சாமரம்
Appearance
சாமரம் அல்லது சவுரி என்பது அரசர் மற்றும் தெய்வங்களுக்கு மரியாதைப் பொருளாக வீசப்படும் விசிறி ஆகும். இது ஈ முதலானவற்றை விரட்டவும் இதமான சூழலை ஏற்படுத்தவும் வீசப்படுகின்றது. இது கவரிமானின் மயிரில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.
இந்திய மற்றும் இந்தோனேசியா கலாசாரத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு சாமரம் வீசப்படுகின்றது. இந்து சமயம், தாவோயியம், மற்றும் பௌத்த கலாசாரங்களில் சாமரம் முக்கியம் பெறுகின்றது.[1]
மேற்கோள்கள்
- ↑ Shiva and Parvati பரணிடப்பட்டது 2007-09-12 at the வந்தவழி இயந்திரம், Rijksmuseum, accessed 14 November 2006