மோனோ சோடியம் செனேட்டு
| |||
பண்புகள் | |||
---|---|---|---|
NaHXeO4•1.5H2O | |||
வாய்ப்பாட்டு எடை | 241.27 கி/மோல் | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீவிர ஆக்சிசனேற்றி, நிலைப்புத்தன்மை அற்றது | ||
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மோனோ சோடியம் செனேட்டு (Monosodium xenate ) என்பது NaHXeO4•1.5H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செனிக் அமிலத்தின் சோடியம் உப்பான இச்சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும். அதிவினைத்திறன் கொண்ட செனான் சேர்மமாகவும் இது கருதப்படுகிறது. அதிக கார நிபந்தனைகளில் செனேட்டு விகிதச்சிதைவு அடைவதால் இருகாரசெனேட்டுகள் இருப்பதாக அறியப்படவில்லை.
தயாரிப்பு
[தொகு]3 மோல் செனான் டெட்ராபுளோரைடுடன் 4 மோல் சோடியம் ஐதராக்சைடும் நீரும் சேர்த்து வினைபுரியச் செய்தால் மோனோ சோடியம் செனேட்டு உருவாகிறது.
- 3 XeF4 + 4 H2O + 4 NaOH → Xe + 2 NaHO4Xe + 12 HF[1]
செனான் டிரையாக்சைடு மற்றும் சோடியம் ஐதராக்சைடு கரைசல்களைச் சேர்த்து தொடர்ந்து திரவ நைட்ரசன் வெப்பநிலைக்கு உறைவித்து நீர்நீக்கம் செய்தும் மோனோ சோடியம் செனேட்டு தயாரிக்கப்படுகிறது.
பண்புகள்
[தொகு]தூய்மையான நிலையில் 160 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது மோனோ சோடியம் செனேட்டு நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. இருப்பினும் ஒரு அதிர்ச்சியின் காரணமாக அல்லது XeO3 உடன் சேர்க்கப்படும்போது வெப்பக்குறைவு தோன்றினால் வெடிக்கக்கூடும். இச்சேர்மம் சிறிதளவு நச்சுத்தன்மை கொண்டதாகும். சுண்டெலிக்கான இதன் உயிர்க் கொல்லும் அளவு அதன் உடல் எடையில் 15 மற்றும் 30 மி.கி/கி.கி ஆகும். செனேட்டு உடம்பை விட்டு வெகுவிரைவாக நீங்குகிறது. சிதைவு மற்றும் மூச்சுவிடுதல் காரணமாக சுண்டெலியின் இரத்தத்தில் செனேட்டின் அளவு 20 நொடிகளில் பாதியாகக் குறைகிறது. வயிற்றறையில் செனேட்டின் அரை ஆயுள் காலம் 6 நிமிடங்களாக நீட்டிக்கப்படுகிறது.