சோடியம் புரோமைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
7647-15-6 13466-08-5 | |
ChEMBL | ChEMBL1644694 |
ChemSpider | 22712 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 253881 |
வே.ந.வி.ப எண் | VZ3150000 |
| |
UNII | LC1V549NOM |
பண்புகள் | |
NaBr | |
வாய்ப்பாட்டு எடை | 102.89 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான தூள், நீர் உறிஞ்சும் திறன் |
அடர்த்தி | 3.21 கி/செ.மீ3 (நீரிலி) 2.18 கி/செ.மீ3 (இருநீரேற்று) |
உருகுநிலை | 747 °C (1,377 °F; 1,020 K) (நீரிலி) 36 °C (97 °F; 309 K) (இருநீரேற்று) சிதைவு[3] |
கொதிநிலை | 1,390 °C (2,530 °F; 1,660 K)[3] |
71.35 கி/100 மி.லி (−20 °செல்சியசு) 79.52 கி/100 மி.லி (0 °செல்சியசு) 94.32 கி/100 மிலி (25 °செல்சியசு)[1] 104.9 கி/100 மி.லி (40 °செல்சியசு) 116.2 கி/100 மி.லி (100 °செல்சியசு)[2] | |
கரைதிறன் | எத்தனால், நீர்ம அமோனியா, பிரிடீன், ஐதரசீன், SO2 போன்றவற்றில் கரையும் அசிட்டோன், அசிட்டோநைட்ரைல் போன்றவற்றில் கரையாது[1] |
மெத்தனால்-இல் கரைதிறன் | 17.3 கி/100 கி (0 °செல்சியசு) 16.8 கி/100 கி (20 °செல்சியசு) 16.1 கி/100 கி (40 °செல்சியசு) 15.3 கி/100 கி (60 °செல்சியசு)[1] |
எத்தனால்-இல் கரைதிறன் | 2.45 கி/100 கி (0 °செல்சியசு) 2.32 கி/100 கி (20 °செல்சியசு) 2.29 கி/100 கி (30 °செல்சியசு) 2.35 கி/100 கி (70 °செல்சியசு)[1] |
பார்மிக் அமிலம்-இல் கரைதிறன் | 19.3 g/100 g (18 °செல்சியசு) 19.4 g/100 g (25 °செல்சியசு)[1] |
glycerol-இல் கரைதிறன் | 38.7 கி/100 கி (20 °செல்சியசு)[1] |
dimethylformamide-இல் கரைதிறன் | 3.2 கி/100 கி (10.3 °செல்சியசு)[1] |
ஆவியமுக்கம் | 1 டார் (806 °செல்சியசு) 5 டார் (903 °செல்சியசு)[3] |
−41.0·10−6 செ.மீ3/மோல் | |
வெப்பக் கடத்துத்திறன் | 5.6 வேலை/(மீ·கெல்வின்) (150 கெல்வின்)[4] |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.6428 (24 °செல்சியசு) nKrF = 1.8467 (24 °செல்சியசு) nHe–Ne = 1.6389 (24 °செல்சியசு)[5] |
பிசுக்குமை | 1.42 சென்டிபாய்சு (762 °செல்சியசு) 1.08 சென்டிபாய்சு (857 °செல்சியசு) 0.96 சென்டிபாய்சு (937 °செல்சியசு)[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
Lattice constant | a = 5.97 Å[4] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−361.41 கிலோயூல்/மோல்[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
86.82 யூல்/(மோல்·கெல்வின்)[1] |
வெப்பக் கொண்மை, C | 51.4 யூல்/(மோல்·கெல்வின்)[1] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தீப்பற்றும் வெப்பநிலை | 800 °C (1,470 °F; 1,070 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
3500 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சோடியம் புளோரைடு சோடியம் குளோரைடு சோடியம் அயோடைடு சோடியம் அசுட்டட்டைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் புரோமைடு பொட்டாசியம் புரோமைடு உருபீடியம் புரோமைடு சீசியம் புரோமைடு பிரான்சியம் புரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சோடியம் புரோமைடு (Sodium bromide) என்பது NaBr என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் சோடியம் குளோரைடைப் போல உயர் உருகுநிலை கொண்ட சேர்மமாகும். வெள்ளை நிறத்தில் ஒரு படிக திண்மப் பொருளாக சோடியம் புரோமைடு காணப்படுகிறது. பரவலாகப் பயன்படுத்தப்படும் புரோமைடு அயனியின் ஆதாரமாக இச்சேர்மம் உள்ளது. பல பயன்பாடுகளையும் கொண்டுள்ளது[7]
கட்டமைப்பு
[தொகு]NaCl, NaF மற்றும் NaI போன்ற சேர்மங்களைப் போல அதே கனசதுர வடிவில் NaBr படிகமாகிறது. 50.7° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் நீரிலி வடிவ உப்பு படிகமாகிறது.[7] இருநீரேற்று உப்பான (NaBr•2H2O) நீர் கரைசலில் இருந்து 50.7 ° செல்சியசு வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் படிகமாகிறது[8]
தயாரிப்பு
[தொகு]சோடியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் புரோமைடு சேர்ந்து வினை புரிந்தால் சோடியம் புரோமைடு உருவாகும். புரோமின் என்ற வேதியியல் தனிமத்தின் ஆதாரமாக சோடியம் புரோமைடு உள்ளது. NaBr சேர்மத்தின் நீரிய கரைசலை குளோரின் வாயுவுடன் சேர்த்து சூடுபடுத்துவதால் இதை அறியலாம்:
- 2 NaBr + Cl2 → Br2 + 2 NaCl
பயன்பாடுகள்
[தொகு]சோடியம் புரோமைடு தொழில்துறையில் மிகவும் பயனுள்ள ஒரு கனிம புரோமைடு ஆகும்.[7] இது வினைவேக அடிப்படையிலான ஆக்சிசனேற்ற வினைகளில் ஒரு வினையூக்கியாகவும் சோடியம் புரோமைடு பயன்படுத்தப்படுகிறது.[9]
மருந்து
[தொகு]செடோநியூரல் என்ற பெயராலும் அறியப்படும் சோடியம் புரோமைடு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வலிப்பு எதிர்ப்பு மருந்தாகவும் மயக்க மருந்தாகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று கால்நடை மருத்துவத்தில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக நாய்கள் மற்றும் பூனைகளுக்கு வலிப்பு நோய் எதிர்ப்பு மருந்தாக இது பயன்படுகிறது. இதன் செயல் புரோமைடு அயனியால் ஏற்படுகிறது. இந்த காரணத்திற்காக பொட்டாசியம் புரோமைடு இதற்கு சமமாக பயனுள்ளதாக இருக்கிறது. 1975 ஆம் ஆண்டில் இதன் நச்சுத்தன்மையின் காரணமாக புரோமோ-செல்ட்சர் போன்ற அமெரிக்க மருந்துகளில் இருந்து புரோமைடுகள் அகற்றப்பட்டன.[10]
பிற புரோமைடு சேர்மங்கள் தயாரிப்பில்
[தொகு]சோடியம் புரோமைடு கரிம தொகுப்பு வினை உட்பட பிற வினைகளில் மற்ற புரோமைடுகளை தயாரிப்பதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பிங்கெல்சுடீன் வினை மூலம் ஆல்கைல் குளோரைடுகளை அதிக வினைத்திறன் கொண்ட ஆல்கைல் புரோமைடுகளாக மாற்றுவதற்கு இது புரோமைடு அணுக்கருகவரியின் மூலமாகும்:
- NaBr + RCl → RBr + NaCl (R = alkyl)
ஒரு காலத்தில் புகைப்படத் தொழிலில் சோடியம் புரோமைடுக்கு அதிக தேவை இருந்தது, ஆனால் இப்போது சுருங்கிவிட்டது. ஒளியுணரி உப்பான வெள்ளி புரோமைடு NaBr சேர்மத்தைப் பயன்படுத்தி
கிருமிநாசினி
[தொகு]சோடியம் புரோமைடு குளோரின் உடன் இணைந்து சூடான குளியல் தொட்டிகள் மற்றும் நீச்சல் குளங்களுக்கு கிருமிநாசினியாக பயன்படுத்தப்படுகிறது.
பெட்ரோலியத் தொழிலில்
[தொகு]சோடியம் புரோமைடு தண்ணீரில் அதிக கரைதிறன் கொண்டிருப்பதால் (943.2 கி/லி அல்லது 9.16 மோல்/லி, 25 °செல்சியசில்) சோடியம் புரோமைடு எண்ணெய் கிணறுகளில் பயன்படுத்தப்படும் அடர்த்தியான துளையிடும் திரவங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. சோடியம் நேர்மின் அயனியும் வெடிக்கும் செயலுக்கு உதவுகிறது.
பாதுகாப்பு
[தொகு]சோடியம் புரோமைடு மிகக் குறைந்த நச்சுத்தன்மையைக் கொண்டுள்ளது. எலிகளுக்கான உயிர்கொல்லும் அளவு 3.5 கிராம்/கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது.[6] புரோமைடு அயனி என்பது ஒப்பீட்டளவில் நீண்ட அரை ஆயுள் கொண்ட ஒரு கூட்டு நச்சு ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Sodium bromide".
- ↑ Seidell, Atherton; Linke, William F. (1919). Solubilities of Inorganic and Organic Compounds (2nd ed.). D. Van Nostrand Company.
- ↑ 3.0 3.1 3.2 Pradyot, Patnaik (2003). Handbook of Inorganic Chemicals. The McGraw-Hill Companies, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-049439-8.
- ↑ 4.0 4.1 "Sodium Bromide (NaBr)". korth.de. Korth Kristalle GmbH. Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.
- ↑ Polyanskiy, Mikhail. "Refractive index of NaBr (Sodium bromide) - Li". refractiveindex.info. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.
- ↑ 6.0 6.1 "Sodium bromide MSDS". sciencelab.com. Sciencelab.com, Inc. 2013-05-21. Archived from the original (PDF) on 2013-10-07. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.
- ↑ 7.0 7.1 7.2 Michael J. Dagani, Henry J. Barda, Theodore J. Benya, David C. Sanders "Bromine Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry Wiley-VCH, Weinheim, 2000. எஆசு:10.1002/14356007.a04_405
- ↑ Eagleson, Mary (translated by) (1994). Concise Encyclopedia Chemistry (Illustrated, revised, English language ed.). Berlin [u.a.]: Walter De Gruyter. p. 996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783110114515.
- ↑ Hirota, Masayuki; Tamura, Naoyuki; Saito, Tsuguyuki; Isogai, Akira (2010). "Water dispersion of cellulose II nanocrystals prepared by TEMPO-mediated oxidation of mercerized cellulose at pH 4.8". Cellulose 17 (2): 279–288. doi:10.1007/s10570-009-9381-2.
- ↑ "Bromide: Potassium & Sodium". canine-epilepsy.com. Canine-Epilepsy Resources. 2011-05-31. Archived from the original on 2014-03-06. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.