கூம்புச் சுரப்பி
கூம்புச் சுரப்பி | |
---|---|
மனித மூளையில் பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பியைக் காட்டும் படம் | |
இலத்தீன் | glandula pinealis |
கிரேயின் | |
தமனி | மேல்ச் சிறுமூளைத் தமனி |
முன்னோடி | Neural Ectoderm, டயன்செஃபலானின் கூரை |
ம.பா.தலைப்பு | Pineal+gland |
Dorlands/Elsevier | g_06/12392585 |
கூம்புச் சுரப்பி அல்லது பீனியல் சுரப்பி (pineal gland) முதுகுநாணிகளின் மூளையில் காணப்படும் ஒரு சிறிய சுரப்பி ஆகும். இது மூன்றாவது கண் எனவும் அழைக்கப்படும். இது செரட்டோனினின் வழிப்பொருளான மெலட்டோனினைச் சுரக்கிறது. மெலட்டோனின் தான் நம் உடலில் விழிப்பு - துயில் சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது. இது பார்க்க சிறிய பைன் கூம்பை ஒத்திருப்பதால் பைனியல் சுரப்பி எனப் பெயர் பெற்றது. இது மூளையின் நடுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.
பரிமாணம்
இது மிகச் சிறியது. இதன் பரிமாணங்கள் (8x4x4)மி.மீ ஆகும். இதன் சராசரி எடை 120 கிராம் ஆகும்.
அமைவிடமும் அதன் பயனும்
இச் சுரப்பி குழந்தைகளில் பெரியதாகவும் வளர வளர சிறிதாகி கால்சியம் படிந்து போகும். ஆகவே X-கதிர் படத்தில் இது தெளிவாகத் தெரியும். மூளையின் ஏதேனும் ஒரு பகுதியில் புற்றுக்கட்டி வளருமாயின் மையப்பகுதியில் காணப்பட வேண்டிய சுரப்பி X-கதிர் படத்தில் நடுவிலகிக் காணப்படும்.