நைகர்-கொங்கோ மொழிகள்
நைகர்-கொங்கோ நைகர்-கோடோபானியன் (obsolete)
| ||
---|---|---|
புவியியல் பரம்பல்: |
Sub-Saharan Africa | |
இன வகைப்பாடு: |
உலகின் முதன்மையான மொழிக் குடும்பங்களில் ஒன்று; வேறு மொழிக் குடும்பங்களுடன் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இவை எதுவும் இன்னும் போதிய ஆதரவு பெறவில்லை. | |
துணைக் குழுக்கள்: |
||
மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நைகர்-கொங்கோ மொழிகள் உலகின் மிகப்பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக இருப்பதுடன், நிலவியல் பரம்பல், பேசுபவர்களின் எண்ணிக்கை (600 மில்லியன் மக்கள், அதாவது 85% ஆப்பிரிக்க மக்கள் தொகை), பேசப்படும் ஆப்பிரிக்க மொழிகளின் எண்ணிக்கை (1514) போன்றவற்றின் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய மொழிக்குழுவாக நைகர்-கொங்கோ மொழிக்குழு இருக்கின்றது[1]
ஜோசேப் ஹெச். கிறீன்பேர்க் என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் நைகர்-கொர்டோபானியன் என அழைத்தார். ஜோன் பெந்தோர்-சாமுவேல் என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். (கொர்டோபானியன் மொழிகள் ஐப் பார்க்கவும்)
நைகர்-கொங்கோவினுள் அடங்கும் முக்கிய மொழிகள் அல்லது துணைக் குழுக்கள்.
- மேற்கு அத்திலாந்திய: செனகலில் பேசப்படும் வோலோஃப் (Wolof), சாஹேலில் பேசப்படும் ஃபுல்ஃபுல்டே (Fulfulde) என்பன இதனுள் அடங்குகின்றன.
- மாண்டிங்: மேற்கு ஆபிரிக்காவில் பேசப்படுவது; மாலியில் பேசப்படும் பம்பாராவை உள்ளடக்கும்.
- குவா: கானாவில் பேசப்படும் அக்கான் உள்ளடங்கியது. * நைஜீரியாவில் பேசப்படும் யொரூபா மற்றும் இக்போ மொழிகள்.
- குர்:Côte d'Ivoire, தோகோ, புர்கினா பாசோ மற்றும் மாலி போன்ற இடங்களில் பேசப்படுவது.
- குறூ: பேட்டே, நியாப்வா, மற்றும் திதா என்பவை உள்ளிட்ட, மேற்கு ஆபிரிக்காவில் பேசப்படும் மொழிகள்.
- அதமாவா-உபாங்கி: மத்திய ஆபிரிக்கக் குடியரசில் பேசப்படும் சாங்கோ
- பண்டு (Bantu): சுவாஹிலியை (கிஸ்வாஹிலி) உள்ளடக்கிய மிகப் பெரிய குழு.
உசாத்துணைகள்
[தொகு]- Joseph H. Greenberg, The Languages of Africa. Indiana Univ. Press (1966).
- Bernd Heine and Derek Nurse, African Languages - An Introduction. Cambridge Univ. press (2000)
- John Bendor-Samuel, The Niger-Congo Languages — A classification and description of Africa's largest language family, University Press of America (1989).
- Ethnologue: Niger-Congo Family Tree
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Irene Thompson. "Niger-Congo Language Family". Updated March 27, 2013 by Jon Phillips,. The Technology Development Group. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 20, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: extra punctuation (link)