நீர் சுழல் தாவரம்
நீர் சுழல் தாவரம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. vesiculosa
|
இருசொற் பெயரீடு | |
Aldrovanda vesiculosa L. | |
Distribution | |
வேறு பெயர்கள் | |
|
நீர் சுழல் தாவரம் (Aldrovanda) என்பது ஒரு பூச்சி உண்ணும் தாவரம் ஆகும். இது திரோசிராசீயீ என்னும் இரட்டை விதையிலைத் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த ஆல்டிரோவான்டா என்ற பேரினத்தில் அடங்கும் தாவரவகையைச் சேர்ந்தது. இதில் நீர்சுழல் தாவரம் (ஆ.வெசிகுலோசா) என்னும் ஒரு செடி மட்டுமே உள்ளது.
காணப்படும் இடங்கள்
[தொகு]நீர் சுழல் தாவரம் அமைதியான, தேக்கமாயிருக்கும் நீரில் வாழும் ஒரு சிறு பூண்டுத்தாவரம் ஆகும். முதன் முதலாக கி.பி.1696 -ல் இந்தியாவில்தான் இத்தாவரம் கண்டுபிடிக்கப்பட்டது.தென் கொல்கத்தாவின் உப்பு நீர் பகுதியில் காணப்படுகிறது. இவை ஜப்பான், பிரான்ஸ், ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகளிலும் காணப்படுகிறது.
அமைப்பு
[தொகு]இத்தாவரம் 10 முதல் 15 செ. மீ நீளமுள்ளது. இதற்கு வேர் இல்லை. தண்டு மிகவும் மெல்லியது. அதிகமாக கிளைகள் விடுவதில்லை. இலைகள் கொத்து கொத்தாக இருக்கும். ஒவ்வொரு கணுவிலும் எட்டு இலைகள் ஒரு வட்டமாக அமைந்திருக்கும். ஒவ்வொரு இலையும் கரண்டி போன்ற அமைப்பு கொண்டது. இலைக் காம்பு சிறகு போல விரிந்து இருக்கும். இதன் இலையின் நடுநரம்பின் நீளத்தில் மடங்கக் கூடிய இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கும். இதன் விளிம்பு இலேசாக உள்நோக்கி வளைந்தும் சிறு சிறு பற்களும் கொண்டிருக்கும். இலையின் நடு நரம்பை ஒட்டி பல உணர்ச்சியுள்ள முடிகள் இருக்கும். குறிப்பாக இம்முடிகள் 6 மட்டுமே காணப்படும்.
பூச்சிகளைப் பிடித்தல்
[தொகு]நீரில் நீந்திச் செல்லும் சிறு சிறு பூச்சிகள் மற்றும் லார்வாக்கள் இதன் முடிகளின் மேல் பட நேர்ந்தால் இலையின் இரு பகுதிகளும் உடனே மூடிக் கொள்ளும். இவை முற்றிலும் ஒன்றாகச் சேருவதில்லை, சற்று இடைவெளி இருக்கும். இலையின் உள்பகுதியில் நீண்ட காம்புடன் கூடிய சீரண சுரப்பி முடிகள் உள்ளன. இந்த சுரப்பிகளிலிருந்து உண்டாகும் திரவத்தில் அவை செரிமானமாகிவிடும் உணவுப் பொருள் இலைக்குள் உறிஞ்சிக் கொள்ளப்படும்.
பூக்கள்
[தொகு]இத்தாவரத்தில் பூக்கள் காணப்படும். இப்பூக்கள் இலைக் காம்பின் அருகிலேயே வளர்கின்றன. பூக்களுக்கு சிறு காம்புகளும் உண்டு. புறவிதழ்கள் 5 பிரிவுகளாக இருக்கும். சூலகம் ஓரறை உள்ளது. இதன் விதைகள் கணக்கற்றுக் காணப்படும்.இவை நீரில் மிதந்து செல்லும்.
அழிந்து வரும் இனம்
[தொகு]இத்தாவரம் அழிந்துவரும் தாவரப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நகரங்கள் விரிவுபடுத்தப்படும்போதும், குட்டைகள் ஆக்கிரமிக்கப்படுவதாலும் குட்டைகளில் வளரும் இத்தாவரம் அழிக்கப்படுகிறது.
ஊனுண்ணித் தாவரங்கள் பகுப்பு
[தொகு]வரிசைஎண் | குடும்பம் | பேரினம் | வகைகள் |
---|---|---|---|
1 | பிப்ளிடேசியீ | பிப்ளிஸ் | 2 |
ரோரிடுலா | 1 | ||
2 | செப்பலோடேசியீ | செபலோட்டசு | 1 |
3 | திரோசிரேசியீ | ஆல்ட்ரோவாண்டா | 1 |
டயோனியா | 1+1 | ||
திரோசிரா | 90 | ||
திரொசோபில்லம் | 2 | ||
4 | லண்டிபுளோரேசியீ | பிங்குவிக்குலா | 40 |
ஜென்லிசியா | 1 | ||
பயோவுலேரியா | 1 | ||
யூட்ரிக்குளோரியா | 275 | ||
பாலிபாம்போலிக்ஸ் | 2 | ||
5 | நெப்பந்தேசியீ | நெப்பந்திசு | 70 |
6 | சாரசீனியேசியீ | டார்லிங்டோனியா | 1+1 |
ஹிலியாம்போரா | 3 | ||
சாரசீனியா | 6 |
உசாத்துணை
[தொகு]ஏற்காடு இளங்கோ. ';அதிசயத் தாவரங்கள்', அறிவியல் வெளியீடு. 2002.