உள்ளடக்கத்துக்குச் செல்

முகிற்பேழ் மழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகிற்பேழ் மழை என்பது சில நிமிடங்களில் மிக அதிக அளவிலான மழை பொழிவதாகும். பெரும்பாலும் இம்மழையானது பெருத்த இடியுடன் ஆலங்கட்டி மழையாகப் பெய்யும். மிகச் சில நிமிடங்களில் அதிக அளவிலான மழை பொழிவதால், இவ்வகை மழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயற்கை பேரிடருக்கு வழிவகுக்கும்.

அறிவியல்

[தொகு]

நிலத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் உயரத்திற்கு மேலிருக்கும் மேகங்களில் இருந்தே முகிற்பேழ் மழை உருவெடுப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இம்மழைப் பொழிவானது மணிக்கு சுமார் 100 மில்லி மீட்டர் (3.94 அங்குலம்) அளவிலான நீரை நிலத்தில் பொழியும்.[1] மேலும், இவ்வகையான மழை திரள் கார்முகிலில் இருந்து இலான்மூயர் முறையில் பொழிகிறது.

அதிக அளவிலான முகிற்பேழ் மழை நிகழ்வுகள்

[தொகு]
காலம் மழை அளவு இடம் தேதி
1 நிமிடம் 1.9 அங்குலங்கள் (48.26 mm) லே, சம்மு & காசுமீர், இந்தியா 06 அகத்து, 2010
1 நிமிடம் 1.5 அங்குலங்கள் (38.10 mm) பரோடு, இமச்சல் பிரதேசம், இந்தியா 26 நவம்பர், 1970
5 நிமிடங்கள் 2.43 அங்குலங்கள் (61.72 mm) போர்டு பெலிசு, பனாமா 29 நவம்பர், 1911
15 நிமிடங்கள் 7.8 அங்குலங்கள் (198.12 mm) பிளம்பு பாயிண்டு, சமைக்கா 12 மே, 1916
20 நிமிடங்கள் 8.1 அங்குலங்கள் (205.74 mm) கர்டி-டி-ஆர்கிசு, ரோமேனியா 7 சூலை, 1947
40 நிமிடங்கள் 9.25 அங்குலங்கள் (234.95 mm) கினியா, வெர்சீனியா, ஐக்கிய அமெரிக்கா 24 அகத்து, 1906
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cloudbursts
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


சான்றுகள்

[தொகு]
  1. "What is a cloudburst?", Rediff News, India, 1 August 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகிற்பேழ்_மழை&oldid=3578070" இலிருந்து மீள்விக்கப்பட்டது