உள்ளடக்கத்துக்குச் செல்

மின்புலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹீலியம் அணு ஓர் அணுவுக்குள்ளும் இருவேறு தன்மை உடைய நுண் துகள்கள் உள்ளன.
நேர்மின் தன்மை
எதிர்மின் தன்மை

மின் தன்மைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஓர் அணுவுக்குள்ளும் இருவேறு தன்மை உடைய நுண் துகள்கள் உள்ளன. ஒரு வகையான மின் தன்மையை நேர்மின் தன்மை என்றும் மற்றொரு வகையான மின்தன்மையை எதிர்மின் தன்மை என்றும் அழைக்கலாம். இத்தகைய இருவேறு தன்மை ஏற்ற பொருள்கள் தம்மைச் சுற்றி ஒருவகையான விசைப்புலம் கொண்டு இருக்கும். இப்புலத்தைத்தான் மின் புலம் (Electric Field) என்கிறோம்.

மின் புலம் உள்ள ஓரிடத்தில் ஒரு நேர்மின் தன்மை உடைய ஒரு பொருளை வைத்தால், அது மின்புல விசையால் எதிர்மின் மிகுந்துள்ள திசையில் நகரும். இந்த நேர் மின் தன்மையை கூட்டல் குறியாலும் (+) எதிர் மின் தன்மையை கழித்தல் குறியாலும் (-) குறிப்பது வழக்கம். மின் தன்மை ஏற்ற ஒரு பொருளை மின்னி (மின்னூட்டம் பெற்ற பொருள்) என்றோ மின்னேற்பு என்றோ அழைக்கப்படுகிறது. மின்புலம் ஒரு காவிப் புலமாகும். அதாவது மின்புல வலிமை பருமனையும் திசையையும் கொண்டிருக்கும். ஒரு மின்புலத்தில் ஓரலகு நேரேற்றத்தை வைக்கும் போது அது அனுபவிக்கும் விசையின் பருமனும் திசையும் அப்புள்ளியில் அம்மின்புலத்தின் மின்புல வலிமை எனப்படும்.[1][2][3]

மின்னேற்றத்தின் அளவை கூலோம் (Coulomb) என்னும் அலகால் அளக்கிறார்கள். மின் புலத்தில் உந்தப்படும் விசையின் அளவு இந்த மின்னேற்பின் அளவைப் பொறுத்தது. பொதுவாக மின்புலம் (E) பின்வரும் சமன்பாட்டினாற் தரப்படும்:

,
இங்கு,
E மின்புலம், இதன் அலகு நியூட்டன்/கூலோம் (N/C) அல்லது வோல்ட்/மீட்டர் (V/m),
F மின் விசை, கூலோமின் விதியினாற் தரப்படுகிறது,
q மின்னேற்பு (மின்னூட்டம்) (நேர்மின் தன்மையாக இருந்தால் +q , எதிர்மின்தன்மையாக இருதால் -q).

எனவே மின்புலம் மின்னேற்பின் பால் தொழிற்பட்டு, உந்துகின்றது. அந்த உந்து விசையே F எனப்படும் மின்விசையாகும். மின் புலமானது மின்னேற்றங்களினாலோ அல்லது நேரத்துடன் மாற்றமடையும் (பருமன் அல்லது திசை மாறும்) காந்தப் புலத்தினாலோ உருவாக முடியும்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Roche, John (2016). "Introducing electric fields". Physics Education 51 (5): 055005. doi:10.1088/0031-9120/51/5/055005. Bibcode: 2016PhyEd..51e5005R. 
  2. Feynman, Richard (1970). The Feynman Lectures on Physics Vol II. Addison Wesley Longman. pp. 1–3, 1–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-201-02115-8.
  3. Purcell, Edward M.; Morin, David J. (2013). Electricity and Magnetism (3rd ed.). New York: Cambridge University Press. pp. 15–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-01402-2.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்புலம்&oldid=4101896" இலிருந்து மீள்விக்கப்பட்டது