உள்ளடக்கத்துக்குச் செல்

இருநூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் உசைன் போல்ட் உலக சாதனை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 22, 2009, பெர்லின்:


ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்துவரும் உலக தடகளப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் யமேக்காவின் உசைன் போல்ட் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


ஏற்கனவே இவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் புதிய உலக சாதனை ஏற்படுத்தியிருந்தார்.


வீயாழன் இரவு இடம்பெற்ற போட்டிகளில் இருநூறு மீட்டர்களை 19.19 விநாடிகளில் ஓடிக் கடந்துள்ளார் உசைன் போல்ட். கடந்த ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தான் ஏற்படுத்திய 19.30 விநாடிகள் என்ற சாதனையை தானே முறியடித்துள்ளார் அவர்.


கடந்த ஞாயிறன்று நடந்திருந்த 100 மீட்டர் இறுதிப்போட்டியிலும் பெய்ஜிங்கில் தான் ஏற்படுத்திய உலக சாதனையை தானே முறியடித்து புதிய சாதனை படைத்திருந்தார் அவர்.


100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே ஒலிம்பிக் சாம்பியன் பட்டங்களையும் உலகப் சாம்பியன் பட்டங்களையும் பெற்ற தடகள வீரர் என்ற பெருமையை சரித்திரத்தில் இதற்கு முன்னர் எவரும் பெற்றதில்லை.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]