவே இந்த நகரத்தின் சில இடங்களில் புலிச் சிலைகள் மற்றும் எருமை சிலைகள் போன்ற பிற நினைவுச் சின்னங்கள் இருந்தன. இருப்பினும் செரியான் காடுகளில் புலிகளும் எருமைகளும் குறைந்து போனதால், அவை அவற்றின் சிறப்புத் தன்மைகளை இழந்து விட்டன.

செரியான் நகரம் வளமான நிலப் பகுதியைக் கொண்டது. அதன் சாலை மற்றும் நீர் போக்குவரத்துகள் நன்கு இணைக்கப்பட்டு உள்ளன. காடுகளில் கிடைக்கும் அனைத்து வகையான காட்டுப் பொருட்களும் செரியான் நகரத்தில் கிடைக்கின்றன.

அண்மைய காலமாக, பெரும்பாலான விளைபொருட்கள் இந்தோனேசியா, கலிமந்தான் காடுகளில் இருந்து கொண்டு வரப் படுகின்றன. கலிமந்தான் காட்டுப் பொருட்களின் விலையும் குறைவு.

காலநிலை

[தொகு]

செரியான் நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்யும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Serian
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.9
(85.8)
30.1
(86.2)
31.0
(87.8)
31.9
(89.4)
32.3
(90.1)
32.0
(89.6)
31.9
(89.4)
31.9
(89.4)
31.7
(89.1)
31.6
(88.9)
31.2
(88.2)
30.6
(87.1)
31.34
(88.42)
தினசரி சராசரி °C (°F) 26.2
(79.2)
26.3
(79.3)
26.8
(80.2)
27.4
(81.3)
27.7
(81.9)
27.3
(81.1)
27.1
(80.8)
27.1
(80.8)
27.1
(80.8)
27.1
(80.8)
26.8
(80.2)
26.5
(79.7)
26.95
(80.51)
தாழ் சராசரி °C (°F) 22.5
(72.5)
22.5
(72.5)
22.7
(72.9)
22.9
(73.2)
23.1
(73.6)
22.7
(72.9)
22.4
(72.3)
22.4
(72.3)
22.5
(72.5)
22.6
(72.7)
22.5
(72.5)
22.5
(72.5)
22.61
(72.7)
மழைப்பொழிவுmm (inches) 438
(17.24)
348
(13.7)
290
(11.42)
286
(11.26)
252
(9.92)
191
(7.52)
179
(7.05)
229
(9.02)
282
(11.1)
321
(12.64)
353
(13.9)
410
(16.14)
3,579
(140.91)
ஆதாரம்: Climate-Data.org[2]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Serian town is one of the busiest towns especially during festive seasons. Stores and shops are packed by mainly Bidayuh returning home from Peninsula Malaysia, Singapore or oversee or major towns on Gawai and Christmas holidays". Visit Sarawak 2022 #BounceBackBetter. Archived from the original on 28 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 24 May 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Climate: Serian". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Serian
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=செரியான்&oldid=3930255" இலிருந்து மீள்விக்கப்பட்டது