உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்க் கணிமைக் காலக்கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணியம் -கணியம் (இணைய இதழ்) கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய மாத மின் இதழ் வெளியிடு கணியம்

செப்டெம்பர்

[மூலத்தைத் தொகு]
  • பெங்களூர் IISc இன் Mile ஆய்வுகூடத்தினர் முனைவர் ஏ. ஜீ. ராமகிருஷ்ணன் தலைமையில் தமிழ் உரையைப் படித்துக்காட்டும் செயலி (TTS) ஒன்றினை உருவாக்கி சோதனைக்கு விடுகிறார்கள்.[1]
  • டிசம்பர் 25, சென்னையைச் சேர்ந்த நியூ ஹொரைசன் ஊடக நிறுவனத்தால் என் எச் எம் ரைட்டர் என்ற தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் எழுதுவதற்கான மென்பொருள் வெளியிடப்பட்டது.
  • ஏப்ரல் 20ம் நாள் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் முதன்முறையாக தனது இயக்குதளம் ஒன்றிற்கான இடைமுகப்பினை தமிழ்ப்படுத்தும் வின்டோசு மொழி இடைமுகப் பொதியினை வெளியிடுகிறது.
  • ஏப்ரல் 29, ஆப்பிள் நிறுவனத்தின் மாக் ஒஎசு X v10.4 (புலி) இயங்குதளம், ஆப்பிள் இயங்குதளங்களில் முதன்முறையாக தமிழ் ஒருங்குறி ஆதரவினையும் விசைப்பலகை இயக்கி, எழுத்துரு (இணைமதி) என்பனவற்றையும் இயல்பிருப்பாகக்கொண்டு வெளிவந்தது.
  • பெப்ரவரி 1ம் நாள் ழ கணினி அறிமுக விழா சென்னையில் இடம்பெற்றது. [1]
  • பெப்ரவரி 21 இல் மரத்தடி யாகூ குழுமம் ஆரம்பிக்கப்படுகிறது.

செப்டெம்பர்

[மூலத்தைத் தொகு]
  • வெங்கட்ரமணன் அவர்களால் Tamil Linux Howto எனும் கையேடு எழுதப்படுகிறது [4]
  • மான்ட்ரேக் லினக்ஸ் 9.0, முதல் தமிழ் உள்ளடக்கப்பட்ட குனூ/லினக்ஸ் இயங்குதளமாக வெளிவருகிறது.
  • டிசம்பர் 12 இல் சுரதா யாழ்வாணன் அவர்களால் இணையத்தில் எழுத்துரு தரவிறக்கமில்லாது இயங்கு எழுத்துருமூலம் தமிழில் எழுதப் புதுவை செயலி வெளியிடப்படுகிறது.
  • புதுவை எழுதி
  • அக்டோபர் 23 கே டீ ஈ 2.0 முதன்முறையாக தமிழ் மொழிபெயர்ப்பு பொதியுடன் வெளியாகிறது. (கே டீ ஈ இல் இடம்பெற்ற முதல் இந்திய மொழி தமிழேயாகும்).

செப்டெம்பர்

[மூலத்தைத் தொகு]
  • தமிழ் மென்பொருட்களை வணிக நோக்கில் உருவாக்கவென கம்பன் மென்னியம் நிறுவனம் தொடங்கப்படுகிறது.
  • இஸ்கி ISCII தரப்படுத்தல் நியமத்தின் கீழ் தமிழ் எழுத்துக்களுக்கான குறியேற்றம் உருவாகிறது.
  • தினமலர் நாளிதழ் கணினி அச்சுக்கு மாறுகிறது. பத்திரிகை உலகின் முதல் முயற்சியான இதற்குப் பூனாவைச் சேர்ந்த மாடுலர் இன்போடெக் (எம். என். கூப்பர்) வடிவமைத்த மென்கலனும், எழுத்துருவும் பயனாகிறது.[2]
  • இணையத்தில் முதலாவது தமிழ் வலைப்பக்கம் நா. கோவிந்தசாமி அவர்களால் ஏற்றப்படுகிறது (சிங்கப்பூர் அதிபர் ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation - Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலைத்தளம்)

இவற்றையும் பார்க்க

[மூலத்தைத் தொகு]

1988 முனைவர் மா. கணேசன், (இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்) முதன் முதலாக தமிழ் மற்றும் 5 இந்திய மொழிகளைக் கணினியில் TEXT MODE -இல் பயன்படும் அளவில் BHASHA - INDIAN SCRIPTS UTILITY and WORDPROCESSOR என்னும் மென்பொருளை உருவாக்கினார்.

மேற்கோள்கள்

[மூலத்தைத் தொகு]
  1. "தமிழ் உரைவடிவத்தை குரல்வடிவில் படித்துக்காட்டும் செயலி". Archived from the original on 2014-01-01. பார்க்கப்பட்ட நாள் 2010-01-23.
  2. தினமலர் கணினி அச்சுக்கு மாறுகிறது

வெளி இணைப்புகள்

[மூலத்தைத் தொகு]