உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்லிஸ் சிராஜுதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்லிஸ் சிராஜுதீன்
Sirajuddin of Perlis
سراج الدين

பெர்லிஸ்
பெர்லிஸ் இராஜா
2018-இல் பெர்லிஸ் இராஜா சிராஜுதீன்
12-ஆவது மலேசிய மாமன்னர்[சான்று தேவை]
ஆட்சிக்காலம்13 திசம்பர் 2001 – 12 திசம்பர் 2006
மலேசியா25 ஏப்ரல் 2002
முன்னையவர்சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன்
பின்னையவர்திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன்
பெர்லிஸ் இராஜா
ஆட்சிக்காலம்17 ஏப்ரல் 2000 – தற்போது
நிறுவல்7 மே 2001
முன்னையவர்புத்ரா
பிறப்பு17 மே 1943 (1943-05-17) (அகவை 81)
ஆராவ், பெர்லிஸ், மலேசியா
துணைவர்
பெயர்கள்
Tuan Syed Sirajuddin Ibni Tuan Syed Harun Putra Jamalullail
பட்டப் பெயர்
Tuanku Syed Sirajuddin ibni Almarhum Tuanku Syed Putra Jamalullail
மரபுசமாலுலாயில் அரச குடும்பம்
தந்தைபெர்லிஸ் இராஜா துவாங்கு சையத் புத்ரா
தாய்தெங்கு புட்ரியா தெங்கு இசுமாயில்
மதம்இசுலாம்

பெர்லிஸ் சிராஜுதீன் அல்லது பெர்லிஸ் இராஜா சையத் சிராஜுதீன்; (ஆங்கிலம்: Sirajuddin of Perlis அல்லது Tuanku Syed Sirajuddin Tuanku Syed Putra Jamalullail; மலாய்: Tuanku Syed Sirajuddin ibni Almarhum Tuanku Syed Putra Jamalullail); (பிறப்பு: 17 மே 1943) என்பவர் 2000-ஆம் ஆண்டில் இருந்து பெர்லிஸ் இராஜா பதவியை வகிப்பவர் ஆவார்.

அத்துடன் 2001-ஆம் ஆண்டில் இருந்து 2006-ஆம் ஆண்டு வரை மலேசியாவின் 12-ஆவது பேரரசராகவும்[சான்று தேவை] பதவி வகித்தவர் ஆகும்.

பெர்லிஸ் இராஜா

[தொகு]

துவாங்கு சையத் சிராஜுதீன், 1943-ஆம் ஆண்டில் பெர்லிஸ், ஆராவ் அரச நகரில் பிறந்தார். அவர் ஆராவ் மலாய் பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் 5 சனவரி 1950 முதல் பினாங்கில் உள்ள வெல்லசுலி தொடக்கப் பள்ளியில் (Wellesley Primary School) தன் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து 1955-ஆம் ஆண்டின் இறுதி வரை வெசுட்லேண்ட் தொடக்கப் பள்ளியில் (Westland Primary School) தன் படிப்பைத்தொடர்ந்தார்.

அதன் பின்னர் இவர் தன் இடைநிலைக் கல்வியை பினாங்கு பிரி ஸ்கூல் பள்ளியில் (Penang Free School) தொடங்கினார். 9 சனவரி 1956 தொடங்கி 1963 வரை நான்கு ஆண்டுகள் வெலிங்பரோ பள்ளியில் படிக்க இங்கிலாந்துக்குச் சென்றார். சனவரி 1964 முதல் டிசம்பர் 1965 வரை இங்கிலாந்தின் சாண்ட்ஹர்ஸ்ட் அரச இராணுவக் கல்லூரியில் ஒரு பயிற்சி அதிகாரியாகப் பயிற்சி பெற்றார்.

தொடக்கக் கால வாழ்க்கை

[தொகு]

இங்கிலாந்தில் இருந்து திரும்பியதும், மலேசிய தற்காப்பு அமைச்சில் பணியாற்றினார். 1965-ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி மலேசிய உளவுப் படையின் 2-ஆவது படைப்பிரிவில் இரண்டாவது லெப்டினன்ட் அதிகாரியாக அவரின் முதல் பதவி இருந்தது.

1966-இல், அவர் சபாவிற்கு அனுப்பப்பட்டார். பின்னர் 1967-இல் சரவாக்கிற்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் பகாங்கில் பணியாற்றினார். 1969-இல் பெர்லிஸ் மாநிலத்திற்கு மாற்றப்பட்டு டிசம்பர் 1967-இல் லெப்டினன்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டார். தற்போது, பெர்லிஸ் இராணுவ சேமப் பிரிவின் 504-ஆவது படைப்பிரிவின் உயர் அதிகாரியாக உள்ளார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

அக்டோபர் 1960-இல், அவர் மாணவராக இருக்கும்போதே பெர்லிஸ் மாநிலத்தின் ராஜா மூடா எனும் மகுட இளவரசராக நியமிக்கப்பட்டார். 1945-ஆம் ஆண்டு முதல் பெர்லிஸ் இராஜாவாக இருந்த அவரின் தந்தை துவாங்கு சையத் புத்ரா இப்னி அல்மர்கும் சையத் அசன் சமாலுல்லைல் இறந்த மறுநாள், 17 ஏப்ரல் 2000 அன்று, பெர்லிஸ் மாநிலத்தின் பன்னிரண்டாவது ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.

சமூகப் பங்களிப்புகள்

[தொகு]

இவர் தன் மக்கள் மீதான அர்ப்பணிப்பிற்காகப் புகழ் பெற்றவர்; மற்றும் கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 1986-இல், இவரின் பெயரில் துவாங்கு சையத் புத்ரா அறக்கட்டளை நிறுவப்பட்டதன் மூலம், பெர்லிஸ் மாணவர்கள் பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தங்கள் படிப்பைத் தொடர முடிந்தது. இவர் இந்த அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.

விருதுகள்

[தொகு]

பெர்லிஸ் சமலுலாயில் விருதுகள்

[தொகு]

பெர்லிஸ் :

  • - DKP - (2001)
  • - DK (2000)
  • - SSSJ (2001)
  • - SPSJ (2005)
  • - SPMP (2000)

மலேசிய விருதுகள்

[தொகு]

மலேசிய மாநிலங்கள் விருதுகள்

[தொகு]

பன்னாட்டு விருதுகள்

[தொகு]

பேரரசர்கள் பட்டியல்

[தொகு]

பின்வரும் ஆட்சியாளர்கள் யாங் டி பெர்துவான் அகோங்காகப் பணியாற்றி உள்ளனர்:

# படிமம் பெயர் நிலை ஆட்சி பிறப்பு இறப்பு ஆட்சியின் காலம்
1 துவாங்கு அப்துல் ரகுமான் நெகிரி செம்பிலான் 31 ஆகஸ்டு 1957 – 1 ஏப்ரல் 1960 (1895-08-24)24 ஆகத்து 1895 1 ஏப்ரல் 1960(1960-04-01) (அகவை 64) 2 ஆண்டுகள், 214 நாட்கள்
2 சுல்தான் இசாமுடின் ஆலாம் ஷா சிலாங்கூர் 14 ஏப்ரல் 1960 – 1 செப்டம்பர் 1960 (1898-05-13)13 மே 1898 1 செப்டம்பர் 1960(1960-09-01) (அகவை 62) 0 ஆண்டுகள், 140 நாட்கள்
3 துவாங்கு சையத் புத்ரா பெர்லிஸ் 21 செப்டம்பர்1960 – 20 செப்டம்பர் 1965 (1920-11-25)25 நவம்பர் 1920 16 ஏப்ரல் 2000(2000-04-16) (அகவை 79) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
4 சுல்தான் இசுமாயில் நசிருதீன் ஷா  திராங்கானு 21 செப்டம்பர் 1965 – 20 செப்டம்பர் 1970 (1907-01-24)24 சனவரி 1907 20 செப்டம்பர் 1979(1979-09-20) (அகவை 72) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
5 சுல்தான் அப்துல் அலீம் முவாட்சாம் ஷா
1st term
கெடா 21 செப்டம்பர் 1970  – 20 செப்டம்பர் 1975 (1927-11-28)28 நவம்பர் 1927 11 செப்டம்பர் 2017(2017-09-11) (அகவை 89) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
6 சுல்தான் யாகயா பெட்ரா கிளாந்தான் 21 செப்டம்பர் 1975 – 29 மார்ச் 1979 (1917-12-10)10 திசம்பர் 1917 29 மார்ச்சு 1979(1979-03-29) (அகவை 61) 3 ஆண்டுகள், 189 நாட்கள்
7 சுல்தான் அகமது ஷா பகாங் 26 ஏப்ரல் 1979 – 25 ஏப்ரல் 1984 (1930-10-24)24 அக்டோபர் 1930 22 மே 2019(2019-05-22) (அகவை 88) 4 ஆண்டுகள், 365 நாட்கள்
8 சுல்தான் இசுகந்தர்  ஜொகூர் 26 ஏப்ரல் 1984 – 25 ஏப்ரல் 1989 (1932-04-08)8 ஏப்ரல் 1932 22 சனவரி 2010(2010-01-22) (அகவை 77) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
9 சுல்தான் அசுலான் ஷா பேராக் 26 ஏப்ரல் 1989 – 25 ஏப்ரல் 1994 (1928-04-19)19 ஏப்ரல் 1928 28 மே 2014(2014-05-28) (அகவை 86) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
10 துவாங்கு சாபர் நெகிரி செம்பிலான் 26 ஏப்ரல் 1994 – 25 ஏப்ரல் 1999 (1922-07-19)19 சூலை 1922 27 திசம்பர் 2008(2008-12-27) (அகவை 86) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
11 சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் ஷா சிலாங்கூர் 26 ஏப்ரல் 1999 – 21 நவம்பர் 2001 (1926-03-08)8 மார்ச்சு 1926 21 நவம்பர் 2001(2001-11-21) (அகவை 75) 2 ஆண்டுகள், 209 நாட்கள்
12 துவாங்கு சையத் சிராசுதீன் பெர்லிஸ் 13 டிசம்பர் 2001 – 12 டிசம்பர் 2006 17 மே 1943 (1943-05-17) (அகவை 81) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
13 சுல்தான் மிசான் சைனல் அபிதீன்  திராங்கானு 13 டிசம்பர் 2006 – 12 டிசம்பர் 2011 22 சனவரி 1962 (1962-01-22) (அகவை 62) 4 ஆண்டுகள், 364 நாட்கள்
14 சுல்தான் அப்துல் அலீம் முவாட்சாம் ஷா
2nd term
கெடா 13 டிசம்பர் 2011 – 12 டிசம்பர் 2016 (1927-11-28)28 நவம்பர் 1927 11 செப்டம்பர் 2017(2017-09-11) (அகவை 89) 4 ஆண்டுகள், 365 நாட்கள்
15 சுல்தான் முகமது V கிளாந்தான் 13 டிசம்பர் 2016 – 6 சனவரி 2019 6 அக்டோபர் 1969 (1969-10-06) (அகவை 55) 2 ஆண்டுகள், 24 நாட்கள்
16 அல் சுல்தான் அப்துல்லா பகாங் 31 சனவரி 2019 – இன்று வரையில் 30 சூலை 1959 (1959-07-30) (அகவை 65) 5 ஆண்டுகள், 297 நாட்கள்

மேற்கோள்கள்

[தொகு]
பெர்லிஸ் சிராஜுதீன்
பெர்லிஸ் இராஜா
பிறப்பு: 1943
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் மலேசிய அரசர்
(மலேசிய பேரரசர்)

2001–2006
பின்னர்
முன்னர் பெர்லிஸ் இராஜா
2000–தற்போது
பதவியில் உள்ளார்
வாரிசு:
துவாங்கு சையத் பைசுதீன்

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்லிஸ்_சிராஜுதீன்&oldid=4049093" இலிருந்து மீள்விக்கப்பட்டது