உள்ளடக்கத்துக்குச் செல்

சிலி சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியின் முதற் கட்டம் வெற்றி

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 10, 2010

சிலியின் சுரங்கம் ஒன்றில் இரண்டு மாதங்களாகச் சிக்கியிருக்கு 33 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியின் முக்கிய கட்டமாக, நிலத்தைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள துளை சுரங்கத் தொழிலாளர்கள் தங்கியுள்ள அறையைச் சென்றடைந்துள்ளது. இவர்களை வெளியே கொண்டுவருவதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கை புதன்கிழமை அன்று ஆரம்பமாகும் என சிலியின் சுரங்கத்துறை அமைச்சர் தெரிவித்தார்.


சுரங்கத் தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொதிகள் அனுப்பும் குழாய் ஒன்று

சான் ஒசே சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலவறையை சென்றடையும் முயற்சி நேற்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் நிறைவடைந்ததை அடுத்து நாடு முழுவதும் கொண்டாட்டங்களும் மகிழ்ச்சி ஆரவாரமுமாக இருந்தன.


கடந்த ஆகத்து 5 ஆம் நாளில் இருந்து 700 மீட்டர் ஆழத்தில் 33 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.


தொழிலாளர்களை மேலே கொண்டு வருவதற்கு முன்னர் மருத்துவர் ஒருவர் கீழே சென்று அவர்களின் உடல், மனநிலையைப் பரிசோதிப்பார் என அமைச்சர் தெரிவித்தார். முதலாவது தொழிலாளரை மேலே கொண்டுவரும் பணி புதன்கிழமை தொடங்கும். இரு நாட்களில் இப்பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்