நாசர் (நடிகர்)
நாசர் | |
---|---|
நாசர் | |
இயற் பெயர் | நாசர் முகமது |
பிறப்பு | மார்ச்சு 5, 1958 செங்கல்பட்டு , இந்தியா |
தொழில் | நடிகர் |
நடிப்புக் காலம் | 1985-தற்போது |
துணைவர் | கமீலா நாசர் |
நாசர் (பிறப்பு - மார்ச் 05, 1958, செங்கல்பட்டு), புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.[1]
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு அருகில் மேல்பாக்கம் எளிமையான முஸ்லிம் குடும்பத்தில பிறந்த நாசர், தந்தை பெயர் மெகமுது பாஷ்சா ,தாயார் பெயர் மும்தாஜ் பேகம். செங்கல்பட்டிலுள்ள புனித யோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C.)யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் சென்னைக்குக் குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார். இவர் இந்திய விமான படையில் சிறிது காலம் பணியாற்றினார்.இவருக்கு மனைவி கமீலா நாசர் . மகன் அப்துல் ஆசான் பைசால் ,லுத்புதீீீன் பாசா, அபி மெஹ்தி ஹாசன் ஆகிய 3 மகன் உண்டு.
கலை வாழ்க்கைப் பயணம்
[தொகு]தமது நாடக பட்டறிவை முன்வைத்து திரையுலகில் கால் பதிக்க முயன்றவர். வறுமை தாங்காது தாஜ் கோரமண்டல் விடுதியின் சேவைப்பகுதியில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். திரைத்துறைக்கு முயன்ற அதே நேரம் கதை, கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தார். அவற்றில் சில பிரசுரமானது.
சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று நடிப்புத்துறையில் பட்டயம் பெற்றார். இதன் முன்னர், தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் நடிப்புப் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார். இவரது ஆர்வத்தினால் இயக்குனர் கே. பாலசந்தர் கல்யாண அகதிகள் என்ற படத்தில் வாய்ப்பளித்தார். அன்று துவங்கி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.
மகேந்திரனின் தொலைக்காட்சிப் படம் காட்டுப்பூக்கள் மற்றும் சேனாதிபதி இயக்கிய பனகாடு இவரது நடிப்புத்திறனை உலகிற்கு பறை சாற்றியது. 1995இல் அவதாரம் என்ற திரைப்படத்தை தாமே இயக்கி நடித்தார். தேவதை என்ற படத்தை 1997இல் இயக்கி நடித்தார்.
திரைப்படங்கள்
[தொகு]இவரது குறிப்பிடத்தகுந்த படங்கள்:
- தேவர் மகன் (1992),
- குருதிப்புனல் (1996),
- பம்பாய் (1995)
பிற சிறப்பு படங்கள்
[தொகு]- ஜனனம்
- தோனி
- ஏகன் (2008)
- குவிக் கன் முருகன் (இந்தி/தமிழ்)
- ஒன்பது ரூபா நோட்டு
- பிராக் (இந்தி)
- ஏக் - த பவர் ஆப் ஒன் (இந்தி)
- குரு மிதுன் சக்கரவர்த்திக்கு தமிழ் டப்பிங்
- நாயகன்
- வேலைக்காரன்
- உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
- தேவர் மகன்
- கோபுர வாசலிலே
- மைக்கேல் மதன காமராசன்
- ரோஜா
- வரவு எட்டணா செலவு பத்தணா
- மகளிர் மட்டும்
- அவதாரம்
- பிரியாணி (திரைப்படம்)
- கோவில் (திரைப்படம்)
- தமிழன்
- போக்கிரி
- படையப்பா
- வர்ணஜாலம்
- குருதிப்புனல்
- அவ்வை சண்முகி
- இருவர்
- காதலர் தினம்
- ஜீன்ஸ்
- புதிய பாதை
- முகம்
- ஹே ராம்
- பூவெல்லாம் கேட்டுப்பார்
- தில்
- விரும்புகிறேன்
- அன்பே சிவம்
- Morning Raga (ஆங்கிலம்)
- ஜோடி
- சந்திரமுகி
- மும்பை எக்ஸ்பிரஸ்
- அன்னியன்
- திஷ்யூம்
- சண்டி (தெலுங்கு)
- கௌதம் SSC (தெலுங்கு)
- இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
- பொய் சொல்லப் போறோம்
- வணக்கம் சென்னை (2013)
- மின்சார கனவு
- 23ம் புலிகேசி
- சாகசம்
- தாமிரபரணி (திரைப்படம்)
- வேல் (திரைப்படம்)
- சிங்கம் (திரைப்படம்)
- சிங்கம் 2 (திரைப்படம்)
- சி3 (திரைப்படம்)
- பரமசிவன் (திரைப்படம்)
- என்னை அறிந்தால் (திரைப்படம்)
- ஆதி (திரைப்படம்)
- தனி ஒருவன்
- பாகுபலி
இயக்குனராக
[தொகு]- பாப்கார்ன் (2003)
- மாயன் (2001)
- தேவதை (1997)
- அவதாரம் (1995)
விருதுகள்
[தொகு]நந்தி விருதுகள்
[தொகு]- இவரது தெலுங்கு திரைப்படம் சண்டியில் நடிப்பிற்காக நந்தி விருது பெற்றார்.
தமிழக அரசு விருதுகள்
[தொகு]- கலைமாமணி விருது
- சிறந்த நடிகர் - ஆவாரம் பூ
- சிறந்த எதிர்மறை நடிகர் - தமிழ்
- சிறந்த துணை நடிகர் எம் மகன்
ஆந்திர அரசு விருதுகள்
[தொகு]- சிறந்த எதிர்மறை நடிகர் - சண்டி
பட்டங்கள்
[தொகு]- தென்னிந்திய நடிகர் சங்கம் - கலைச்செல்வன்
பதவி
[தொகு]- தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் (அக்டோபர் 2015 முதல்)
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- தமிழ்த் திரைப்பட நடிகர்கள்
- 1958 பிறப்புகள்
- தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- வாழும் நபர்கள்
- இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
- இந்திய முஸ்லிம்கள்
- சென்னை நடிகர்கள்
- காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள்
- சென்னைத் திரைப்பட இயக்குநர்கள்
- சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள்