யூகின் ரூட்டகரமா
யூகின் ரூட்டகரமா Eugène Rutagarama | |
---|---|
தேசியம் | ருவாண்டன் |
அறியப்படுவது | மலை கொரில்லாக்களைப் பாதுகாக்கும் முயற்சிகள் |
விருதுகள் | கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2001) |
யூகின் ரூட்டகரமா (Eugène Rutagarama) ருவாண்டாவைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராவார்.
ருவாண்டாவின் போர் மற்றும் படுகொலைகளால் அச்சுறுத்தப்பட்ட உலகின் கடைசி 650 மலை கொரில்லாக்களில் 355 கொரில்லாக்களைக் காப்பாற்ற வாழ்நாள் முழுவதும் யூகின் ரூட்டகரமா தனது உயிரைப் பணயம் வைத்து போராடினார். தேசிய பூங்காக்கள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவது மற்றும் கொரில்லாக்களின் வாழ்விடத்தை பாதுகாப்பது போன்ற செயல்பாடுகளில் யூகின் முக்கிய பங்கு வகித்தார். இம்முயற்சிகளுக்காக இவருக்கு கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு 2001 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[1]
2001 ஆம் ஆண்டு முதல் ரூட்டகர்மா மலை கொரில்லாப் பாதுகாப்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மலை கொரில்லாக்களின் வாழ்விடமான விருங்கா மலையை உள்ளடக்கிய மத்திய ஆல்பர்டைன் பகுதியை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு முயற்சிகளில் ரூட்டகரமா முக்கிய பங்கு வகிக்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Goldman Environmental Prize: Eugène Rutagarama பரணிடப்பட்டது 2007-10-30 at the வந்தவழி இயந்திரம் (Retrieved on November 10, 2007)