உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தமான் மல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தமான் மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum andamanicum) என்ற தாவரயினம், அந்தமான் தீவுகளின் அகணியத் தாவரயினமாக திகழ்கிறது. இத்தாவரயினம் அருகியத் தாவரமாக உள்ளதென கண்டறிந்துள்ளனர்.[1] இந்த காட்டுயினம் அணிகலனாக அழகு சார்ந்தவைகளுக்குப் பயனாகிறதென, 1981 ஆம் ஆண்டு அந்தமான் தீவுகளில் கண்டறிந்துள்ளனர்.[2] இவ்வினம்,1991 ஆம் ஆண்டில்தான், இத்தீவுகளில் இருப்பதாக பதிவுகள் செய்யப்பட்டன.[3] 'சோல் பே' (Shoal Bay) என்னுமிடத்தில் மேத்யூ, அபிரகாம் ஆகியோர் கண்டறியும் வரை, இத்தாவரயினம் குறித்து தெரியாது.[4] அதிக வெளிச்சமுள்ள இடங்களில், இது பசுந்தாவரயினமாக பசுமை மாறா காடுகளில் வளரும் இயல்புயையதாக திகழ்கிறது.

வேறு பெயர்கள்

[தொகு]

இச்சிற்றினத்தின் பெயரானது, வேறு/ஒத்த/இணைப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக, அதன் அமைப்பு, தோற்றம் கொண்டு இவைகளை இருவகைப் படுத்துகின்றனர். அவை 1) ஒருவகைய(Monotypic) ஒத்த பெயர்கள்,[5] 2) வேறுவகைய(Heterotypic) ஒத்த பெயர்கள்[6] என அழைக்கப்படுகின்றன. ஆனால், கீழ்காணும் வேறுவகைய ஒத்த பெயர்கள் மட்டும் உள்ளன.

  1. Jasminum balakrishnanii S.K.Srivast. (1990 publ. 1992)[7]
  2. Jasminum unifoliolatum N.P.Balakr. & N.G.Nair (1982 publ. 1983)[8]

பேரினச்சொல்லின் தோற்றம்

[தொகு]

அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும்.[9] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.[10]

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Notes on Jasminum andamanicum N.P. Balakr. & N.G. Nair (Oleaceae) from Andaman & Nicobar Islands, India
  2. Balakrishnan, N. P. & N.G.Nair (1979 publ. 1981) In: Bull. Bot. Surv. India 21: 215
  3. from two old collections by Dr King's Collector in 1894 and another one by C. E. Parkinson in 1914 deposited at CAL and PBL
  4. Mathew, S. P. & S. Abraham 1994: Jr. Bombay nat. Hist. Soc. 91. 160-161
  5. https://www.merriam-webster.com/dictionary/monotypic
  6. https://www.collinsdictionary.com/dictionary/english/heterotypic
  7. "Jasminum balakrishnanii". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Jasminum balakrishnanii". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  8. "Jasminum unifoliolatum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Jasminum unifoliolatum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  9. Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 220
  10. etymonline
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_மல்லி&oldid=4137537" இலிருந்து மீள்விக்கப்பட்டது