Showing posts with label 30 Days Lunch Menu. Show all posts
Showing posts with label 30 Days Lunch Menu. Show all posts
Wednesday, 16 March 2016 | By: Menaga Sathia

சீரக சாதம்,ஆலு பாலக்,கோவைக்காய் ராய்தா,ப்ளெயின் குல்சா,மசாலா மோர் / North Indian Veg Lunch menu

எப்போழுதும் தெந்நிந்திய மெனு சாப்பிட்டு போரடிவிட்டதால்,ஒரு மாறுதலுக்காக வட இந்திய லஞ்ச் செய்தேன்.என் பொண்ணு பாலக் பன்னீர் செய்ய சொன்னாங்க,ஆனால் பனீர் கைவசம் இல்லாததால் அதற்கு பதில் உருளை போட்டு செய்தாச்சு.

சீரக சாதம் (பால் சேர்க்காமல்,சீரகம் மட்டும் தாளித்து சேர்க்கவும் )
ஆலு பாலக் ( பனீர் பதில் உருளை சேர்க்கவும்)
மசாலா மோர்
கோவக்காய் ராய்தா
ப்ளெயின் குல்சா (ஸ்டப்பிங் சேர்க்காமல் செய்யவும்)

*அனைத்தும் ரெடியாக வைத்திருந்தால் சமையல் 1 மணிநேரம் முடித்துவிடலாம்.

*குல்சா செய்ய மாவினை பிசைந்து ஊறவைத்து விடவும்.

*மசாலா மோர் செய்து ப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

*அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும்,உருளையை வேகவைக்கவும்.ஆலு பாலக் செய்ய வெங்காயம்+தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

*சாலட்டிற்கு வெள்ளரிக்காய்,தக்காளியை வட்டமாக நறுக்கவும்.ராய்தாவிற்கு கோவைக்காய் துருவி வைத்தால் ராய்தா ரெடி.

*பாலக் கீரையை வதக்கி அரைத்தால் ஆலு பாலக் ரெடி செய்து விடலாம்.

*கடைசியாக சாதமும்,குல்சாவும் செய்தால் லஞ்ச் ரெடி...

Monday, 14 March 2016 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சி குழம்பு,கோங்கூரா பச்சடி,அவியல்&கொட்டு ரசம் / South Indian Veg Lunch Menu




இன்றைய சமையல்

மாங்காய் இஞ்சி குழம்பு
கோங்கூரா பச்சடி
அவியல்
கொட்டு ரசம்

*இந்த மொத்த சமையலும் 1 மணிநேரத்தில் முடித்துவிடலாம்.இதில் கோங்கூரா பச்சடி மட்டும் முதல் நாளே செய்துவிட்டேன்.

*புளியை குழம்பிற்கும்,ரசத்திற்கும் சேர்த்து ஊறவைத்து ,கரைத்து குழம்பு மற்றும் ரசத்திற்கு தனியாக வைக்கவும்.

*குழம்பிற்கு இஞ்சியை நறுக்கி,எண்ணெயில் வறுத்து அரைத்து வைக்கவும்,அவியலுக்கு தேங்காய் மசாலா தனியாக அரைத்துவைக்கவும்.

*அவியலுக்கு காய்களும்,குழம்பிற்கு வெங்காயம்,பூண்டும் நறுக்கி வைத்தால்,அவியல்,குழம்பு செய்துவிடலாம்.

*கடைசியாக ரசம்,சாதம் வைத்தால் உண்வு ரெடி!!
Tuesday, 14 April 2015 | By: Menaga Sathia

தமிழ் புதுவருட தாளி மெனு / 30 Days Veg Lunch Menu # 30



print this page PRINT IT

அனைவருக்கும் மன்மத வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

இன்றுடன் வெஜ் லஞ்ச் மெனு பதிவு நிறைவடைகிறது.

7 காய் சாம்பார்
தக்காளி ரசம்
உருளை வறுவல்
இனிப்பு பொங்கல்
மாங்காய் பச்சடி
பாசிபருப்பு பாயாசம்
மெதுவடை
அப்பளம்

  *கத்திரிக்காய்,முருங்கைகாய்,மாங்காய்,வெண்டைக்காய்,புடலங்காய்,கொத்தவரங்காய்,அவரைக்காய் என சேர்த்து செய்துருக்கேன்,இதில் ஏதாவது ஒருகாய் மட்டும் சேர்த்தும் செய்யலாம் புடலங்காய் தவிர...

*மாங்காய் பச்சடியிலயே வேப்பம்பூ சிறிது நெய்யில் வறுத்து சேர்த்துருக்கேன்.









Monday, 13 April 2015 | By: Menaga Sathia

முருங்கைக்கீரை தண்ணிசாறு,புடலங்காய் கூட்டு&புடலங்காய் விதை துவையல்/ 30 Days Veg Lunch Menu # 29

print this page PRINT IT

இன்றைய மெனு

முருங்கைக்கீரை தண்ணிசாறு
புடலங்காய் கூட்டு
புடலங்காய் விதை துவையல்

*புடலங்காய் விதை துவையல் குறிப்பு வேறொரு நாளில்.

*தண்ணிசாறு முருங்கைக்கீரைக்கு பதில் அகத்திகீரை,மணத்தக்காளி கீரை,வல்லாரை கீரையில் செய்யலாம்.


*சௌ சௌக்கு பதில் புடலங்காயில் செய்துருக்கேன்.
Sunday, 12 April 2015 | By: Menaga Sathia

பூண்டு குழம்பு,புளி இல்லாத கறி,தேங்காய் துவையல்&ரவா லட்டு/ 30 Days veg Lunch Menu # 28

print this page PRINT IT
இன்றைய மெனு

பூண்டு குழம்பு
புளி இல்லாத கறி
வாழைப்பூ முருங்கைகீரை பொரியல்
தேங்காய் துவையல்
ரவா லட்டு

*தேங்காய் துவையல் பானுமதி மாமியின் குறிப்பின் படி செய்தது.

*புளியில்லாத கறி இதுவும் முகநூலில் அறிமுகமான மைலி அவர்களின் குறிப்பின் படி செய்தது.

*இந்த 2 குறிப்பும் வேறொரு நாளில்..



Saturday, 11 April 2015 | By: Menaga Sathia

முருங்கைக்காய் தொக்கு,கொத்தவரங்காய் பொரியல்&அப்பளம் /30 Days Veg Lunch Menu # 27

print this page PRINT IT
இன்றைய மெனு

முருங்கைக்காய் தொக்கு
கொத்தவரங்காய் பொரியல்
அப்பளம்

*முருங்கைகாய் தொக்கினை முதல்நாளே செய்து விட்டால் வேலை சுலபம்.

*கொத்தவரங்காய் பொரியலுக்கு பதில் உசிலி செய்தால் இந்த தொக்கிற்கு நன்றாக இருக்கும்.
Friday, 10 April 2015 | By: Menaga Sathia

சேனை மசியல்,புடலங்காய் தோரன்,உருளை வறுவல்&கல்யாண ரசம்/ 30 Days Veg Lunch Menu # 26

print this page PRINT IT

இன்றைய மெனு

சேனை மசியல்
புடலங்காய் தோரன்
உருளை வறுவல்
புதினா துவையல்
கல்யாண ரசம்

*சேனை மசியல் பானுமதி மாமியின் குறிப்பின் படி செய்தது.

*கல்யாண ரசம் இதுவும் முகநூலில் அறிமுகமான சாந்தி ஜியின் குறிப்பின் படி செய்தது.

*இந்த 2 குறிப்பும் வேறொரு நாளில்..
Thursday, 9 April 2015 | By: Menaga Sathia

கத்திரிக்காய் சாம்பார்,பருப்பு ரசம்,சேப்பகிழங்கு வறுவல்,கோஸ் பொரியல் / 30 Days Veg Lunch Menu # 25

print this page PRINT IT
இன்றைய மெனு

கத்திரிக்காய் சாம்பார்
பருப்பு ரசம்
சேப்பகிழங்கு வறுவல்
பர்பிள் கோஸ் வறுவல்

*சேப்பகிழங்கு பதில் சேனைகிழங்கு வறுவல் செய்யலாம்

*எப்போழுதும் சாம்பார் செய்தால் பருப்பு ரசம் செய்வேன்,அதற்கு பதில் தக்காளி,எலுமிச்சை ரசம் செய்யலாம்.

*தர்பூசணிக்கு பதில் கத்திரிக்காயில் சாம்பார் செய்துருக்கேன்.
Wednesday, 8 April 2015 | By: Menaga Sathia

ஸ்பீனாச் கடையல்,வாழைப்பூ வடை &சேனைக்கிழங்கு வறுவல்/ 30 Days Veg Lunch Menu # 24

print this page PRINT IT

இன்றைய மெனு

ஸ்பீனாச் கடையல்
வாழைப்பூ வடை
சேனைக்கிழங்கு வறுவல்

*முளைக்கீரைக்கு பதில் ஸ்பினாச் சேர்த்து செய்துருக்கேன்.

*வாழைப்பூ வடையில் சன்னாவிற்கு பதில் கடலைப்பருப்பு ஊறவைத்து செய்துள்ளேன்.
Tuesday, 7 April 2015 | By: Menaga Sathia

உருண்டை மோர் குழம்பு & கேரட் பீன்ஸ் பொரியல்/ 30 Days Veg Lunch Menu # 23

print this page PRINT IT
இன்றைய சமையல்

பருப்பு உருண்டை மோர் குழம்பு
கேரட் பீன்ஸ் பொரியல்

*பருப்பு ஊறவைத்து அரைத்து உருண்டை பிடித்து ஆவியில் வேகவைத்த பின் மோர் குழம்பில் சேர்க்கவும்.

*கேரட் பீன்ஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்து பொரியல் செய்துள்ளேன்.தனிதனியாகவும் செய்யலாம்.

*இதில் கோஸ் பதில் பீன்ஸ் சேர்த்துள்ளேன்.
Monday, 6 April 2015 | By: Menaga Sathia

கொத்தவரங்காய் பிட்லை,மோர்&குட்டி உருளை வறுவல் / 30 Days Veg Lunch Menu # 22

print this page PRINT IT
இன்றைய மெனு

கொத்தவரங்காய் பிட்லை
மோர்
குட்டி உருளை வறுவல்

கொத்தவரங்காய் பிட்லை குறிப்பும் பானுமதி மாமி அவர்கள் சொல்லியபடி செய்தது.மிக அருமையாக இருந்தது.மிக்க நன்றி மாமி!!

*பிட்லை குறிப்பு வேறொரு நாளில் பகிர்கிறேன்.

*மோரினை விரும்பினால் தாளிக்கவும்.

*பிட்லைக்கு குட்டி உருளை வறுவல் நல்ல காம்பினேஷன்.

*உருளை வறுவலில் வெந்தயக்கீரை சேர்க்காமல் செய்துள்ளேன்.
Sunday, 5 April 2015 | By: Menaga Sathia

பரங்கிப்பேட்டை சோயா பிரியாணி,காலிபிளவர் 65 & பாதுஷா / 30 Days Veg Lunch Menu # 21

print this page PRINT IT
இன்றைய சமையல்

பரங்கிப்பேட்டை சோயா பிரியாணி
காலிபிளவர் 65
வெள்ளரிக்காய் ராய்த்தா
பாதுஷா

*பரங்கிபேட்டை பிரியாணிக்கு மசாலா பொடி தான் முக்கியமானது.இதில் நான் மட்டனுக்கு பதில் சோயா உருண்டை மற்றும் சீரக சம்பா அரிசியில் செய்துருக்கேன்.

*சீரக சம்பாவில் செய்யும் போது 1 கப் அரிசிக்கு = 2 கப் நீர் சேர்க்கவும்.

*காலிபிளவர் 65 குறிப்பு வேறொரு நாளில் பகிர்கிறேன்.

*ராய்த்தாவில் கோவக்காய்க்கு பதில் வெள்ளரிக்காயில் சேர்த்துருக்கேன்.

*பாதுஷா மேலே இனிப்பில்லாத கோவா வைத்து பரிமாறியிருக்கேன்,அது இல்லாமலும் பரிமாறலாம்.

Saturday, 4 April 2015 | By: Menaga Sathia

தயிர் சாதம்&ஆவக்காய் ஊறுகாய் | 30 Days Veg Lunch Menu # 20

print this page PRINT IT
இன்றைய சமையல் மிக சுலபமானது
தயிர் சாதம்
ஆவக்காய் ஊறுகாய்

*சாதத்தை நன்றாக வேகவைத்து மசித்து ஆறியதும் தயிர்+தாளித்து சேர்த்தால் சாதம் ரெடி.



Friday, 3 April 2015 | By: Menaga Sathia

ஸ்பீனாச் கூட்டு,பீட்ரூட் பொரியல்&இலை வடாம் / 30 Days Veg Lunch Menu # 19

print this page PRINT IT
இன்றைய சமையல்

ஸ்பீனாச் கூட்டு
பீட்ரூட் பொரியல்
இலை வடாம்

*சௌ சௌக்கு பதில் ஸ்பீனாச் கீரையை பொடியாக அரிந்து செய்துள்ளேன்,மேலும் கடலைப்பருப்புக்கு பதில் பாசிப்பருப்பில் சேர்த்துருக்கேன்

*இலை வடாம் குறிப்பு வேறொரு நாளில் பகிரப்படும்.

*பீட்ரூட் பதில் கோஸ்,கேரட்,பீன்ஸ் என பொரியல் செய்யலாம்.
Wednesday, 1 April 2015 | By: Menaga Sathia

முருங்கை உருளை குருமா,தக்காளி தித்திப்பு&கோஸ் பொரியல் / 30 Days Veg Lunch Menu # 18

print this page PRINT IT
இன்றைய சமையல்

முருங்கை உருளை கேரட் குருமா
தக்காளி தித்திப்பு
கோஸ் பொரியல்

*வேறொரு நாளில் குருமா குழம்பின் செய்முறையை பகிர்ந்து கொள்கிறேன்.

*இதில் மேற்கூறிய ஏதாவது ஒரு காய் மட்டும் அல்லது மூன்று காய்களுமே சேர்த்து செய்யலாம்.

*தேங்காய் பால் சேர்த்து செய்துள்ளேன் அல்லது தேங்காய் அரைத்து ஊற்றி செய்யலாம்.

*கோஸ் பதில் பீன்ஸ் , கேரட்டில் பொரியல் செய்யலாம்.

*தக்காளி தித்திப்பு பதில் கேரட் அல்லது பீட்ரூட் இல் செய்யலாம்.அல்லது மாங்காய் பச்சடி செய்யலாம்.
Tuesday, 31 March 2015 | By: Menaga Sathia

சௌ சௌ கூட்டு ,ரசம்& வாழைக்காய் வறுவல் /30 Days Veg Lunch Menu # 17

print this page PRINT IT
இன்றைய சமையல்

பருப்பு ரசம்
சௌ சௌ கூட்டு
வாழைக்காய் வறுவல்

*பருப்புகளை வேக வைத்து எடுத்து விட்டால்,ரசம் மற்றும் கூட்டு உடனே செய்து விடலாம்.

*வாழைக்காய் வறுவலுக்கு பதில் உருளைகிழங்கை இதே போல் செய்யலாம்.
Monday, 30 March 2015 | By: Menaga Sathia

வாங்கிபாத்&உருளை சிப்ஸ் / 30 Days Veg Lunch Menu # 16

print this page PRINT IT
இன்றைய சமையல்

வாங்கிபாத்
உருளை சிப்ஸ்

*உருளை சிப்ஸ் கடையில் வாங்கியது.

*சிம்பிள் கத்திரிக்காய் சாதம் குறிப்பினை இங்கே பார்க்கவும்.
Sunday, 29 March 2015 | By: Menaga Sathia

வத்தகுழம்பு,கொத்தவரங்காய் உசிலி & கேரட் கீர்/30 Days Veg Lunch Menu # 15


print this page PRINT IT
இன்றைய சமையல்

கொத்தவரங்காய் உசிலி

*கொத்தவரங்காய்க்கு பதில் வாழைப்பூ,கோஸ்,கேரட்,குடமிளகாயில் உசிலி செய்யலாம்.

*தயிர்க்கு பதில் ரசம் செய்துக் கொள்ளலாம்.

Saturday, 28 March 2015 | By: Menaga Sathia

எலுமிச்சை சாதம்,உருளைக்கிழங்கு வறுவல் / 30 Days Veg Lunch Menu # 14

print this page PRINT IT
எலுமிச்சை சாதம்
உருளை வறுவல்

*சாதத்தை வடித்து ஆறவைத்தால் எலுமிச்சை கலவை ரெடி செய்து ஆறியதும் சாதத்தில் கலந்தால் சாதம் ரெடி ..

*உருளை வேகவைத்து தாளிதம் செய்யவும்.

*மொத்த சமையலும் 1/2 மணிநேரத்தில் முடித்துவிடலாம்.
Friday, 27 March 2015 | By: Menaga Sathia

கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு,வெண்டைக்காய் பொரியல் & உப்பு மாங்காய்/ 30 Days Veg Lunch Menu # 13

print this page PRINT IT
இன்றைய மெனு

கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு
வெண்டைக்காய் பொரியல் 
உப்பு மாங்காய்

முகநூலில் அறிமுகமான பானுமதி மாமியின் குறிப்பின்படி இந்த பொரிச்ச குழம்பு செய்தேன்.சூப்பராக இருந்தது.நன்றி மாமி!!

*மாமியின்  கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு குறிப்பினை வேறொருநாள் பகிர்ந்து கொள்கிறேன்.

*நான் செய்த பொரிச்ச குழம்பு ரெசிபியை இங்கே பார்க்கவும்.

*உப்பு மாங்காய் என்பது மாங்காயை நீளவாக்கில் அறிந்து உப்பில் ஊறவைத்து உடனே பயன்படுத்தலாம்.
01 09 10