திசம்பர் 16
Appearance
(டிசம்பர் 16 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | திசம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | 31 | ||||
MMXXIV |
திசம்பர் 16 (December 16) கிரிகோரியன் ஆண்டின் 350 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 351 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 15 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
[தொகு]- 1431 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பிரான்சின் மன்னராக பாரிசு, நோட்ரே டேமில் முடிசூடினார்.
- 1497 – வாஸ்கோ ட காமா முன்னர் பார்த்தலோமியோ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.
- 1575 – சிலியின் வால்டீவியா நகரில் 8.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1598 – கொரிய, சப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற நோர்யாங் சமரில் கொரியா வெற்றி பெற்றது.
- 1653 – சேர் ஆலிவர் கிராம்வெல் பொதுநலவாய இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளின் தலைவரானார்.
- 1707 – சப்பானின் பூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.
- 1761 – ஏழாண்டுப் போர்: நான்கு மாதங்கள் முற்றுகையின் பின்னர் உருசியா புருசியாவின் கொலோபிர்செக் கோட்டையைக் கைப்பற்றியது.
- 1773 – அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.
- 1811 – அமெரிக்காவின் மிசோரியில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
- 1835 – நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.
- 1857 – இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1880 – முதல் பூவர் போர்: தென்னாப்பிரிக்காவின் பூவர்களுக்கும் பிரித்தானியப் பேரரசுக்கும் இடையில் போர் மூண்டது.
- 1918 – இலித்துவேனிய சோவியத் சோசலிசக் குடியரசு அமைக்கப்பட்டது. இது 1919 இல் கலைந்தது.
- 1920 – சீனாவில் கான்சு நகரில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1922 – போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் வார்சாவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1925 – இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சேவை கொழும்பில் ஆரம்பமானது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் மீரி நகரைக் கைப்பற்றினர்.
- 1942 – பெரும் இன அழிப்பு: சுத்ஸ்டாப்பெல் தலைவர் ஐன்ரிக் இம்லர் ரோமா மக்களை அவுசுவிட்சு வதை முகாமுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை ஆரம்பமானது. ஆர்டென் காட்டில் மூன்று செருமனிய இராணுவப் படைப்பிரிவுகள் திடீர்த் தாக்குதலை நடத்தின.
- 1947 – வில்லியம் ஷாக்லி, ஜான் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோர் இணைந்து உலகின் முதலாவது செயல் முறை திரிதடையத்தை உருவாக்கினர்.
- 1950 – கொரியப் போர்: சீனப் படைகள் வட கொரியாவின் கம்யூனிச அரசுக்கு ஆதரவாக போரிட்டதை அடுத்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவர் டுரூமன் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
- 1960 – அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திரான்சு-வர்ல்ட் ஏர்லைன்சு விமானம் ஒன்றுடன் நியூ யோர்க், இசுட்டேட்டன் தீவின் மேலாக ஒன்றுடன் ஒன்று இரண்டு விமானங்களிலும் இருந்த அனைத்து 128 பேரும், தரையில் 6 பேரும் உயிரிழந்தனர்.
- 1971 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய இராணுவம் சரணடைந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. இந்நாள் வங்காள தேசத்திலும், இந்தியாவிலும் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- 1971 – பகுரைன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1991 – கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 2000 – அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்,
- 2013 – பிலிப்பீன்சு தலைநகர் மணிலாவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
- 2014 – பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் போராளிகள் பெசாவர் நகரில் இராணுவப் பள்ளுக்கூடம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதில் 145 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பாடசாலைச் சிறுவர்கள் ஆவர்.
பிறப்புகள்
[தொகு]- 1485 – அராகனின் கத்தரீன், எசுப்பானிய இளவரசி, இங்கிலாந்து அரசி (இ. 1536)
- 1770 – லுடுவிக் ஃவான் பேத்தோவன், செருமானிய மேற்கத்தைய இசையமைப்பாளர் (இ. 1827)
- 1775 – ஜேன் ஆஸ்டின், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1817)
- 1857 – எட்வார்டு எமர்சன் பர்னார்டு, அமெரிக்க வானியலாளர் (இ. 1923)
- 1866 – வசீலி கண்டீன்ஸ்கி, உருசிய-பிரான்சிய ஓவியர் (இ. 1944)
- 1879 – தயாராம் சகானி, இந்தியத் தொல்லியலாளர் (இ. 1939)
- 1900 – மயிலை சீனி. வேங்கடசாமி, தமிழறிஞர், எழுத்தாளர் (இ. 1980]])
- 1901 – மார்கரெட் மீட், அமெரிக்க மானிடவியலாளர் (இ. 1978)
- 1916 – பரமஹம்சதாசன், தமிழக-ஈழக் கவிஞர் (இ. 1965)
- 1917 – நபி பக்சு கான் பலோசு, பாக்கித்தானியக் கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2011)
- 1917 – ஆர்தர் சி. கிளார்க், ஆங்கிலேய-இலங்கை எழுத்தாளர் (இ. 2008)
- 1930 – லலிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1982)
- 1933 – அடையார் கே. லட்சுமணன், பரதநாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் (இ. 2014)
- 1957 – எச். டி. குமாரசாமி, கருநாடகாவின் 18வது முதலமைச்சர்
- 1967 – மிராண்டா ஓட்டோ, ஆத்திரேலிய நடிகை
- 1969 – ஆடம் இரீசு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர்
- 1969 – கிரேக் வைட், ஆங்கிலேயத் துடுப்பாளர், பயிற்சியாளர்
- 1983 – ஹர்ஷவர்தன் ராணே, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1984 – தியோ ஜேம்ஸ், ஆங்கிலேய நடிகர்
இறப்புகள்
[தொகு]- 1515 – அபோன்சோ டி அல்புகெர்க்கே, போர்த்துகேய இந்தியாவின் 3வது ஆளுநர் (பி. 1453)
- 1859 – வில்லெம் கிரிம், செருமனிய மொழியியலாளர் (பி. 1786)
- 1928 – பனகல் அரசர், தென்னிந்திய அரசியல்வாதி, சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சர் (பி. 1866)
- 1981 – ஜோசப் மர்பி, அயர்லாந்து-அமெரிக்க எழுத்தாளர், இறை அறிவியலாளர் (பி. 1898)
- 2003 – பி. மாதவன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1928)
- 2005 – இளையதம்பி தர்சினி, இலங்கை இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண் (பி. 1985)
சிறப்பு நாள்
[தொகு]- விடுதலை நாள் (பகுரைன், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1971)
- குடியரசு நாள் (கசக்கஸ்தான், சோவியத் ஒன்றியத்திடம் இருந்து, 1991)
- வங்காளதேச வெற்றி நாள்
- வெற்றி நாள் (இந்தியா)