Thursday, 30 May 2013 | By: Menaga Sathia

முருங்கைக்கீரை பொரியல் /Drumstick Leaves Poriyal

தே.பொருட்கள்

 முருங்கைக்கீரை - 2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
நசுக்கிய பூண்டுப்பல் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு+சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*நீர் கொதித்ததும் கீரையை சேர்த்து நீர் சுண்டும் வரை கிளறவும்.

*பின் தேங்காய்த்துறுவல்+நசுக்கிய பூண்டுப்பல் சேர்த்து கிளறி இறக்கவும்.

Sending to Priya's Vegan Thursday & Gayathri's WTML @ Nivedhanam
Monday, 27 May 2013 | By: Menaga Sathia

பட்டாணி புலாவ்/Peas Pulao

தே.பொருட்கள்

பாஸ்மதி - 2 கப்
ப்ரோசன் பட்டாணி - 3/4 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
வெங்காயம் - 1
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

பட்டை - சிறுதுண்டு
கிராம்பு+ஏலக்காய் - தலா 3
பிரியாணி இலை -2

செய்முறை

*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*குக்கரில் வெண்ணெய் போட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+பட்டாணி  சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் அரிசி + உப்பு+2 கப் நீர்+தேங்காய்ப்பால் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
Thursday, 23 May 2013 | By: Menaga Sathia

மசாலா வேர்க்கடலை/Masala Peanuts

 தே.பொருட்கள்
வேர்க்கடலை - 1 கப்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கடலைமாவு - 4 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சாட்மசாலா - 1 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க


செய்முறை


*ஒரு பவுலில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
*எண்ணெய் காயவைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Monday, 20 May 2013 | By: Menaga Sathia

சத்துமாவு கொழுக்கட்டை/ Health Mix Kozhukattai


தே.பொருட்கள்

சத்துமாவு - 1 கப்
நாட்டு சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பாசிபருப்பு -  2 டேபிள்ஸ்பூன்
எள் -  1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*எள் +பாசிபருப்பு+சத்துமாவு இவற்றை தனித்தனியாக வெறும் கடாயில் வாசனை வறும் வரை வறுக்கவும்.

*இதனுடன் மேற்கூறிய பொருட்களிளை ஒன்றாக கலந்து வெந்நீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.

*கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

Sending to Easy to prepare in 15 mins @Aathidhyam  &Gayathri's WTML Event @Nivedhanam.
Thursday, 16 May 2013 | By: Menaga Sathia

பைனாப்பிள் லஸ்ஸி /Pineapple Lassi


தே.பொருட்கள்

பைனாப்பிள் துண்டுகள் - 1 கப்
தயிர் - 2 கப்
தேன் -  1/8 கப்
பால் - 1/4 கப்
ஐஸ் துண்டுகள் - 5

செய்முறை

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து பருகவும்.

Sending to easy to prepare in 15 minutes @Aathidhyam & Gayathri's  WTML Event @ Nivedhanam
Monday, 13 May 2013 | By: Menaga Sathia

ஆட்டுக்கால் குழம்பு/Aatukal (Goat Leg) Khuzhampu


அண்ணியிடம் கற்றுக்கொண்ட குறிப்பு...

தே.பொருட்கள்

‍சுத்தம் செய்த‌ ஆட்டுக்கால் ‍- 1 செட்
மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்த துவரம்பருப்பு  - 1/4 கப்
நறுக்கிய வெங்காயம்  -1
நறுக்கிய தக்காளி -1
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
தனியாதூள்- 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு

தாளிக்க

கிராம்பு -3
பிரியாணி இலை- 2
பட்டை - சிறுதுண்டு
ஏலக்காய்  - 2

அரைக்க‌
தேங்காய்த்துறுவல்  - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்



செய்முறை

*ஆட்டுக்காலை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 - 5 விசில் வரை வேகவைக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சிபூண்டு விழுது+தக்காளி+தூள் வகைகள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் வேகவைத்த கால்+நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்றாக கொதித்ததும் வேகவைத்த துவரம்பருப்பு+அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மேலும் கொதிக்கவைத்து இறக்கவும்.

*சப்பாத்தி,பரோட்டா,சாதம் என அனைத்திற்க்கும் நன்றாக இருக்கும்.

பி.கு
*அம்மா இதனுடன் மொச்சைக்கொட்டை  சேர்த்து கறிகுழம்பு போல் செய்வாங்க.

Friday, 10 May 2013 | By: Menaga Sathia

மல்டிக்ரேயின் வெஜ் பிஸ்ஸா/Yeast Free Multigrain Veg Pizza For HBC -1


தே.பொருட்கள்

மைதா - 1/2 கப்+ 1/4 கப்
கோதுமைமாவு  - 1/2 கப்
பொடித்த ஒட்ஸ்  - 1/2 கப்
பார்லிமாவு - 1/2 கப்
ப்லாக்ஸ் ஸூட் விதை -  1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் -  1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா  -  தலா 1 டீஸ்பூன்
தயிர்  - 1/4 கப்
எலுமிச்சை சாறு -  1 டேபிள்ஸ்பூன்
உப்பு  - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் -  2 டேபிள்ஸ்பூன்


பிஸ்ஸா டாப்பிங் செய்ய‌

பனீர் துண்டுகள் - 1/2 கப்
துருவிய சீஸ் - தேவைக்கு
நறுக்கிய  ஆலிவ் காய்  - 6
குடமிளகாய் துண்டுகள்  - தேவைக்கு
பிஸ்ஸா/பாஸ்தா சாஸ் - 1/4 கப்
நீளமாக மெலிதாக நறுக்கிய வெங்காயம்  - 1
நறுக்கிய காளான்  -  1/4 கப்
இத்தாலியன் மிக்ஸட் ஹெர்ப்  - 1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்


செய்முறை

*1/2 கப் மைதா+கோதுமைமாவு+ஒட்ஸ்+பார்லிமாவு+உப்பு+எள்+ப்லாக்ஸ் ஸூட் பவுடர்+எள்+பேக்கிங் பவுடர்+பேக்கிங் சோடா + ஆலிவ் எண்ணெய் அனைத்தையும் ஒன்றாக கலந்து தயிர் சேர்த்து கலக்கவும்.

*தேவைக்கு நீர் சேர்த்து பிசைந்து கடைசியாக எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 5 மணிநேரம் வைக்கவும்.

*இருமடங்கு உப்பிய மாவை 1/4 கப் மைதா சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து வட்டமாக உருட்டி ஆங்கங்கே முள்கரண்டியால் குத்தி ஆலிவ் எண்ணெயை ப்ரெஷ்ஷால் தடவி விடவும்.

*ஓரங்களை மட்டும் 1 இஞ்ச் அளவு தடிமனாக தட்டி முற்சூடு செய்த அவனில் 220°C இல் 5 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*பேக் செய்த பிஸ்ஸா அடிப்பாகத்தில் பிஸ்ஸா சாஸை பரவலாக தடவி அதன்மேல் குடமிளகாய்+வெங்காயம்+ஆலிவ் காய்+பனீர் இவற்றினை பரவலாக வைத்து அதன்மேல் துருவிய சீஸ் தூவி ஆலிவ் எண்ணெயை ஊற்றி  இத்தாலியன் மிக்ஸட் ஹெர்ப்  தூவி விடவும்.

*மீண்டும் 220°C  இல் 5‍ - 6 நிமிடங்கள் (அ )சீஸ் உருகும் வரை பேக் செய்து எடுக்கவும்.



This is the 1 st time i post the recipe in  both tamil & english languages. HBC challenge was started by priya suresh  .The 1st  month challenge is given by Divya prakash ,as she suggest  pizza recipe gave 4  choices ,This time i tried to make  homemade multigrain flour without yeast.came out very well.Thxs to Priya & Divya!!

Ingredients


Multigrain Pizza Base  (Yeast Free)  - Recipe Follows
Pizza Sauce - 1/2 cup
Bell Pepper
Olives- 6 (Chopped)
Grated Cheese - 1/2 cup
Paneer -1/2 cup
Onion - 1 Small (Sliced)
Olive Oil  - as needed
Italian Seasoning - 1 Tspn


Method


*Preheat the oven  to 220° C .Brush the Pizza Base with olive oil &place it in baking tray and bake for 3  minutes.

*Then take out the Pizza Base  from oven spread with  sauce +cheese+paneer+bell pepper+onion+olives sprinkle with some cheese or top with ur fav veggies.+Italian Seasoning

*Bake for 5-6 mins &enjoy the healthy multigrain pizza!!..


Recipe For  Yeast Free Multigrain Pizza

Wheat Flour -1/2 cup
APF - 1/2 cup + Extra for dust
Oats Powder + Barley Flour = Each 1/2 cup
Flax seeds powder+White Sesame seeds = Each 1 Tbspn
Baking Powder+Baking Soda = Each 1 Tspn
Yoghurt -1/4 cup
Lemon Juice - 1Tbspn
Olive Oil - 2 Tbspn
Salt -as needed

Method

*Sieve all dry ingredients in a bowl.To that add salt mix & then add yoghurt combine together well.

*Add water &start  to knead the dough.Make Very Soft and the dough which is very little sticky.

*Now add lemon juice,mix well.cover the dough with wet towel &cover with lid and keep in warm place for 4-5 hrs.

*After 4  hrs dough will rise & almost double in size.

*Now sprinkle some dry flour on rolling board,take a ball &stretch out from all the sides.You may also make use of rolling pin and roll like chappathi.

*Place rolled pizza base in prepared pizza stone R Baking tray .

*Preheat the Oven at 220°C &bake for  5 Minutes.

Notes:

.I suggest  to precook the pizza base (before u add the toppings) for 5 mins or so.I have done this &achieved the gr8 crispy results.

*If u wish u can add  yeast  in Pizza Base.


To join this group,click here..
Wednesday, 8 May 2013 | By: Menaga Sathia

மைசூர் மசாலா தோசை /Mysore Masala Dosa



இது நாம் சாதாரணமாக செய்யும் மசாலா தோசை போலதான்..சிகப்பு சட்னியை தோசை சிறிது வெந்ததும் அதன்மேல் தடவி ஸ்டப்பிங் வைத்து மடிப்பதுதான் மைசூர் மசாலா தோசை.மசாலா தோசையை நான் காலிபிளவர் மசாலாவை ஸ்டப்பிங் செய்து ஏற்கனவே செய்துள்ளேன்.இம்முறை இந்த தோசைக்கு பிரபலமான உருளை மசாலவை ஸ்டப்பிங் வைத்து செய்துள்ளேன்..

தே.பொருட்கள்

தோசை மாவு  - 3 கப்
சிகப்பு சட்னி   - தேவைக்கு
உருளை மசாலா   - தேவைக்கு
நல்லெண்ணெய்/நெய்

சிகப்பு சட்னி செய்ய தே.பொருட்கள்


பூண்டுப்பல் -  10
வரமிளகாய் -  8
தக்காளி - 1
உப்பு+எண்ணெய் தேவைக்கு

செய்முறை

* மேற்கூறிய பொருட்களில் உப்பை தவிர மீதமுள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி ஆறியதும் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.


உருளை மசாலாவுக்கு தே.பொருட்கள்

வேகவைத்த உருளை - 2 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம்  - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க‌

கடுகு+உளுத்தம்பருப்பு  தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்


செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள்+உப்பு+சோம்புத்தூள்+மசித்த உருளை சேர்த்து கிளறி தேவையான நீர் சேர்த்து கொதிக்கவைத்து கெட்டியனதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

மைசூர் மசாலா தோசை செய்முறை


*தோசைகல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி மெலிதாக தேய்த்து சுற்றிலும்  நல்லெண்ணெய்/நெய் ஊற்றி வேகவிடவும்.


*வெந்ததும் சிகப்பு சட்னியை பரவலாக தடவி அதன்மேல் உருளை மசாலாவை வைத்து மடித்து எடுக்கவும்.

*சட்னி / சாம்பாருடன் பரிமாறவும்.

Sending to Gayathri's WTML Event @Nivedhanam

Monday, 6 May 2013 | By: Menaga Sathia

லச்சா பரோட்டா /Lachha Paratha




தே.பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப் + 3 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*2 கப் கோதுமைமாவில் உப்பு+சர்க்கரை கலந்து தேவையானளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசைந்து எண்ணெய் தடவி 1 மணிநேரம் வைக்கவும்.

* நெய்யை சூடு செய்து 3 டேபிள்ஸ்பூன் மாவை கலந்து வைக்கவும்.

*மாவை உருண்டைகளாகி மெலிதாக தேய்த்து அதன்மேல் நெய் கலவையை பரவலாக தடவவும்.

*அதனை ஒரு முனையிலிருந்து இடது+வலது பக்கமாக மடித்துக் கொண்டே வந்து கயிறு போல இழுத்து வட்டமாக சுற்றவும்.

*இப்படியே அனைத்து உருண்டைகளையும் செய்த பின் ,ஒரு உருண்டையை எடுத்து மெலிதாக உருட்டவும்.



*அதனை தவாவில் 2பக்கமும் எண்ணெய் விட்டு சூடு செய்து எடுக்கவும்.3அல்லது 4 பரோட்டக்களை போட்டவுடன் சூட்டோடு 2பக்கமும் கைகளால் தட்டவும்.அப்போழுதுதான் லேயராக வரும்.

பி.கு
*விரும்பினால் மாவு பிசையும் போது 1 முட்டை சேர்த்து பிசையலாம்.

Sending to Gayathri's WTML Event @ Nivedhanam
Thursday, 2 May 2013 | By: Menaga Sathia

பால் கொழுக்கட்டை - 2 /Paal Kozhukattai -2


ஏற்கனவே பால் கொழுக்கட்டையை சர்க்கரை செய்துருக்கேன்.இப்பொழுது என் பையனுக்கு முதல் பல் வரும்போது வெல்லம் சேர்த்து செய்தேன்..


தே.பொருட்கள்

அரிசி மாவு ‍-  1/2 கப்
நெய் -  1/2 டீஸ்பூன்
உப்பு  - 1/8 டீஸ்பூன்
துருவிய வெல்லம்  - 1/2 கப்
பால் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் -  1/4 டீஸ்பூன்

செய்முறை

*அரிசிமாவு+உப்பு சேர்த்து கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

*கடாயில்  நெய் விட்டு அரிசிமாவை ஊற்றி கைவிடாமல் கிளறி நன்கு கெட்டியாகி வரும் போது இறக்கி ஈரத்துணியால் மூடி 10 நிமிடம் வைக்கவும்.

*வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டவும்.

*ஒரு பாத்திரத்தில் பால்+ 1 கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.

*அரிசிமாவினை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் நீரில் போடவும்.

*உருண்டை வெந்து மேலே வரும் போது அடுத்த சிறு உருண்டைகளை போடவும்.

*நன்கு வெந்ததும் வெல்லத்தினை ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவைத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து இறல்லவும்.

பி.கு

*முதலில் சேர்க்கும் உருண்டை வெந்த பிறகுதான் அடுத்த சில உருண்டைகளை சேர்க்கவேண்டும்,இல்லையெனில் உருண்டைகள் உடைந்துவிடும்.

*வெல்லம் சேர்த்தபின் நீண்டநேரம் கொதிக்கவைத்தால் பால் திரிந்துவிடும்.

Sending to Gayathri's WTML Event @ Nivedhanam
01 09 10