டான்சிமாத்
Appearance
டான்சிமாத் (Tanzimât, உதுமானியத் துருக்கியம்: تنظيمات) என்பது, உதுமானியப் பேரரசின் சீரமைப்பு என்று பொருள்படும், இச்சீரமைப்பு 1839 முதல் 1876 வரை நடைபெற்றது; 1876இல் முதல் அரசமைப்புச் சட்டக் காலம் துவங்கியது.[1] டான்சிமாத் சீரமைப்புக் காலத்தில் உதுமானியப் பேரரசை பல்வேறு வகைகளில் நவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; உள்நாட்டுத் தேசிய இயக்கங்கள் மற்றும் வெளிநாட்டுத் தாக்குதல்களுக்கு எதிராக நாட்டைக் காப்பதும் இச்சீரமைப்பின் நோக்கமாக இருந்தது. இந்தச் சீர்திருத்தங்களால் பேரரசின் பல்வேறு இனக்குழுக்களுக்கிடையே ஒற்றுமை மேம்பட்டது. முசுலிம் அல்லாதவர்களையும் துருக்கியர் அல்லாதவர்களையும் உதுமானியச் சமூகத்தில் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு குடியுரிமைகளையும் சமவாய்ப்பையும் இந்தச் சீர்திருத்தம் ஏற்படுத்தியது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Cleveland, William L & Martin Bunton, A History of the Modern Middle East: 4th Edition, Westview Press: 2009, p. 82.
உசாத் துணை
[தொகு]- Gelvin, James L. (2008). The Modern Middle East: A History (Second Edition ed.). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-532759-5.
{{cite book}}
:|edition=
has extra text (help) - Hussain, Ishtiaq. "The Tanzimat: Secular reforms in the Ottoman Empire]", Faith Matters பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம் 2011