போர்சிசின்
Appearance
(போர்ஜிஜின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
போர்சிசின் Боржигин | |
---|---|
நாடு | மங்கோலியப் பேரரசு, வடக்கு யுவான் அரசமரபு, மங்கோலியா, சீனா (உள் மங்கோலியா மற்றும் சிஞ்சியாங்) |
விருதுப் பெயர்கள் | ககான், கான் |
நிறுவிய ஆண்டு | கி.பி. 900 |
நிறுவனர் | போடோன்சார் முன்ஹாக் |
இறுதி ஆட்சியர் | லிக்டன் கான் |
முடிவுற்ற ஆண்டு | 1635– |
இனம் | மங்கோலியர்கள் |
பிரிவுகள் | செங்கிஸ் கானுக்கு முன்: கியான், டாய்ச்சியுட், சுரசன்; செங்கிஸ் கானுக்கு பின்: கியாத்-போர்சிசின், சூச்சிகள், கோர்சின்-போர்சிசின்கள், கிரய்கள், செய்பனிட்கள், கோசுட் |
போர்சிசின் (மொங்கோலியம்: Боржигин, போர்ஜிஜின்; Борджигин, போர்த்ஜிஜின்), செங்கிஸ் கான் மற்றும் அவரது குல வாரிசுகளின் கடைசி பெயராகும். மூத்த போர்சிசின்கள் 20ம் நுற்றாண்டு வரை மங்கோலியா மற்றும் உள் மங்கோலியாவிற்கு இளவரசர்களை அளித்தனர்.[1] இவ்வம்சம் மங்கோலியர்கள் மற்றும் சில மத்திய ஆசிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆளும் வர்க்கத்தை உருவாக்கியது. இன்று போர்சிசின்கள் மங்கோலியா, உள் மங்கோலியா, மற்றும் சிஞ்சியாங் பகுதிகளில் காணப்படுகின்றனர்[1], இருப்பினும் மரபியல் ஆய்வு மத்திய ஆசியாவில் செங்கிஸ் கானின் வழித்தோன்றல்கள் பொதுவாக உள்ளதை காட்டியுள்ளது.