விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 142: | வரிசை 142: | ||
:புத்தாடை புனைந்து பட்டாசு வெடித்து பட்சணங்களுடன் கொண்டாடி புதுத் திரைப்படங்களில் மகிழ்ந்திருக்கும் இனிய நண்பர்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !! |
:புத்தாடை புனைந்து பட்டாசு வெடித்து பட்சணங்களுடன் கொண்டாடி புதுத் திரைப்படங்களில் மகிழ்ந்திருக்கும் இனிய நண்பர்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !! |
||
--[[பயனர்:Rsmn|மணியன்]] 04:25, 26 அக்டோபர் 2011 (UTC) |
--[[பயனர்:Rsmn|மணியன்]] 04:25, 26 அக்டோபர் 2011 (UTC) |
||
<div class="usermessage"><div class="plainlinks">[[படிமம்:Diwali_Diya.jpg|100px|link=தீபாவளி]]வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகை!! அனைத்து [[விக்கிபீடியர்கள்|விக்கிபீடியர்களுக்கும்]] [[தீபாவளி|தீபத்திருநாள்]] நல் வாழ்த்துக்கள்! <br /> |
|||
-- --[[பயனர்:Shameermbm|சமீர்]] 06:03, 26 அக்டோபர் 2011 (UTC)</div></div> |
|||
==அரபி விக்கி மாநாடு== |
==அரபி விக்கி மாநாடு== |
06:03, 26 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்
|
---|
நிலுவையில் உள்ள பணிகள்
|
0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17b 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 |
ஆலமரத்தடிக்கு வருக! இங்கு விக்கிப்பீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் போன்றவை இடம் பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
புதிய தட்டச்சுக் கருவி
பிற விக்கித்திட்டங்களில் வெற்றிகரமாக நிறுவப்பட்டதைத் தொடர்ந்து விக்கிப்பீடியாவிலும் இறுதியாக புதிய தட்டச்சுக் கருவி (நரையம் நீட்சி) நிறுவப்பட்டு விட்டது. பழைய கருவி நீக்கப்பட்டு விட்டது. கருவியைப் பயன்படுத்த காணுங்கள் உதவி:தமிழ்த் தட்டச்சு
- புகுபதிகை செய்தவர்கள்
- புகுபதிகை செய்யாதவர்கள்
தெரிவு செய்தபின்னர் தட்டச்சு செய்யும் பெட்டிகள் நீலநிறத்தில் தோன்றும்.--சோடாபாட்டில்உரையாடுக 17:58, 12 அக்டோபர் 2011 (UTC)
- நரையம் நீட்சி நன்றாக வேலை செய்கிறது. உலாவியில் புதிய பக்கங்கள் வருவதற்கு சற்று தாமதமாவது போல இருக்கிறது. Cache பிரச்சினை என்றால் பழகப்பழக சரியாகிவிடும் என்று நம்புகிறேன்.--மணியன் 08:48, 13 அக்டோபர் 2011 (UTC)
முடிந்தால், பாமினி எழுத்துருவையும் சேர்க்க வேண்டும். இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
- அடுத்து ரெங்கநாதன் விசைப்பலகை சேர்க்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம் (அதுவே இலங்கைப் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்று எண்ணியிருந்தேன்). இது பாமினியிலிருந்து நிறைய வேறுபட்டதா?. இவற்றைப் பயன்படுத்துவோர் எதற்கு முன்னுரிமை அளிப்பது (அல்லது இரண்டும் வேண்டுமா) என்று தெளிவு படுத்தினால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர இயலும். இங்கோ அல்லது என் பேச்சு பக்கத்திலோ அல்லது ஸ்ரீகாந்தின் பேச்சு பக்கத்திலோ கருத்துகளை தர வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 19:42, 12 அக்டோபர் 2011 (UTC)
- ரெங்கநாதன் விசைப்பலகையிலும் விட பாமினியே இலங்கைத் தமிழராலும், புலம்பெயர் ஈழத்தமிழராலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே பாமினியைச் சேர்ப்பதால் பயன் அதிகம் கிடைக்கும்.--Kanags \உரையாடுக 21:31, 12 அக்டோபர் 2011 (UTC)
- கனக்ஸ் அவர்கள் கூறியது போல் பாமினியே அதிகம் பயன்பாட்டிலுள்ளது. எனினும் இரண்டிற்குமிடையில் ஒரு சில எழுத்துக்களே வேறுபடுகின்றன. இரண்டும் இணைக்க வேண்டிய தேவை இல்லை என்றே எண்ணுகின்றேன். பாமினியை இணைத்தால் ரெங்கநாதன் விசைப்பலகைப் பாவனையாளர்களும் அதனை இலகுவாகப் பயன்படுத்த முடியும். --சிவகோசரன் 06:05, 13 அக்டோபர் 2011 (UTC)
- நன்றி சிவகோசரன், கனக்ஸ். இதற்கான வழுவை ஸ்ரீகாந்த் பதிந்துள்ளார். விரைவில் உருவாக்கித் தருவதாக ஜுனைத் கூறியுள்ளார். பின்வரும் ஆவணங்களை பாமினி விசைப்பலகைக்கு ஆதார ஆவணங்களாகக் கொடுத்துள்ளோம். - [1] [2]. பாமினி அறிந்தவர்கள் இவை முறையானவையா என்றொருமுறை சரிபார்க்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 08:10, 13 அக்டோபர் 2011 (UTC)
- ஆவணங்களில் சில தவறுகள் இருப்பதாகத் தான் தோன்றுகிறது. 'க்ஷ' எழுத்து இருப்பதாகத் தெரியவில்லை. 'ஸ்ரீ' தவறாகும். 'ஸ்ரீ' க்கு '=' பயன்படுகின்றது. மேலும் 'ரூ, ழூ' க்கு முறையே '&, *' உம், 'ஜு,ஜூ' முதலிய வடமொழி 'உ, ஊ' க்களுக்கு முறையே '{, _' உம் பயன்படுத்தப்படுகின்றன. 'தூ, நூ, ணூ..' போன்றவற்றுக்கு அரவை நீட்ட '}' பயன்படுகின்றது. --சிவகோசரன் 10:56, 13 அக்டோபர் 2011 (UTC)
- Translate wiki தளத்தில் சோதனைக்காக பாமினி நிறுவப்பட்டுள்ளது. அங்கு கணக்கு உருவாக்கி விட்டு, my preferences > internationalation language ”தமிழ்” என்று தேர்வு செய்தால் தட்டச்சுக் கருவி தோன்றும். அதைப்பயன்படுத்தி பார்த்து. தேவைப்படும் மாற்றங்களை இங்கு பட்டியிலிட்டுத் தரும்படி வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:54, 14 அக்டோபர் 2011 (UTC)
நன்றி சோடாபாட்டில், எனக்கு பாமினியில் எழுதிப் பழக்கமில்லை, நேரடியாக திஸ்கி சென்று அங்கிருந்து ஒருங்குறிக்கு மாறினேன். மயூரன், உமாபதி போன்றவர்களிடம் கேட்கலாம்.--Kanags \உரையாடுக 10:16, 14 அக்டோபர் 2011 (UTC)
- மன்னிக்கவும், எனக்கு பாமினி விசைப்பலகையோ ரங்கநாதன் விசைப்பலகையோ பழக்கம் இல்லை, ஒலியியல் முறையையே பயன்படுத்துகிறேன் இங்கு வேறு யாரவாது உதவக்கூடும். ஒருமுறை தமிழ் எழுத்துரு உள்ள Prolink இரக விசைப்பலகை ஒன்றைக் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் இருந்து வாங்கியிருந்தேன் ஆயினும் தரக்குறைவாகத் தயாரிக்கப்பட்டதாலோ என்னவே வெகுவிரைவில் பழதடைந்து விட்டது. மீண்டும் அந்த இரகத்தை வாங்கவில்லை. --உமாபதி \பேச்சு 13:07, 14 அக்டோபர் 2011 (UTC)
- பயன்பாடு என்று வரும்போது ரெங்கநாதன் விசைப்பலகையை விட பாமினி வடிவத்துக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆயினும் ரெங்கநாதன் வடிவமே இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியம வடிவம் என்பதால் அதனையும் இணைக்க முயற்சிக்க வேண்டும். பாமினி வடிவமும் ரெங்கநாதன் வடிவமும் அடிப்படையில் ஒன்றுதான் எனினும் வேறுபாடுகள் நிறையவே உள்ளன. ரெங்கநாதன் வடிவம் முன்னேற்றகரமானது ஒருங்குறி நியமங்களோடு முழுமையாகப் பொருந்துவது. --மு.மயூரன் 10:27, 14 அக்டோபர் 2011 (UTC)
- கருத்துகளுக்கு நன்றி மயூரன். அடுத்த கட்டமாக ரெங்கநாதன் விசைப்பலகையை இணைக்க வழு பதிகிறோம். அதற்கு முன்னர் தற்போதுள்ள பாமினியை சோதித்து தேவைப்படும் மாற்றங்களைப் பட்டியிலிட வேண்டுகிறேன். மேற்குறிப்பிட்ட வழியைத்தவிர பின்வரும் இணைப்பு மூலமாகவும் சோதிக்கலாம்.
- http://lab.dhudhu.com/index.php?title=Tamil&action=edit&redlink=1&uselang=ta--சோடாபாட்டில்உரையாடுக 11:53, 14 அக்டோபர் 2011 (UTC)
- புதிய முறை நன்றாக உள்ளது. ஆமாம் பாமின்கே அதிக தேவை இருக்கும் என்று நினைக்கிறேன். சோடா, இதை வழு என்று கூறுவதை விட feature request என்று கூறுவதே பொருத்தம் என்று நினைக்கிறேன். --Natkeeran 13:21, 14 அக்டோபர் 2011 (UTC)
- விக்கிமீடியா பக்சில்லாவில் எல்லாம் “வழு” க்களே :-). bug என்பது அனைத்து மாற்றக் கோரிக்கைகளையும் குறிக்கும் பெயர்ச்சொல்லாகி விட்டது.--சோடாபாட்டில்உரையாடுக 13:25, 14 அக்டோபர் 2011 (UTC)
பின்வரும் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளன:
asterisk (shift+8) - ழூ
i - சங்கிலிக்கொம்பு - கை, சை...இல் வருவது
n - ஒற்றைக்கொம்பு - கெ, செ... இல் வருவது
N - இரட்டைக்கொம்பு - கே, சே... இல் வருவது
_ (underscore) - வடமொழி ஊ - ஜூ, ஸூ... இல் வருவது
= - ஸ்ரீ
{ - வடமொழி உ - ஜு, ஸு... இல் வருவது
} - பகுதி அரவு - நூ, தூ... இல் வருவது (நு க்குப் பின் இதனை பயன்படுத்தி நூ ஆக்கப்படும்)
--சிவகோசரன் 16:36, 14 அக்டோபர் 2011 (UTC)
Alzheimer's breakthrough: Bilingualism delays Alzheimer’s: Study
--Natkeeran 16:43, 14 அக்டோபர் 2011 (UTC)
R.Krishanasamynaidu.jpg" நீக்கம்,
ரா. கிருஷ்ணசாமி நாயுடு http://tawp.in/r/1fek ("R.Krishanasamynaidu.jpg" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். ...) அப்படிமத்தை மீண்டும் இணைக்கு வேண்டுகிறேன்.--−முன்நிற்கும் கருத்து Srithern (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- விக்கிமீடியா காமன்சில் நீக்கப்பட்டவற்றை இங்கு நம்மால் மீள்விக்க இயலாது. படம் பதிப்புரிமை சிக்கல்களால் நீக்கப்பட்டுள்ளது. காமன்சில் பதிப்புரிமை விதிகள் கடுமையானவை. உங்கள் “சொந்த ஆக்கம்” என்பதை சந்தேகித்து நீக்கியுள்ளார்கள். ஆனால் மறைந்த நபரின் படம் என்பதால் நியாயப் பயன்பாட்டுக் காரணம் கொண்டு இங்கு மீண்டும் பதிவேற்றி கட்டுரையில் இணைத்துள்ளேன். விக்கிப்பீடியாவின் பதிப்புரிமை விதிகள் - விக்கிப்பீடியா:பதிப்புரிமை--சோடாபாட்டில்உரையாடுக 12:31, 17 அக்டோபர் 2011 (UTC)
பட்டியல்
தமிழ்விக்கியில் கட்டுரையைத் தொகுக்கும் போது வரும் பட்டியலை உள்ளிடும் பகுதி வேலை செய்யவில்லை.--Kanags \உரையாடுக 02:36, 18 அக்டோபர் 2011 (UTC)
- எனக்கு வேலை செய்கிறதே கனக்ஸ். பிரச்சனையின் screenshots இருப்பின் என் அஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:00, 18 அக்டோபர் 2011 (UTC)
- சரி தான். ஒவ்வொரு நிரையிலும் முன்னுள்ள (;) என்பதை நீக்கினால் தெரிகிறது. ஆங்கில விக்கியில் பட்டியலுக்கு என்று ஒரு கருவி பயன்படுத்துகிறார்களே.--Kanags \உரையாடுக 04:08, 18 அக்டோபர் 2011 (UTC)
- நான் http://excel2wiki.net/ பயன்படுத்துகிறேன். இதில் பட்டியல் உருவாக்கல் எளிதாக இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 17:22, 19 அக்டோபர் 2011 (UTC)
இந்திய விக்கி மாநாட்டில் பிறநாட்டினர் கலந்துகொள்ள வாய்ப்பு
மும்பையில் நடைபெறும் இந்திய விக்கி மாநாட்டில் பிற நாட்டினர் கலந்து கொண்டு கட்டுரை வாசிக்க விக்கிமீடியா அறக்கட்டளை ஐந்து உதவித்தொகைகளை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்த விக்கிமாநாட்டுத் தலைவர் பிரணவின் மின்னஞ்சல் பின்வருமாறு. இந்தியரல்லாத தமிழர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
We are please to announce that WMF has granted a few scholarships (maximum of 5) for persons outside of India to attend WikiConference India 2011 (WCI 2011 - http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011). WCI 2011 will take place in Mumbai, India between 18-20 November 2011.
WCI 2011 is the first conference of its kind being held in India and is intended to become an annual national flagship event for Wikipedia/Wikimedia in the country. It is meant to provide a common platform for all Indian Wikimedians to meet and share their views, discuss challenges and exchange useful tips, best practices and other information.
Anyone residing outside of India is eligible to apply, but since this is an India specific conference they would need to demonstrate how by being present at the conference they can help the movement in India or improvement of indic languages. It is also necessary that those receiving the scholarship present something at WCI 2011.
The scholarships will cover Travel to and Fro Mumbai (economy), Accommodation (similar to what is being offered to Indian Scholars) and Visa fees (if you need one).
Please do make your application as strong as possible given that there are few scholarships and we expect a huge number of applications: http://meta.wikimedia.org/wiki/WikiConference_India_2011/Call_for_Participation
Kindly note given that there is less than a month to go and that Visa applications etc. will take time, we have set an application deadline of 23:59 IST on Saturday 22nd October 2011. Only applications received before the deadline will be considered.
Looking forward to hosting five of you at WCI 2011!
--சோடாபாட்டில்உரையாடுக 17:22, 19 அக்டோபர் 2011 (UTC)
கையெழுத்து உதவி
புகுபதிகை செய்த விக்கிபீடியர்கள், பேச்சுப் பக்கங்களில் நேரத்துடன் கூடிய கையெழுத்து இட, தொகுப்பு பெட்டிகளுக்கு மேல் உள்ள "நேர முத்திரையுடன் உங்கள் கையொப்பம்" என்ற பொத்தானை அழுத்தும் போது பெயரும் நேரமும் வருகின்றது. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது போல தானாகவே உரையாடல் பெட்டியையும் சேர்த்து உள்ளிட வழி உள்ளதா? நான் தற்போது இந்த உரையாடல் பெட்டியைப் பெற தனி விக்கி நிரலை " <sup>[[பயனர் பேச்சு:krishnaprasaths|உரையாடுக]]</sup> " பயன்படுத்துகிறேன். --கிருஷ்ணபிரசாத் 16:34, 20 அக்டோபர் 2011 (UTC)
- என் விருப்பத்தேர்வுகளில் > பயனர் தரவு > கையெழுத்தில் ”வெறும் கையொப்பம் மட்டும் (இணைப்பு இல்லாமல்)” என்னும் சதுர பெட்டியைத் தெரிவு செய்து விட்டு, அதற்கு மேலுள்ள பெட்டியில் முழு விக்கி நிரலை (நீங்கள் மேலே கொடுத்துள்ளபடி) சேர்த்துக் கொள்ளுங்க்கள். -[[பயனர்:krishnaprasaths]]<sup>[[பயனர் பேச்சு:krishnaprasaths|உரையாடுக]]</sup> இவ்வாறு செய்து சேமித்து விட்டால், பின் கையெழுத்துடன் தானாக உரையாடுக பகுதி சேர்ந்து வரும்--சோடாபாட்டில்உரையாடுக 16:29, 22 அக்டோபர் 2011 (UTC)
தமிழ் விக்கிபீடியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்
தீபத் திருநாள் வாழ்த்துக்கள் தமிழ் விக்கிபீடியா அன்பர்கள் அனைவருக்கும், தமிழ் விக்கி நூல்கள் சார்பாக தீபத்திருநாளாம் தீபாவளி வாழ்த்துக்கள். இப்படிக்கு,
|
60 வது இடத்தில் தமிழ்விக்கிப்பீடியா
- தமிழ் விக்கிப்பீடியா இன்று ஒரு முக்கியமான மைற்கல்லை தாண்டியுள்ளது. 282 மொழி விக்கிப்பீடியாக்கள் பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியா 60வது இடத்திற்கு வந்துள்ளது. இந்த அடைவிற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து விக்கிப்பீடியா அன்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை நாங்கள் கூட்டிணைப்பாக செயல்பட்டு பாதுகாப்போம். --P.M.Puniyameen 07:25, 23 அக்டோபர் 2011 (UTC)
- வாழ்த்துக்கள் தமிழ் விக்கிபீடியா, மற்றும் விக்கி அன்பர்களுக்கும் வாழ்த்துக்கள். அன்புடன், --Pitchaimuthu2050 13:42, 23 அக்டோபர் 2011 (UTC)
- அடைவில் மகிழ்வுறுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 15:13, 25 அக்டோபர் 2011 (UTC)
- மேலும் விரிவாக்கவும். அதோடு தவறாமல் உள்ளவற்றின் உள்ளகத்தை மேம்படுத்தவும் திட்டமிடுவோம். வணக்கம்≈03:40, 26 அக்டோபர் 2011 (UTC)த♥உழவன்+உரை..
விக்கி ஊடகப் போட்டி - சின்னம் + பதாகை
தமிழ் விக்கி ஊடகப் போட்டிக்கான சின்னம் மற்றும் பதாகைகள் உருவாக்க வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. தங்கள் கருத்துகளையும், சின்னம் + பதாகைக்கான பரிந்துரைகளையும் மேற்குறிப்பிட்ட பக்கத்தில் தர வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:04, 24 அக்டோபர் 2011 (UTC)
விக்கிப்பீடியா:இணைய_எழுத்துரு -- மீடியாவிக்கி நீட்சி நிறுவ ஆதரவு
விக்கிப்பீடியா:இணைய_எழுத்துரு மீடியாவிக்கி நீட்சி நிறுவ ஆதரவு வேண்டுகிறேன். அதே பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளேன். நன்றி ஸ்ரீகாந்த் 17:52, 24 அக்டோபர் 2011 (UTC)
- தமிழ் விக்கி நுட்பத்தில் இன்னொரு முன்னேற்றம். என் ஆதரவினை தெரிவித்துள்ளேன்--சோடாபாட்டில்உரையாடுக 18:03, 24 அக்டோபர் 2011 (UTC)
தீபாவளி வாழ்த்துக்கள்
இன்றைய தினம் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து விக்கி அன்பர்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். --P.M.Puniyameen 04:02, 26 அக்டோபர் 2011 (UTC)
- புத்தாடை புனைந்து பட்டாசு வெடித்து பட்சணங்களுடன் கொண்டாடி புதுத் திரைப்படங்களில் மகிழ்ந்திருக்கும் இனிய நண்பர்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !!
--மணியன் 04:25, 26 அக்டோபர் 2011 (UTC)
அரபி விக்கி மாநாடு
அக்டோபர் 20-22 தேதிகளில் கத்தார் தலைநகர் தோகாவில் ஒரு அரபு விக்கி மாநாடு நடைபெற்றது. கத்தார் அறக்கட்டளை அரபி விக்கிப்பீடியாவுக்கு உதவும் வழிவகைகளை ஆராய இது கூட்டப்பட்டிருந்தது. மொழிபெயர்ப்பு மூலம் (எந்திர மற்றும் மனித மொழிபெயர்ப்பு) அரபி விக்கிக் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கத்தார் அறக்கட்டளை திட்டமிட்டிருந்தது. பெரும் மொழிபெயர்ப்புத் திட்டத்தைத் துவக்கும் முன்னர் அவற்றால் விளையக் கூடிய நன்மை தீமைகளை கத்தார் அறக்கட்டளைக்கும் அரபி விக்கி சமூகத்துக்கும் விளக்க வேண்டுமென விக்கிமீடியா அறக்கட்டளை விரும்பியது. இதனால் தமிழ் விக்கிக்கு கூகுள் திட்டத்தில் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நமது கூகுள் திட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரை அம்மாநாட்டுக்கும் விக்கிமீடியா அறக்கட்டளையின் உலகளாவிய வளர்ச்சி அதிகாரி பேரி நியூஸ்டெட் அழைத்திருந்தார். நான் இம்மாநாட்டில் கலந்து கொண்டு அளிக்கை ஒன்று செய்தேன். பெரும் நிறுவனங்கள் விக்கிப்பீடியா பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதால் விளையும் தீமைகளை எடுத்துரைத்தேன். நமது கூகுள் அனுபவங்கள் அவர்களுக்கு ஒரு நல்ல கண் திறப்பாக அமைந்தன. --சோடாபாட்டில்உரையாடுக 05:03, 26 அக்டோபர் 2011 (UTC)