சோடியம் அறுகுளோரோ ஓசுமேட்டு
Appearance
இனங்காட்டிகள் | |
---|---|
207683-17-8 (நீரேற்று) 1307-81-9 (நீரிலி) | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 71311526 |
| |
பண்புகள் | |
Cl6Na2Os | |
வாய்ப்பாட்டு எடை | 448.91 g·mol−1 |
தோற்றம் | சிவப்பு திண்மம் |
அடர்த்தி | 3.221 g/cm3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் அறுகுளோரோ ஓசுமேட்டு (Sodium hexachloroosmate) என்பது Na2OsCl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியல் சேர்மமாகும். சிவப்பு நிறத்தில் ஒரு திண்மமாக இது காணப்படுகிறது. [OsCl6]2− என்ற வாய்ப்பாடு கொண்ட ஓசுமியம்(VI) அணைவுச் சேர்மத்தின் இருசோடியம் உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. எதிர்மின்னயனியானது எக்சு கதிர் படிகவியல் ஆய்வின் மூலம் நிறுவப்பட்ட Os-Cl பிணைப்பு தூரம் 2.325(3) ஆங்சுட்ராங்கு ளவு கொண்ட ஓர் எண்முக அணைவாகும்.[1]
உருகிய சோடியம் குளோரைடில் உள்ள ஓசுமியம் உலோகத்துடன் குளோரினை சேர்த்து வினைபுரியச் செய்து சோடியம் அறுகுளோரோ ஓசுமேட்டை தயாரிக்கலாம்:[2]
- Os + 2 NaCl + 2 Cl2 → Na2OsCl6
சோடியம் அறுகுளோரோ ஓசுமேட்டு பாரா காந்தப் பண்புடன் குறைந்த சுழல் d2 எலக்ட்ரான் உள்ளமைப்பு கொண்ட சேர்மமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rudnitskaya, O. V.; Kultyshkina, E. K.; Dobrokhotova, E. V.; Tereshina, T. A.; Popova, A. S.; Zubavichus, Ya. V.; Khrustalev, V. N. (2019). "Crystal Structure of Na2[OsCl6]". Journal of Structural Chemistry 60 (7): 1086–1090. doi:10.1134/S0022476619070096.
- ↑ H. L. Grube (1963). "Sodium Hexachloroosmate(VI)". In G. Brauer (ed.). Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Vol. 2pages=1602. NY,NY: Academic Press.