நிலம்சூழ் நாடு
Appearance
நிலம்சூழ் நாடு (landlocked country) என்பது நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாட்டையோ மூடிய கடல்களின் கடற்கரைகளில் அமைந்த நாட்டையோ குறிக்கும். முழுமையான உலக ஏற்பு பெறாத நாடுகளையும் சேர்த்து, உலகில் மொத்தம் 48 நிலம் சூழ் நாடுகள் உள்ளன. பெரும் நிலப்பகுதிகளில் வட அமெரிக்கா, ஆத்திரேலியா, அன்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களில் மட்டுமே நிலம் சூழ் நாடுகள் இல்லை.
நிலம் சூழ் நாடுகளின் பட்டியல்
[தொகு]நாடு | பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (km²) | மக்கள்தொகை | கொத்து |
---|---|---|---|
ஆப்கானித்தான் | 647,500 | 29,117,000 | ஆசியா |
அந்தோரா | 468 | 84,082 | |
ஆர்மீனியா | 29,743 | 3,254,300 | காக்காசியா |
ஆஸ்திரியா | 83,871 | 8,396,760 | ஐரோப்பா |
அசர்பைஜான்[a] | 86,600 | 8,997,400 | காக்காசியா |
அசவாத்[c] | நடு ஆப்பிரிக்கா | ||
பெலருஸ் | 207,600 | 9,484,300 | |
பூட்டான் | 38,394 | 691,141 | |
பொலிவியா | 1,098,581 | 10,907,778 | தென் அமெரிக்கா |
போட்சுவானா | 582,000 | 1,990,876 | தெற்கு ஆப்பிரிக்கா |
புர்க்கினா பாசோ | 274,222 | 15,746,232 | நடு ஆப்பிரிக்கா |
புருண்டி | 27,834 | 8,988,091 | நடு ஆப்பிரிக்கா |
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 622,984 | 4,422,000 | நடு ஆப்பிரிக்கா |
சாட் | 1,284,000 | 10,329,208 | நடு ஆப்பிரிக்கா |
செக் குடியரசு | 78,867 | 10,674,947 | ஐரோப்பா |
எதியோப்பியா | 1,104,300 | 85,237,338 | நடு ஆப்பிரிக்கா |
அங்கேரி | 93,028 | 10,005,000 | ஐரோப்பா |
கசக்கஸ்தான்[a][b] | 2,724,900 | 16,372,000 | ஆசியா |
கொசோவோ[c] | 10,908 | 1,804,838 | ஐரோப்பா |
கிர்கிசுத்தான் | 199,951 | 5,482,000 | ஆசியா |
லாவோஸ் | 236,800 | 6,320,000 | |
லெசோத்தோ[d] | 30,355 | 2,067,000 | தெற்கு ஆப்பிரிக்கா |
லீக்கின்ஸ்டைன் | 160 | 35,789 | ஐரோப்பா |
லக்சம்பர்க் | 2,586 | 502,202 | |
மக்கடோனியா | 25,713 | 2,114,550 | ஐரோப்பா |
மலாவி | 118,484 | 15,028,757 | தெற்கு ஆப்பிரிக்கா |
மாலி | 1,240,192 | 14,517,176 | நடு ஆப்பிரிக்கா |
மல்தோவா | 33,846 | 3,567,500 | (மல்டோவா) |
மங்கோலியா | 1,566,500 | 3,000,000 | |
அர்த்சாக் குடியரசு[c] | 11,458 | 138,000 | காக்காசியா |
நேபாளம் | 147,181 | 29,331,000 | |
நைஜர் | 1,267,000 | 15,306,252 | நடு ஆப்பிரிக்கா |
பரகுவை | 406,752 | 6,349,000 | தென் அமெரிக்கா |
ருவாண்டா | 26,338 | 10,746,311 | நடு ஆப்பிரிக்கா |
சான் மரீனோ[d] | 61 | 31,716 | |
செர்பியா | 88,361 | 7,306,677 | ஐரோப்பா |
சிலவாக்கியா | 49,035 | 5,429,763 | ஐரோப்பா |
தெற்கு ஒசேத்தியா[c] | 3,900 | 72,000 | |
தெற்கு சூடான் | 619,745 | 8,260,490 | நடு ஆப்பிரிக்கா |
சுவாசிலாந்து | 17,364 | 1,185,000 | தெற்கு ஆப்பிரிக்கா |
சுவிட்சர்லாந்து | 41,284 | 7,785,600 | ஐரோப்பா |
தஜிகிஸ்தான் | 143,100 | 7,349,145 | ஆசியா |
திரான்சுனிஸ்திரியா[c] | 4,163 | 537,000 | (மல்டோவா) |
துருக்மெனிஸ்தான்[a] | 488,100 | 5,110,000 | ஆசியா |
உகாண்டா | 241,038 | 32,369,558 | நடு ஆப்பிரிக்கா |
உஸ்பெகிஸ்தான்[b] | 447,400 | 27,606,007 | ஆசியா |
வத்திக்கான் நகர்[d] | 0.44 | 826 | |
சாம்பியா | 752,612 | 12,935,000 | தெற்கு ஆப்பிரிக்கா |
சிம்பாப்வே | 390,757 | 12,521,000 | தெற்கு ஆப்பிரிக்கா |
மொத்தம் | 16,963,624 | 470,639,181 | |
உலகின் விழுக்காடு | 11.4% | 6.9% |
- a காசுப்பியக் கடலின் ஒரு கரையில் உள்ளது
- b ஏரல் கடலின் ஒரு கரையில் உள்ளது
- c முழு உலக ஏற்பு பெறாத சர்ச்சைக்குரிய பகுதி
- d முழுவதும் ஒரே நாட்டால் மட்டும் சூழப்பட்டது