Monday, 19 June 2017 | By: Menaga Sathia

முடக்கத்தான் கீரை குழம்பு / Mudakathan Keerai (Balloon Vine) Kuzhambu | Kuzhambu Recipe

முடக்கத்தான் கீரையை மாதம் 2 முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.ஏற்கனவே முடக்கத்தான் கீரை சூப் பகிர்ந்துள்ளேன் . குறிப்பினை இங்கே  பார்க்கவும்.

தே.பொருட்கள்

முடக்கத்தான் கீரை - 1/2 கப்
புளிகரைசல் -2 கப்
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
நல்லெண்ணெய் -1/4 கப்
பூண்டுப்பல் -4
வெங்காயம் -1 (நீளவாக்கில் அரிந்தது)
கறிவேப்பிலை - சிறிது
வடகம் -2 டீஸ்பூன்

செய்முறை

முடக்கத்தான் கீரை

 * பாத்திரத்தில் முடக்கத்தான்    கீரையை  சிறிது நல்லெண்ணெயில் வதக்கி ஆறவைக்கவும்.

 *அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி வடகம் சேர்த்து தாளித்து வெங்காயம்,பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
 *பின் சாம்பார் பொடி சேர்த்து லேசாக வதக்கி,உப்பு மற்றும் புளிகரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.

*குழம்பு நன்றாக கொதிததும்,வதக்கிய கீரையை ஒன்றும்பாதியுமாகவோ அல்லது மைய அரைத்து குழம்பில் சேர்க்கவும்.

*நன்கு கொதித்து எண்ணெய் மேலே மிதந்து வரும்போது இறக்கவும்.
Wednesday, 14 June 2017 | By: Menaga Sathia

குல்கந்த் /Homemade Gulkand Recipe | How To Make Gulkand

குல்கந்த் செய்வதற்கு பன்னீர் ரோஜாக்கள் வேண்டும்.இந்த ரோஜாக்களை அல்ஜீரியா தோழியின் வீட்டில் கேட்டபோது எனக்காக செடியில் பூத்திருந்த அனைத்து பூக்களையும் பறித்து கொடுத்தாங்க.
அவர்களும் இதனை என்ன செய்வீங்கன்னு கேட்டபோது இதனுடைய நன்மைகளையும்,குல்கந்த் செய்முறையும் சொன்னபோது அவர்களும் செய்வதாக சொன்னாங்க.

தே.பொருட்கள்
பன்னீர் ரோஜா இதழ்கள் - 4 கப்
நாட்டு சர்க்கரை -1 கப்

செய்முறை
*ரோஜா இதழ்களை தனிதனியாக பிரித்து நன்கு அலசி ஈரம்போக துணியில் உலர்த்தவும்.

*அதனை மிக்ஸியில் பல்ஸ் மோடில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
 *சுத்தமான பாட்டிலில் கொஞ்சம் ரோஜா இதழ்கள்+கொஞ்சம் சர்க்கரை என மாற்றி மாற்றி போட்டு மூடி வைக்கவும்.
*மறுநாள் பாட்டிலை வெயிலில் வைக்கவும்,மாலையில் நன்கு கிளறி விடவும்.

*இதே போல் 1 வாரம் வரை வைத்து எடுத்தால் குல்கந்த் ரெடி!!
Thursday, 1 June 2017 | By: Menaga Sathia

கத்திரிக்காய் கடையல் /Brinjal Kadaiyal | Side Dish For Idli& Dosa

தே.பொருட்கள்
சிறிய கத்திரிக்காய் -1/4 கிலோ
வெங்காயம் -1
தக்காளி -1
பச்சை மிளகாய் -3
புளி - பெரிய நெல்லிக்காயளவு
உப்பு - தேவைக்கு
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிது
காய்ந்த மிளகாய் -1

செய்முறை
*கத்திரிக்காயை பொடியாகவும்,வெங்காயம்+தக்காளியும் நறுக்கி வைக்கவும்.
*பாத்திரத்தில் அனைத்தும் சேர்த்து உப்பை தவிர நீர் ஊற்றி வேகவைக்கவும்.

 *வெந்ததும் சட்டி அல்லது மிக்ஸியில் வேகவைத்த நீரை வடிகட்டி கடைந்துக் கொள்ளவும்.

*கெட்டியாக இருந்தால் தேவைக்கு வேகவைத்த நீரை சேர்த்து கலக்கவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் உப்பு சேர்த்து கலந்து இட்லி/தோசையுடன் பரிமாறவும்.
01 09 10