உள்ளடக்கத்துக்குச் செல்

பாப்பாரப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
42.106.185.94 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 17:15, 21 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பாப்பாரப்பட்டி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தருமபுரி
வட்டம் பென்னாகரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

12,174 (2011)

1,522/km2 (3,942/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/palacode

பாப்பாரப்பட்டி (ஆங்கிலம்:Papparapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பாப்பாரப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில், அதிகமாக விவசாயம் மற்றும் நெசவுத் தொழில் நடைபெறுகிறது. பாப்பாரப்பட்டியில் புதியதாக 40 இலட்ச ரூபாய் செலவில், தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதை, மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா சூலை 18, 2011 அன்று திறந்து வைத்தார். சுதந்திர போராட்ட தியாகி வள்ளல் மு.சின்னமுத்து முதலியார் பிறந்த ஊர். இந்த ஊர் அருகில் பாலக்கோடு தொடருந்து நிலையம் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

இப்பேரூராட்சிக்கு, கிழக்கில் தருமபுரி 16 கி.மீ.; வடக்கில் கிருஷ்ணகிரி 40 கி.மீ.; தெற்கில் சேலம் 90 கி.மீ. தொலைவில் உள்ளன.மாரண்டஹள்ளி 24 கி.மீ தூரத்தில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

8 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 42 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,014 வீடுகளும், 12,174 மக்கள்தொகையும் கொண்டது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. பாலக்கோடு பேரூராட்சியின் இணையதளம்
  4. Papparapatti Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பாரப்பட்டி&oldid=3721312" இலிருந்து மீள்விக்கப்பட்டது