உள்ளடக்கத்துக்குச் செல்

தாவதிம்ச உலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திராயஸ்திரிம்சம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாவதிம்ச உலகம் (பாளி: त्रायस्त्रिंश लोक, தமிழ்: முப்பத்து முக் கோடி) என்பது பௌத்த அண்டவியலில் தேவர்கள் வசிக்கும் ஒரு முக்கியமான உலகமாகும். தாவதிம்ச என்றால் வடமொழியில் முப்பத்தி மூன்று என்று பொருள். எனவே தாவதிம்ச உலகம் என்பது "முப்பத்துமுக்கோடி"(இங்கு கோடி என்பது எண்ணைக்குறிக்காமல் மிக உயரிய என்ற பொருளை கொண்டதாகும்)[மேற்கோள் தேவை] என்று அழைக்கப்படும் 33 தேவர்கள் வாழும் உலகம் என்று பொருள் கொள்ளலாம்.[1][2][3]

தாவதிம்ச உலகம் என்பது காமதாதுவின் ஐந்தாவது உலகம் ஆகும். நம் உலகத்தோடு நேரடி தொடர்புடைய உச்ச நிலையில் உள்ள உலகம் தாவதிம்ச உலகமே என்று கூற்ப்படுகின்றது. தாவதிம்ச உலகம் மேரு மலையின் உச்சியில் 80,000 யோஜனைகள் உயரத்தில் (இது ஏறத்தாழ 40,000 அடி என ஊகிக்கப்படுகிறது). இந்த உலகத்தின் மொத்த பரப்பளவு 80,000 சதுர யோஜனைகள்.

வசுபந்துவின் படி, இவ்வுலகங்களில் வாழ்வோர் அரை குரோசங்கள் (ஏறத்தாழ 1500 அடிகள்) உயரம் உள்ளனர். இவர்களின் ஆயுள் 1000 ஆண்டுகள். தாவதிம்ச உலகத்தின் ஒரு நாள் மனித உலகத்தில் 100 வருடங்களுக்கு சமம். எனவே மனித கணக்குப்படி அவர்களின் ஆயுள் 3.6 கோடி மனித வருடங்கள்

தாவதிம்ச உலகத்துக்கும் நமது உலகத்துக்கும் சுமேரு மலையின் மூலம் நேரடித்தொடர்பு உள்ளதென்று கூறப்படுவதால், தாவதிம்ச உலகத்து தேவர்கள் நம் உலத்து நிகழ்வுகளுடன் தொடர்பு கொள்ளுகின்றனர். ஒரு காலத்தின் அரக்கர்கள் தாவதிம்ச உலகத்திலேயே வாழ்ந்தனர். எனினும் அவர்களின் தவறான செயல்பாடுகளுக்காக அவ்வுலகில் இருந்து இந்திரனால் விரட்டியடிக்கப்பட்டு தற்போது சுமேரு மலையின் அடித்தளத்தில் வசிக்கின்றனர்.

இந்திரன், விவகருமன், இந்திரனின் தேரோட்டி மாதாலி, இந்திரனின் மனைவியும் அரக்கர் தலைவர் வேமசித்திரின் மகள் சுயா ஆகியோர் இந்த உலகிலேயே வசிக்கின்றனர்.

பல பௌத்த கதைகளில் தாவதிம்ச உலகத்து தேவர்கள் புத்தரை தரிசிக்க நம் உலகத்துக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புத்தரும் தேவர்களுக்கு தர்மத்தை உபதேசிக்க தாவதிம்ச உலகத்துக்கு சென்றுள்ளார்.

தாவதிம்ச அல்லது முப்பத்தி மூன்று என்பது வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 33 தேவர்களைக் குறிக்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Marshall, John (1918). A Guide to Sanchi. Calcutta: Superintendent Government Printing. p. 56.
  2. "Māyā, Mahāmāyā". Buddhist Dictionary of Pali Proper Names. பார்க்கப்பட்ட நாள் 2018-04-07.
  3. "II. 7. How Magha Became Sakka". Buddhist Legends. Translated by Eugene Watson Burlingame. Cambridge, Mass.: Harvard University Press. 1921. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவதிம்ச_உலகம்&oldid=4099484" இலிருந்து மீள்விக்கப்பட்டது