உள்ளடக்கத்துக்குச் செல்

பழைய தில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழைய தில்லி
கோட்டை நகரம்
பழைய தில்லி is located in டெல்லி
பழைய தில்லி
பழைய தில்லி
ஆள்கூறுகள்: 28°39′39″N 77°13′48″E / 28.66083°N 77.23000°E / 28.66083; 77.23000
நாடு இந்தியா
மாநிலம்மத்திய தில்லி மாவட்டம்
செங்கோட்டையின் லாகூரி கேட், சாந்தினி சவுக் பகுதி
திகம்பர சமணக் கோயில்

பழைய தில்லி (Old Delhi), இந்தியாவின் தில்லி மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றான மத்திய தில்லி மாவட்டத்தில் உள்ளது. தற்போதைய பழைய தில்லி நகரத்தை நிறுவியவர் முகலாயப் பேரரசர் ஷாஜகான் ஆவார். அவரது ஆட்சிக் காலத்தில் இந்நகரம் ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டது. பழைய தில்லியை மதில் சுவர்களால் சூழப்பட்ட நகரம் என்று அடைமொழியுடன் அழைப்பர்.

பழைய தில்லி நகரம் செங்கோட்டை, ஜும்மா மசூதி, திகம்பர சமணக் கோயில், சாந்தினி சவுக், குரு தேக் பகதூர் குருத்துவாரா, தோட்டங்கள், நினைவுக் கட்டிடங்கள் போன்ற வரலாற்று புகழ் பெற்ற கட்டிடங்களைக் கொண்டது.

வரலாறு

[தொகு]

மகாபாரத காலத்தில்

[தொகு]

குரு நாட்டை, பங்காளிகளான பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் பிரித்து வழங்கிய போது, பாண்டவர்களுக்கு குரு நாட்டின் மேற்கு பகுதிகளான, தற்கால பழைய தில்லி உள்ளிட்ட காடு, மேடான பகுதியான காண்டவப்பிரஸ்தம் கிடைத்தது.

கிருட்டிணன் உதவியுடன் அருச்சுனன் அப்பகுதியில் இருந்த காண்டவ வனத்தை அழித்த போது, அசுர குல கட்டிடக் கலைஞர் மயன், காண்டவ வனத்தில், இந்திரனின் தேவலோகத்திற்கு ஒப்பான மாட மாளிகைகளுடன் கூடிய அழகிய நகரத்தை நிறுவிக் கொடுத்தார். எனவே பாண்டவர்கள் காண்டவப்பிரஸ்தப் பகுதியை இந்திரப்பிரஸ்தம் எனும் பெயரிட்டனர்.

வரலாற்று காலத்தில்

[தொகு]

பழைய தில்லி நகரம், முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1639ல் நிறுவியதால், ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டது.[1]1857ல் பழைய தில்லி, முகலாயப் பேரரசின் இறுதி காலமாக அமைந்தது. பழைய தில்லியில் முடிவுற்றது.[2][3] 1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து பழைய தில்லிக்கு மாற்றப்பட்டது.

ஜும்மா மசூதி, பழைய தில்லி, 1973
1656ல் கட்டப்பட்ட ஜும்மா மசூதி

தில்லியின் ஆட்சியாளர்கள்

[தொகு]

மம்லுக் வம்சம் (1206-90), கில்சி வம்சம் (1290-1320), துக்ளக் வம்சம் (1320-1413), சையிது வம்சம் (1414-51), லோடி வம்சம் (1451-1526), சூர் வம்சம்( 1540–1556) போன்ற தில்லி சுல்தான்கள், 1206 முதல் 1556 முடிய பழைய தில்லியை தலைநகரமாகக் கொண்டு ஆண்டனர்.

முகலாயப் பேரரசரகள், பழைய தில்லியை கைவிட்டு, ஆக்ரா கோட்டையை தலைநகராகக் கொண்டனர். இருப்பினும் முகலாயப் பேரரசர் ஷாஜகான் , 1639ல் பழைய தில்லிப் பகுதியில் செங்கோட்டை, ஜும்மா மசூதி, சாந்தினி சவுக் மற்றும் தோட்டங்களை நிறுவியதால், அந்நகரை 1648ம் ஆண்டு முதல் ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டது.

முகலாயப் பேரரசின் 12 மாகாணங்களில் ஒன்றாக தில்லி விளங்கியது. இதன் எல்லைகளாக அவத், அஜ்மீர், முல்தான் மற்றும் லாகூர் மாகாணங்கள் விளங்கியது. தாரியா கஞ்ச் பகுதி முகலாயர்களின் ஒரு படைவீடாக விளங்கியது.

பழைய தில்லியின் முதல் மொத்த வணிகச் சந்தை 1840ல் சவுரி பஜார் பகுதியில் துவக்கப்பட்டது. உலர் பழங்களின் வணிகச் சந்தை 1850ல் கரி போலி பகுதியில் துவக்கப்பட்டது.1869ல் மொத்த மலர் வணிகச் சந்தை தாரியா கஞ்ச் பகுதியில் துவக்கப்பட்டது.[4]

தில்லியை மையமாகக் கொண்டு துவங்கிய 1857 சிப்பாய்க் கிளர்ச்சி தோல்வி அடைந்தது. பழைய தில்லியின் செங்கோட்டையை பிரித்தானிய இந்தியாவின் படைகள் கைப்பற்றியது. இறுதி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா வை பர்மாவிற்கு பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் நாடு கடத்தினர். இராணுவ முக்கியத்துவம் கருதி பிரித்தானியர்கள், பழைய தில்லியின் தென்மேற்கு பகுதியில் புதிய கட்டிடங்களை எழுப்பினர். 1911ல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியினரது தலைமையிடம், கொல்கத்தாவிலிருந்து, புது தில்லிக்கு மாற்றப்பட்டது.

பழைய தில்லியின் மதில் சுவர்களும், வாயில்களும்

[தொகு]
பழைய தில்லி, 16 சனவரி 1858ல் பிரித்தானிய இந்தியாவின் படைகள் தில்லியைக் கைப்பற்றுவதற்கு முன்

ஒரு வட்டத்தின் கால் பகுதி கொண்ட வடிவத்துடன் கூடியது பழைய தில்லி. 1500 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட பழைய தில்லி நகரத்தின் நடுவில் செங்கோட்டை மற்றும் ஜும்மா மசூதி கொண்டது. பழைய தில்லி நகரத்தைச் சுற்றிலும் மதில் சுவர்கள் எழுப்பட்டு, 14 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டது:[5]

  1. நிகாம்போத் நுழைவாயில்: வடகிழக்கு திசை, யமுனை ஆறு ஒட்டி
  2. கஷ்மீரி கேட்: வடக்கு
  3. மோரி நுழைவாய்ல்:வடக்கு
  4. காபூலி கேட்: மேற்கு
  5. லாகூரி கேட்: மேற்கு திசை[6][7]
  6. அஜ்மீரி கேட்:தென்கிழக்கு
  7. துருக்கியர் நுழைவாயில்: தென்கிழக்கு
  8. தில்லி கேட்: தெற்கு

பழைய தில்லியின் மிதில் சுவர்கள் 12 அடி அகலமும், 26 அடி உயரமும் கொண்ட மண்னால் ஆன மதிற்சுவராகும். பின்பு 1657ல் செம்மணற்கல்லால் புதுப்பித்துக் கட்டப்பட்டது. தற்போது தில்லியின் மதில் சுவர்கள் பெருமளவில் சிதைக்கப்பட்டு காணாமல் போய்விட்டது.[8]

பார்க்க வேண்டிய இடங்கள்

[தொகு]

படக்காட்சிகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.dawn.com/weekly/dmag/archive/080817/dmag9.htm PAST PRESENT: Shahjahanabad Before 1857 By Mubarak Ali
  2. History of Mughal ArchitectureBy R. Nath, Abhinav Publications, 2006
  3. City of Djinns: A Year in Delhi By William Dalrymple, Olivia Fraser, HarperCollins, 1993
  4. Ashok Kumar Jain (2009). Urban transport: planning and management. APH Publishing. pp. 166, 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-313-0441-8.
  5. http://www.milligazette.com/Archives/2004/01-15Jun04-Print-Edition/011506200496.htm Dilli's gates and windows By Mahtab Jahan
  6. Rehnuma-e-Mazaraat Delhi, Mohammad Asim-ul-Qadri Sanbhli, Mohammad Book Depot, 2007, Old Delhi India
  7. Sunbhli, Mohammad Asim Al-Qadri, 2007, Rehnuma-e-Mazaraat Delhi Sharif, Muhammadi Book Depot, 523 Waheed Kutb Market Matia Mahal Jamai Mosque, Delhi-6, India, p.p. 284
  8. Showers bring down ASI-protected wall in Old Delhi, ExpressIndia (web-site), இந்தியன் எக்சுபிரசு, 2003-07-19

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பழைய தில்லி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழைய_தில்லி&oldid=4059826" இலிருந்து மீள்விக்கப்பட்டது